Home » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” – 21

 
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21


மித்ரன் ஸ்ரீராம்
Author:

“இரகசியம்” 

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

சங்ககிரியில் ஒரு மகளிர் கல்லூரியில் பயிலரங்க வகுப்பு எடுக்க போயிருந்தபோது – ஒரு மாணவி என்னிடம் “உங்கள் வெற்றியின் இரகசியம்” என்ன? என்று கேட்டாள்.

வெற்றிக்கான இரகசியங்கள் எவை என்று சொல்லப்போன எனக்கு வியப்பாக இருந்தது.  அதே நேரம் பெருமையாகவும் இருந்தது.

தயக்கமே இல்லாமல், தனக்குத் தோன்றிய ஒரு சந்தேகத்தை தைரியமாக கேட்கத் துணிந்த அந்த மாணவியின் ஆர்வம் பாராட்டுக்குரியது.

வெளியில் சொன்னால் இரகசியம் எப்படி இரகசியமாக இருக்கும் ? என்ற கேள்விக்கான விடையை இரகசியமாக வைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை.

“இரகசியம்” என்ற ஒரு சொல் – சாதனையாளர்கள் பலரும் இன்று வரை பயன்படுத்தி வரும் ஒரு சொல்லே.

சரித்திரம் சில விஷயங்களை “இரகசியமாகவே” வைத்திருக்கின்றது.  Egypt u Pyramid கள் ஏறக்குறை 4500 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டவை.  அதுவும் இன்றைய காலகட்டம் போல தொழில் நுட்பமும், உபகரணங்களும் முற்றிலும் அல்லது அதிகம் இல்லாத போதும் – ஒரு உலக அதிசயத்தை உருவாக்கிய விதம் எப்படி? என்ற கேள்வி இன்று வரை விடை இல்லாமல் “இரகசியமாகவே”  இருப்பது ஒரு விந்தை தான்.

அனைவருக்கும் ஒரு சிம்ம சொப்பனமாக இருந்த “Hitler”ன் மறைவு, தற்கொலை என்று வரலாறு பதிவு செய்திருந்தாலும் – அதன் உண்மைத் தன்மை எவருக்கும் தெரியாதது எதார்த்தம் என்று ஏற்றுக்கொள்ளமுடியுமா?  அதுவும் இரகசியமாகவே இருக்கின்றது.

அதுமட்டுமல்ல.

பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு குளிர் பானத்தின் சுவை, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சுவை, மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்தின் மைசூர்பாக்கின் சுவையின் பின்புலம், தலைமுறைகள் கடந்த பின்பும் தளராமல் இருக்கும் சில தலைவர்களின் புகழ், வேலை வாய்ப்புகள் அரிதாகிவிட்டது என்ற அங்கலாய்ப்புகளுக்கு இடையேயும் – சில துறை படிப்புகளுக்கு இன்றளவும் இருக்கும் “மவுசு” – என்று ஒரு பட்டியல், நீண்ட இரகசிய பட்டியல் என்பதே நிஜம்.

கடவுள் இல்லை என்று நாத்திகம் பேசும் ஒரு கூட்டத்துக்கும் சரி – கடவுளை சரண் கொண்டால் சாதிக்க முடியும் என்று ஆத்திகம் பேசும் சில கூட்டத்துக்கும் சரி – எப்படி மனிதர்கள் கூட்டம் கூட்டமாக கூடுகிறார்கள்?  இந்த ஜனக் கூட்டத்தின் இரகசியம் என்ன என்ற கேள்வியும் சிந்திக்கத் தூண்டுவதே இரகசியத்தின் சிறப்பு.

ஒரு வாழ்வியல் பயிற்சியாளராக நான் சொல்ல விழைவது இதுதான்.  இரகசியத்தின் சூட்சுமத்தை அறிந்துகொண்டால் –

“இரகசியம்” – வெற்றிப் பயணத்தின் வெளிச்சக் கீற்று

“இரகசியம்” – ஓய்வின்றி உழைப்பவனின் ஒற்றையடிப் பாதை

“இரகசியம்” – தளராத மனம் கொண்டவர்களின் தாரக மந்திரம்

“இரகசியம்” – உயர்வுக்கு உதவும் ஊன்றுகோல்

“இரகசியம்” – வாழ்க்கையை ஜெயிப்பவனின் வழிகாட்டி – என்று உணர முடியும்.

கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவர் தனக்கு ஒத்தாசையாக ஒரு குதிரையை வைத்திருந்தார்.  ஒரு நாள் ஒரு பணக்காரர் அவரிடம் வந்து “நான் இந்த பாதைக்கு புதுசு.  என் Car ஒரு சிறு பள்ளத்தில் இறங்கிவிட்டது.  அதை வெளியே எடுக்க வேண்டும்.  உங்ககிட்ட ஒரு குதிரை இருக்கு.  அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துவிடலாம் என்று ஊர் மக்கள் சொன்னாங்க.  எனக்கு உதவ முடியுமா? என்று கேட்டார்.

ரொம்ப பெரிய Car  என்று கேட்ட விவசாயியிடம் இல்லை சின்ன Car தான் என்றார் செல்வந்தர்.  விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களும் எடுத்துக்கொண்டார்.  குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் Car இருக்கும் இடத்துக்குச் சென்றார்.  Car சிக்கி இருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையுடன் பார்த்தார்.

கயிறை எடுத்து Car ல் கட்டி குதிரையோடு இழுப்பதற்கு தோதாக பிணைத்தார்.  கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே இருந்தார்.  பிறகு “மணி” இழு பார்ப்போம் ! என்று குரல் கொடுத்தார்.  குதிரை நகரவே இல்லை.  பின் “ரவி” இழு பார்ப்போம் ! என்றார்.  குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது.  சின்ன Car தான், சுலபமா இழுத்திடலாம்.  “ரகு” இழுடா ! என்றார்.  குதிரை ஒரு Inch கூட நகரவில்லை.  என் செல்லம் “ராஜா” நீயும் சேர்ந்து இழுடா ! என்றார்.  அவ்வளவுதான்.  குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது.  அடுத்த 5 வது நிமிடம் பள்ளத்திலிருந்து இஹழ் மேலே ஏறியது.  வெளியூர் காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார்.

மேலும் “ஐயா!  நீங்க ஏன் உங்க குதிரையை வேற வேற பேர் சொல்லி கூப்பிட்டீங்க?  எனக்கு புரியலை” என்று கேட்டார்.

விவசாயி சொன்னார் “என் ராஜாவுக்கு கண் தெரியாது.  தான் மட்டும் கஷ்டமான வேலையை செய்யப்போறோம்னு அது நினைச்சுட கூடாது இல்லையா?  அதான், அதுகூட இன்னும் 3 குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வைச்சேன்.  அதுக்கும் நம்பிக்கை வந்துருச்சு.  Car  யை வெளியே இழுத்திருச்சு”.  என் குதிரைக்கு நான் கொடுத்த அந்த “நம்பிக்கை” தான் இந்த Car I ஒற்றைக் குதிரையா வெளியே இழுத்த “இரகசியம்” என்றார்.

ஆம்!  மனிதருக்குள்ளும் இந்த குதிரையை போல மகத்தான சக்தி இருக்கின்றது.  பள்ளத்தில் இருக்கும் வாழ்க்கையை மேலே உயர்த்திக் கொள்வதற்கு சில இரகசியங்கள் உதவும்.  கண் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் குருடர்களாக இருக்கும் மனிதர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் இரகசியங்களின் பட்டியல் இதோ!

தடுமாற்றத்தில் இருக்கும் மனிதனுக்குள் இந்த தன்-மாற்றங்களை புகுத்தும்போது வெற்றியை நோக்கி அவன் தடம் மாற்றம் ஏற்படும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

உங்கள் சிந்தனைகளின் தரமே அனைத்தையும் தீர்மானிக்கும். என்னால் முடியாது என்று எப்போதும் சொல்லாதீர்கள்.  ஜெயிப்பதற்காகவே ஜெனித்தவன் என்ற மனோபாவம் உங்களுக்குள் மலரட்டும்.  Positive Thoughts மட்டுமே உங்களுக்குள் இருந்து உற்பத்தி ஆகவேண்டும் – என்பது ஒரு “இரகசியம்”

கனவென்ன, லட்சியமென்ன என்று முடிவெடுங்கள்.கனவுக்கும் லட்சியத்துக்கும் உள்ள வித்தியாசம் பெரிது.  லட்சியத்தை எழுத்து வடிவில் எழுதி – அதை அடைய ஒரு யுத்தியை காணுதல், பாதையைத் திட்டமிடுதல், உருவாக்குதல், அதில் பயணித்தல் – என்பது ஒரு “இரகசியம்”

செயல்படுதல்.செயல் இல்லாத லட்சியம் பயனற்றது.  திட்டம் எப்படி முக்கியமோ – செயலும் முக்கியமே.  இரண்டும் இணையும்போது தான் அது “செயல்திட்டம்” எனும் சிறப்பைப் பெறும் – என்பது ஒரு “இரகசியம்”

கற்பதை நிறுத்தாதீர்கள்.நூலகங்கள், முன்னேற்றத்தை முன் மொழியும் புத்தகங்கள், வாழ்வியல் பயிலரங்கங்கள், இவை அனைத்தும் உங்கள் வெற்றியை அலங்கரிக்கும் அழகுகள்.  அவை அனைத்தையும் உங்கள் அறிவுக்கு முன்னால் அணிவகுப்பு நடத்துவது – என்பது ஒரு “இரகசியம்”

உறுதித்தன்மையும் கடின உழைப்பும் இரு கண்களாக வேண்டும்.வெற்றி என்பது குறுகிய தூர ஓட்டம் அல்ல.  உற்சாகமாகவே இருந்து, விட்டுக் கொடுக்காமல், விட்டு விடாமல், விலகியும் விடாமல், மனம் தளராமல் ஓடும் Marathon Race – என்பதை மனதுக்குள் பதியவைத்து நடப்பது – ஒரு “இரகசியம்”

ஆராய்ந்து அறிந்து கொள்.அனுபவமே சிறந்த ஆசான்.  தவறுகளில் இருந்தும் கற்றுக் கொள்ளலாம்.  ஆராய்ச்சி ஒளி கொடுக்கும் – அனுபவம் வழி கொடுக்கும் – அந்தப் பயணம் வெற்றியைக் கொடுக்கும் – என்பது ஒரு “இரகசியம்”

நேர மேலாண்மையில் கவனம் தேவை.இலட்சியம் அற்ற மனிதர்கள், உங்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் இல்லாத பொருட்கள், இவற்றில் இருந்து முற்றிலுமாக விலகுங்கள்.  அல்லது விலக்குங்கள்.  இலட்சியங்களின் மீது கொண்டுள்ள Laser Focus, உங்கள் வளர்ச்சியின் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ளவர்களின் அண்மையும் – உதவியும் – வாழ்வின் தரத்தை உயர்த்தும் அம்சங்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது – ஒரு “இரகசியம்”

புதிய கண்டுபிடிப்புகளுக்கு அஞ்சுவது பேதைமை.வித்தியாசமாக இருங்கள்.  சராசரி மனித வர்க்கத்திலிருந்து மாறுபட்டு செயல்படுங்கள்.  எதிர்வரும் சோதனைகளையும், தடைகளையும் கண்டு நான் அஞ்சாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? – என்ற எதிர் கேள்வி கேட்டு செயல்படுவது – ஒரு “இரகசியம்”

மனிதர்களை வெற்றிகரமாக கையாளுங்கள்.வெற்றியாளர்கள் நண்பர்களை, கூட்டாளிகளை, சக மனிதர்களை எப்போதுமே நல்ல முறையில் வளப்படுத்தி, ஒற்றுமையோடு இருப்பார்கள்.  அனைவரையும் திறந்த மனதுடன், நட்போடு, நேர்மையாக – அதே நேரம் உறுதியாக கையாள்வது – வெற்றிக்கான இன்னும் ஒரு “இரகசியம்”

உண்மையாகவும் பொறுப்பாகவும் இருத்தல். உங்கள் அணுகுமுறையில் ஒரு உண்மைத் தன்மையும், நம்பகத் தன்மையும் இல்லாமல் இருந்தால் – மேலே சொன்ன அத்தனை இரகசியங்களும் அர்த்தமற்றதாக ஆகிவிடும்.  இந்த இரகசியங்களை அறிந்து செயல்பட்டால் தான் வெற்றி என்பது – ஒரு மகத்தான “இரகசியம்”

தன்னை ஆளுமைப்படுத்தவே ஒவ்வொரு மனிதனும் பிரபஞ்சத்தில் பிறந்திருப்பதாக – இத்தனை இரகசியங்களும் காத்திருக்கின்றன.  அவ நம்பிக்கை கொண்ட மனிதர்கள் கண்களுக்கு அது தெரிவதில்லை.

“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்ப்பவர் யார்? – என்ற கேள்விக்கு இரகசியத்தை அறிந்தவர்கள் பெயர்தான் அடிபடும் என்பதும் ஒரு “இரகசியம்” தான்.

“கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்” – என்ற பக்குவத்தை மனிதன் அடைய உதவுவதும் இந்த “இரகசியம்” தான்.

“அங்கும் இங்கும் அலைபோலே தினம் ஆடிடும் மானிடர் வாழ்விலே, எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் – என்று “இரகசியம்” அறிந்தவர்களால் மட்டுமே அறியவும் சொல்லவும் முடியும்.

செயல்படுங்கள்!  இந்த இரகசியங்களை உணர்ந்து செயல்படுங்கள்.  உங்கள் செயல்பாடுகள் உங்கள் எதிரிகளுக்குத் தெரியாத இரகசியமாக இருக்கட்டும்.  செயல்பட்டால் – வெற்றிக் கோட்டையின் கதவுகள் விரைவிலேயே உங்கள் கண் முன்னால்.

அதுமட்டுமல்ல,

“வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

“வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2018

புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு
வெற்றி உங்கள் கையில் – 58
வாசியுங்கள்! வாகை சூடலாம்
உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….
பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?
தன்னம்பிக்கை மேடை
காய்ச்சல்
மற்றவர்களோடு நெருங்கிப் பழக உதவும் யுக்திகள்
உடம்பும் – இலக்கும்
சிந்திக்க வைக்கும் சீனா
வீரத்திர விளையாட்டில் மகுடம் சூட்டிய மங்கை
தலைவலி
“வாழ நினைத்தால் வாழலாம்” – 21
முதுமையா? முதிர்ச்சியா?
உள்ளத்தோடு உள்ளம்