Home » Articles » நிதானமும் நீள் ஆயுளும்

 
நிதானமும் நீள் ஆயுளும்


அனுராதா கிருஷ்ணன்
Author:

நம்மை முறுக்கேற்றும் கடினமான உடற்பயிற்சிகள் நம் மூச்சை

வேகப்படுத்தி நம்மை நிதானமற்றவர்களாக ஆக்கிவிடும்.

நம் எண்ணம், சொல் மற்றும் செயலில் நிதானம் இருந்தால், நாம் நீண்ட காலம் வாழலாம்.  நம் எண்ணம் (மனம்) நிதானப்பட நாம் மூச்சை சீர்படுத்தினால் போதும். நம் சொல்லில் நிதானம் ஏற்பட நாம் மௌனம் பழகினால் போதும். நம் செயலில் நிதானம் பெறதியானம் செய்தால் போதும். ஆக, இந்த மூன்று நுட்பங்களையும் தகுந்த குருவின் வழிகாட்டுதலைக் கொண்டு கற்று கையாள்வது சிறந்தது. ஆக, அது பற்றிய விஞ்ஞானத்தை இனிப் பார்ப்போம்.

மூச்சு பயிற்சி: எளிய முறை உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் மற்றும் மூச்சு பயிற்சிகள் யாவும் நம் சுவாசத்தை சீர்படுத்தியும் நேர்படுத்தியும் நம் எண்ணம் அல்லது மனதில் நிதானத்தை கொண்டுவரலாம். இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்ன வென்றால், நம்மை முறுக்கேற்றும் கடினமான உடற்பயிற்சிகள் நம் மூச்சை வேகப்படுத்தி நம்மை நிதானமற்றவர்களாக ஆக்கிவிடும். ஆகவே, அவற்றின் பக்கம் போக வேண்டாம். இயல்பிலேயே நிதானம் கொண்டவர்களுக்கு எளிய முறை உடற்பயிற்சியும், யோக முத்திரைகளும் போதுமானது. சமநோக்கு பார்வையில் லாதவர்கள் நாடி சுத்தி பிராணயாமம் பயில்வது நல்லது. நம் மனக் குப்பைகள் காலியாக சுதர்சனக் கிரியா செய்வது சிறந்தது. ஆழ்ந்த மூச்சு இல்லாதவர்கள் பஸ்திரிகா மூச்சு பயிற்சி செய்யலாம். சோம்பேறிகளாக இருப்பவர்கள் உஜ்ஜை மூச்சு பயிற்சி செய்து சுறுசுறுப்பாகலாம்.  ஆக, நாம் மூச்சு பயிற்சி செய்வதால் நம் மூச்சானது ஆழமாகவும் நிதானமாகவும் மாறும். இதனால் நாம் நீள் ஆயுளுக்கு அடித்தளம் போடமுடியும்.

மௌனப் பயிற்சி: நாம் அதிகம் பேசுவதால் நம் பிராண சக்தி (உயிர்ச் சக்தி) அதிகமாக விரையமாகின்றன. நாம் அதிகம் பேசுவதற்குக் காரணம் நாம் அனேக முறைநமக்கு வெளியே உள்ளவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக நடக்க முயல்கிறோம். ஆனால், நாம் நம் உள் தன்மையை அனுசரித்து பேசும்போது தான் நாம் மற்றவர்களுடன் இணக்கமாக மாறுகிறோம். நாம் மௌனப் பயிற்சி மேற்கொள்ளும் போதுதான் நாம் நம் உள்ளே கவனிக்க ஆரம்பிக்கிறோம். அதன் பயனாய், நாம் யோசித்துப் பேசவும், சரியாக பதிலளிக்கவும் செய்கிறோம். அன்பு நண்பர்களே! நீங்கள் மௌனம் இருந்துதான் பாருங்களேன். நாம் சொல்லின் செல்வராவது திண்ணம். நாம் மாதத்தில் ஒரு நாள் அல்லது வருடத்தில் 15 நாட்கள் என்று மௌனம் பழகலாம். அப்புறம் மௌனம் பழகும்போது கை கண் ஜாடை காட்டுவதோ எழுதுவதோ கூடாது. நாம் வெளியே பதிலளிப்பதை நிறுத்தினால்தான் நமக்கான உள்ளேஇருக்கும் பதில்களை நாம் கேட்க முடியும். அதே சமயம் மௌனம் காலத்தில் உடற்பயிற்சி யோகாசனம், மூச்சு பயிற்சி மற்றும் தியானம் பழகலாம். அப்புறம் நல்லத் தூக்கமும் நமக்கு கிடைக்கும். அப்போது நமக்கு ஒன்று புரியவரும், நாம் ஆழ்ந்து தூங்குவதற்கு வெளியமைதி தேவையில்லை உள்ளமைதி இருந்தால் போதும் என்று.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்