Home » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” -20

 
“வாழ நினைத்தால் வாழலாம்” -20


மித்ரன் ஸ்ரீராம்
Author:

துரோகம்

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

மரத்தில் தொடங்கி இன்று மனிதன் வரை வளர்ந்துள்ள பரிணாம வளர்ச்சி.

ஓர் அறிவில் தொடங்கிய ஒரு பயணம் – ஆறறிவு வரை அழைத்து வந்திருக்கின்றது.

மெய்ஞான வளர்ச்சி மனிதம் சார்ந்தது என்றால், விஞ்ஞான வளர்ச்சி மனிதன் சார்ந்தது.  மனிதனின் வளர்ச்சி யார் சார்ந்தது என்பதோ  விஞ்ஞானத்துக்கும், மெய்ஞானத்துக்கும் விளங்காத புதிராகவே இன்றளவும் இருக்கின்றது.

மெய்ஞானமோ – மனிதன் இன்னும் “மனிதத்தையே” அடையவில்லை, அப்புறம் தானே இயற்க்கையை அறிவது” என்று பிரகடனப் படுத்துகின்றது.  விஞ்ஞானமோ மனிதனின் தற்காலம் – கற்காலத்தை விட சிறிதளவே முன்னேறி இருக்கிறது – என்று சிலாகிக்கிறது.

முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் முக்கியமான விஷயங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது “துரோகம்” என்ற வேதனையான விஷயமே.

சராசரி மனிதன் தொடங்கி, சாதனை படைத்த மனிதன் வரை சந்தித்தே வந்திருப்பது “துரோகம்” தான் என்பது அவர்களின் அனுபவமும், சரித்திரமும் சொல்லும் சான்று.

துரோகம்சுயநலபோரின் உச்ச கட்டம்.

துரோகம்அன்பில் கத்தி எறியும் எதிரி.

துரோகம்– நல் இதயத்தை கொல்லும் நஞ்சு

துரோகம்-செருப்பையும் மீறி காலில் குத்தும் முள்

துரோகம்-அன்பென்ற வேடமிட்ட அரிவாள்

அன்பிற்கும் உண்டு உடைக்கும் தாழ், அதற்கு பெயர் தான் துரோகம் என்றான் ஒருவன்.

என் தொலைகாட்சி நண்பன் ஒருவனின் அனுபவம், அரிதாரம் பூசிய ஒருவனின் போலி முகத்தை அமிலம் ஊற்றி கழுவியது போல் வெளிச்சமிட்டு காட்டியது.  நிர்வாகத்துக்கு நெருக்கமான என் நண்பனிடம் அதைவிட நெருக்கமாக நட்பு பாராட்டினான் கயவன் ஒருவன்.  நல்ல நட்பிற்குள் இரகசியங்கள் கூடாது என்று முட்டாள்தனமாக முடிவு எடுத்ததன் விளைவு, என் நண்பன் பற்றிய பல விஷயங்களை ஒன்றிற்கு பத்தாக நிர்வாகத்தின் முன் நீட்டினான் கயவன்.  மெல்ல மெல்ல அஸ்திவாரம் ஆட்டம் காணத் துவங்கியது.  நிர்வாகம் நண்பனின் மீது கோபம் கொள்ளுமளவு கொண்டு சென்றது கயவனின் சாமர்த்தியம்.  விளைவு – நாளை முதல் நீ பணிக்கு வரவேண்டாம் என்று நிர்வாகம் என் நண்பனை நிராகரித்தது.  என் நண்பன் வகித்த பதவி – பின் கயவனின் காலடியில்.  என்ன செய்வது?  “போலியான சிரிப்பு – துரோகத்தின் தலைவாசல்” என்று புரிந்துகொள்ள என் நண்பனால் கொடுக்கப்பட்ட விலை மிகவும் அதிகம் தான்.

விவாகரத்து மண வாழ்க்கைக்கு செய்யும் துரோகம் என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் முதியோர் இல்லம் பெற்றோரின் நம்பிக்கைக்கு பிள்ளைகள் செய்யும் துரோகமே.  சென்னை வளசரவாக்கத்தின் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சிசு யாருடைய துரோகத்தின் வெளிப்பாடு? –  சமூகம் சிந்திக்க வேண்டும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்