Home » Articles » மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்

 
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்


சுவாமிநாதன்.தி
Author:

தற்போது இருளில் இருக்கலாம்

இருளை நீக்கி ஓளியை உள்ளத்தில்

பரவ செய்வது தான் வைராக்கியம்.

வைராக்கியம் என்பது, உலகம் தரும் இன்பப் பொருட்களின் மீதான முறையற்றபற்றைநீக்குவது எனலாம். சிலர் வைராக்கியம் என்பதற்கு பிடிவாதம், வீம்பு எனத் தவறாக பொருள் கொள்கின்றனர். விவேகம் உள்ளவர்களுக்குத்தான் வைராக்கிய குணம் எளிதில் அமைகிறது. தான் நினைத்ததைச் சாதிப்பது அல்லது செயல்படுத்தியே தீர்வது என்று ஒருவர் கொள்ளும் மன உறுதி தான் வைராக்கியம் எனப்படும்.

என்னைக் கொன்று போட்டாலும், கொடிய புலிக்குகையில் தூக்கிப் போட்டாலும், அக்னியில்  தள்ளி எரித்தாலும், பணத்தைக் காட்டினாலும், கவர்ச்சியைக் காட்டினாலும், உயர் பதவிகள் வந்தாலும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசை காட்டினாலும் நேர்மையாகத்தான் இருப்பேன், கற்புநெறி தவறமாட்டேன், தவறு செய்ய மாட்டேன் என்கிற தீர்மானமே, மனஉறுதியே வைராக்கியம் ஆகும்.

மணமகன் குடிகாரன் என்று தெரிந்ததும், மணமேடையிலேயே மணமாலையை கழற்றி வீசிய மணமகள்கள் உள்ளனர். மணமகன் வீட்டில் கழிப்பறைவசதி இல்லையெனில் அந்த வரன் வேண்டாம் என்று தவிர்த்த மணமகள்கள் உள்ளனர். படிக்கும் காலத்தில் செல்போனில் நேரத்தை விரயமாக்க மாட்டேன் என்கிறமாணவர்கள் உள்ளனர். இவையாவும் மனஉறுதியே ஆகும்.

நாம் தற்போது இருளில் இருக்கலாம். இருளை நீக்கி ஓளியை உள்ளத்தில் பரவ செய்வதுதான் வைராக்கியம். சில ஏழைப் பிள்ளைகள் மிகப் பிரமாதமான மதிப்பெண்கள் பெறஅவர்களின் ஏழ்மையும் காரணமாகி விடுகிறது. இல்லாதவர்களுக்கு வைராக்கியம்தான் சொத்தாக உள்ளது. சோம்பல் நம் முன்னேற்றத்திற்கு “ஸ்பீட் பிரேக்கர்” ஆகும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்நிய நாட்டுத் துணிகளை எரித்து விட்டு வீட்டில் அனைவரும் கதராடையே அணிவோம் என போராட்ட தியாகிகள் முடிவெடுத்தனர். தேசப்பற்றின் காரணமாக புடவை, ரவிக்கை, கால்சட்டை, மேல்சட்டை, வேஷ்டி என எல்லாவற்றையும் கதரிலேயே தைத்து உடுத்தினர். அந்த வைராக்கிய நெஞ்சம் படைத்த தியாகிகள் வணங்கத்தக்கவர்கள்.

வைராக்கியத்தில் இரு வகை உள்ளது. தன் முடிவுக்குத் தன்னை மட்டுமே உட்படுத்திக் கொள்வது; மற்றொன்று, தன் முடிவுக்குத் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் உட்படுத்த விரும்புவது.

தகாத வைராக்கியம்:

வீட்டு செலவுக்குப் பணம் தர மாட்டேன், குடித்து விட்டுத்தான் வீட்டுக்கு வருவேன், முறையற்றஉறவை நிறுத்திக் கொள்ள மாட்டேன், லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிப்பேன், பொய் சொல்லி நிவாரணம் பெறுவேன், உடலைக் கொடுத்து வாய்ப்பைப் பெறுவேன் என்பதெல்லாம் தகாத வைராக்கியங்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்