Home » Articles » இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!

 
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!


செல்வராஜ் P.S.K
Author:

அழகிய வனங்கள் நாளுக்கு

நாள் பாலைவனமாக

மாறிக்கொண்டே வருகிறது.

இதன் பின் விளைவுகள் இனி வரும் காலங்களில்…….

இயற்கையைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் பாதுகாப்பானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வனங்கள் பெரிதும் உதவுகின்றன. மனிதன் மற்றும் இன்னபிற உயிரினங்கள் கோடை வெப்பம் தணிந்து அமைதியாக வாழ நிழல்களைத் தருகின்றன. இப்படி வனங்களால் (நமக்கு) உலகிற்கு ஏற்படும் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

உலகில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 30 சதவீத நிலத்தை வனங்கள் இயற்கையாகவே ஆக்கிரமித்துள்ளன. இவற்றின் அளவீடு என்னவென்றால் வட மற்றும் தென் அமெரிக்காவிற்கு இணையான 3000 மில்லியன் ஹெக்டேர் பரப்பைக் கொண்டதாகும்.

நாட்டில் 16 வகையான வனங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமானது வெப்பமண்டல உலர்ந்த இலையுதிர் வனங்கள் 38.8 சதவீதமும், வெப்ப மண்டல வனங்கள் மற்றும் உலர்ந்த இலையுதிர் வனங்கள் இந்தியாவின் மொத்த வனப்பகுதியில் 69.6 சதவீதம் ஆக்கிரமித்துள்ளது.

பரந்த இலையையுடைய வனங்கள் 55.5%

சால்மர வனங்கள்  16%

தேக்கு வனங்கள் 13%

மூங்கில்கள்   8.8

வெப்ப மண்டல முள் வனங்கள் 6.9 %

தூய்மையான ஊசியிலை வனங்கள் 6.3 %

வெப்ப மண்டல உலர்ந்த பசுமை மாறா வனங்கள் 0.1 %

மழை காற்று வெப்பம் குளிர் மற்றும் ஈரம் போன்ற தட்ப வெப்பங்களை வனங்கள் பாதுகாக்கின்றன. வனங்களிலிருந்து தாவரங்களும், விலங்குகளும் உணவைப் பெறுகின்றன.

காற்று மாசடைவதையும், மண் அரிப்பையும் கட்டுப்படுத்துகின்றன. மண்சரிவிலிருந்து குன்றுகளின் சாய்வைப் பாதுகாக்கின்றன. சுற்றுச்சூழல் சமநிலையை நிலைக்கச் செய்கின்றன.

நம் நாட்டில் 19% நிலங்கள் காடுகளாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 13% காடுகளாக உள்ளன. 1900-ஆம் ஆண்டில் உலகெங்கும் உள்ள மொத்த காடுகள் 700 மில்லியன் ஹெக்டேர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 1975-ஆம் ஆண்டு 2980 மில்லியன் ஹெக்டேர்கள் என்று இம்மதிப்பீடு குறைந்துள்ளது. மனிதனின் பல்வேறான நடவடிக்கைகளில் வனங்கள் அழிக்கப்படுவதை இயற்கை ஆர்வலர்கள் வன அழிவு என்று சொல்கின்றனர்.

நம் நாட்டில் 1.5 மில்லியன்  ஹெக்டேர்கள் வன இழப்பு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிறது. மரப்பொருள்களுக்கும், எரிபொருள்களுக்காகவும் மரங்களை அதிக அளவு வெட்டுவதாலும், வனத்தை விவசாய நிலங்களாக மாற்றுவதாலும், நம் நாட்டில் இது போன்ற பல செயல்களாலும் அழகிய வனங்கள் இருந்த இடம் தெரியாமல் அடியோடு அழிக்கப்படுகின்றன.

அதன் விளைவாக கரியமிலவாயுவை ஒளிச்சேர்க்கையின் முலம் உபயோகப்படுத்தாத காரணத்தால், கரியமில அளவு அதிகரிக்கின்றது. வன உயிரினங்ளின் வாழிடங்கள் அழிக்கப்படுவதால் பல்லுயிர் பெருக்கமும் உலகில் அழிந்து வருகிறது.

மானிடா காசுக்காக நாட்டை ஏன் நீ ஆக்குகிறாய் மாசு.

அழகிய வனங்கள் நாளுக்கு நாள் பாலைவனமாக மாறிக்கொண்டே வருகிறது. இதன் பின் விளைவுகள் இனி வரும் காலங்களில் மிகவும் கடுமையானதாகவும், முற்றிலும் மனித சமுகத்திற்கு எதிரானதாகவும் இருக்கும். என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இப்பூமியில் உள்ள இயற்கை வளங்களைச் சார்ந்து தான் மனிதனின் வாழ்க்கை உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பெரும் பங்கு வகிப்பவை மரங்களே. பல வெளிநாடுகளில் உள்ளதைப்போல, நம் நாட்டிலும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தினால் மட்டுமே இயற்கை வளங்களையும், வனங்களையும், மரங்களையும் அப்படியே இனிமேலாவது பாதுகாக்க முடியும். நம் மக்களுக்கு இந்த விசயங்களைப் பற்றிய பெரிய விழிப்புணர்வு எதுவும் இதுவரை வரவில்லை என்பது வருந்தத்தக்க ஒன்றாகும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்