Home » Articles » ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே

 
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே


அருள்துரை ந
Author:

குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் கடந்த 1986ம் ஆண்டு வகுக்கப்பட்டது. இதன்படி, எந்தத் தொழிலிலும் 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. உலகில் பல நாடுகளிலும் குழந்தைத் தொழிலாளர்கள்   முறை  இருந்து  வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகின்றனர். உலகமெங்கும் 5 வயது முதல் 14 வயது வரையிலான 15 கோடியே 80 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள், வீட்டு வேலை தவிர்த்து பிறவேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக ஐ.நா.சபையின் யுனிசெப் அமைப்பின் புள்ளி விவரம் கூறுகிறது.

இந்தியாவிலும்  14  வயதுக்குட்பட்ட தொழிலாளர்களை, குழந்தைத் தொழிலாளர்கள் என சட்டம் வரையறைசெய்துள்ளது. செப்டம்பர் 2009-ல் சுமார் 62 தொழில்களை அபாயகரமானதாக குறிப்பிட்டுள்ள இந்திய அரசு, 6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயக் கல்வி பெறவேண்டும். 8ஆம் வகுப்பு வரை பள்ளியில் இருக்க வேண்டும் என சட்டம் நிறைவேற்றியது.   இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு அப்போதைய (2015) மத்திய அரசாங்கம் பலத் திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதாவது, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தி வேலை செய்ய வைப்பதற்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அபாயம் இல்லாத குடும்பத் தொழிலில் ஈடுபடுத்தலாம். டி.வி. தொடர்கள், சினிமா படங்கள், விளம்பர படங்களில் நடிக்க வைக்கலாம். சர்க்கஸ் தவிர்த்த பிறவிளையாட்டுகளில் ஈடுபடுத்தவும் தடையில்லை. ஆனால் அவர்கள் பள்ளிக்கூட நேரம் முடிந்த பிறகு, இதை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  நேரம் முடிந்த பிறகு, இதை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் அது பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்யத்தக்க குற்றம் ஆகிறது. குழந்தைத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கினால் ரூ.50 ஆயிரம் அபராதம். வளர் இளம்பருவத்திற்கான வயது வரம்புக்கு புதிய இலக்கணம் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 14-18 வயது உடையவர்கள், அபாயகரமான வேலைகளைச்  செய்ய  தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவோர்மீது பின்வரும் தண்டனைகளையும் வகைப்படுத்தியுள்ளது:

முதல் முறையாக குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துகிறபெற்றோருக்கு தண்டனை கிடையாது. ஆனால் 2-வது முறையாகவோ, தொடர்ந்தோ ஈடுபடுத்தினால் அதிகப்பட்ச அபராதம் ரூ.10 ஆயிரம் ஆக இருக்கும். முதல் முறையாக குழந்தைத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால், அதற்கான குறைந்தப்பட்ச தண்டனை முந்தைய அளவான 3 மாதங்களில் இருந்து  6  மாதங்களாகவும், அதிகபட்ச தண்டனை 6 மாதங்களிலிருந்து    2 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டது. அப்போது அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை தற்போது  ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. 2-வது முறையாக குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை ஜெயில் என்றிருந்தது, தற்பொழுது ஒரு வருடம் முதல் 3 வருடம் வரை சிறைத் தண்டனையாக உயர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு மாவட்டங்களில் மறுவாழ்வு அளிக்க குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் மறு வாழ்வு நிதியம் உருவாக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய குழந்தைகளின் வாழ்வியல் முறை, அவர்களுக்கான உரிமைகளைப் பற்றி சிறிது ஆராய்ந்து பார்ப்பது சாலச்சிறந்தது. குழந்தைகளுக் கான உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பதற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை மற்றும் முன்னேற்றத்திற்கான உரிமை என நான்கு முக்கியமான உரிமைகள் குழந்தைகளின் நலனுக்காக வகுக்கப்பட்டு நடைமுறைகளில் இருந்தபோதிலும் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதன் பிரதிபலிப்புதான் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு மையம் மாவட்டங்கள் தோறும் அமைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்