Home » Articles » கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்

 
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்


கிரிஜா இராசாராம்
Author:

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்றை யவை- (குறள்: 400)

என்ற வள்ளுவரின் வாக்கினை மெய்பித்தவர் தாகூர் ஆவார். அழியாச் செல்வமான கல்வி அவரிடம் இருந்ததால் பொருட் செல்வம் என்ற அழியக்கூடியவைகளில் அவர் தம் கவனம்  செல்லவில்லை. ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பர்.  அத்தகைய கலைகளைக் கற்க அறிவு என்ற மகாசக்தி மிகவும் அவசியம். கற்கால மனிதன் இரண்டு கற்களை உரசினால் நெருப்பு என்ற ஒன்று வரும். அதன் மூலம் இயற்கை அன்னையின் மூலம் கிடைக்கும் பொருட்களை சமைத்து உண்ண வேண்டும் என்று சிந்திப்பதில் தொடங்கி இன்று விஞ்ஞானத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களை சமைத்து உண்ண வேண்டும் என்று சிந்திப்பதில் தொடங்கி இன்று விஞ்ஞானத்தின் மூலம் புதுபுதுவிதமான இயந்திரங்களை உருவாக்கி மனித வாழ்க்கையை நவீனமாக்கி கொண்டு இருப்பது வரை காலத்தைப் பற்றி சிந்தித்தால் மனிதனின் அறிவுத்திறன் நம்மை பிரமிக்க வைக்கிறது.  இதற்கு காரணம் கல்வியாகும்.      மனிதனின் உடம்பிற்கு முதுகெலும்பு இருப்பது போல் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படை கல்வியாகும். பூமி என்று தோன்றியது முதல் ஞானம் பெற்ற அறிவாளிகள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். குருதேவ் என்று அழைக்கப்படும் தாகூர் அவர்களின் வாழ்க்கை 1891 ஆம் ஆண்டு மே மாதம் 7 ம் நாள் தொடங்கி 1941 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 நாள் முடிவுற்றது. தன்னுடைய 80 வருட வாழ்க்கையில் அவர் செய்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை. இவரது தந்தை  பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த தேவீந்திரநாத் , இவரது  அன்னை சாரதா தேவி. இவர்களது 13ம் குழந்தையாக கல்கத்தாவில் ஜோதா சங்கர் மாளிகையில் பிறந்தார். சிறுவயதிலேயே தன் தாயை இழந்ததால் இவர் இவர்களுடைய உடன் பிறந்தவர்களாலும் செவிலியர்களாலும் வளர்க்கப்பட்டார்.

இவரின் 8ம் வயதிலேயே மிக அழகான கவிதைகளை எழுதியுள்ளார்.  தன்னுடைய 16 ஆம் வயதில் அவரது கவிதைத் தொகுப்பு பானுசிம்ஹா என்ற அவரது புனைப்பெயரில் பிரசுரிக்கப்பட்டது. இவர் கவிஞராக உருவாவதற்கு காரணம் நம்முடைய மகாகவி காளிதாசரின் பாடல்கள் ஆகும். 1877 ம் ஆண்டு இவர் எழுதிய பிகாரின் என்ற சிறுகதை பிரசுரமானது. இலக்கிய பாதையில் இவர் வளர்ச்சி அடைந்து வந்ததிற்கு இவருடைய சிறந்த கவிஞரும், தத்துவ ஞானியுமான மூத்த சகோதரர் திவிஜேஸ்ரநாத் என்பரும், சிறந்த கதாசிரியருமான இவருடைய மூத்த சகோதிரி  சுவர்ண குமாரி என்பவரும் ஆவார். 1873ல் கிழக்கு சசக்ஸில் உள்ள பப்ளிக் பள்ளியில் தாகூர் சேர்க்கப்பட்டார்.

ஆங்கிலேயர் உருவாக்கிய கல்வி முறையில் அவருக்கு ஈடுபாடு இல்லை. 1878 ம்  ஆண்டு பாரிஸ்டர் பட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழக கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அவர் அதில் ஈடுபாடு இல்லாமல் சேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்தையும் தானாகவே கற்று அதில் தேர்ச்சியும் பெற்றார்.  ஒருமுறை தன் தந்தையாருடன் சோந்து சுற்றுப்பயணம் சென்ற போது அமிர்தரஸில் தங்கி, சீக்கிய மதம் பற்றி பல்வேறு விபரங்களை ஆறுமாதத்தில் கற்று தெளிந்து சீக்கிய மதம் பற்றிய கட்டுரைகள் எழுதி சிறந்த கட்டுரையாளர் என்ற புகழைப்பெற்றார். 1888 ம் ஆண்டு பத்து வயதே ஆன மிருளானி என்பரைத் திருமணம் செய்தார். இவர்களுடைய குழந்தைகள் ரேணுகா தாகூர், ஜபீன்த்ராந் தாகூர், மீரா தாகூர், நதீன்ரநாத் தாகூர் மற்றும் மாதுரிலாத் தாகூர் ஆவர்.  இவரது தந்தையார் பெரிய நிலம் ஒன்றை வாங்கியிருந்தார்.  அந்நிலத்தில் பரிசோதனைப் பள்ளி ஒன்றை நிறுவ தாகூர் விரும்பினார்.

தாகூர் இயற்கையை மிகவும் விரும்பினார். இயற்கையின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடல்கள் மிக உண்டு என்பது அவருடைய கருத்து.பாரம்பரிய முறையான குரு, சிஷ்யன் முறையில் மரத்தின் நிழலில் அமர்ந்து கற்கும் முறையைச் செயல்படுத்தினார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்