Home » Articles » ஈர்ப்பும் ஈடுபாடும்

 
ஈர்ப்பும் ஈடுபாடும்


கோவை ஆறுமுகம்
Author:

ஒரு உளுத்து போன மரம். அதினுள்ளே புழுக்கள் உள்ளது. ஆனால் அதை தாராளமாக எடுக்க முடியாது. அங்கு வந்த ஒரு சிம்பன்ஸி குரங்கு அந்த புழுக்களை சாப்பிட பல வழிகளில் முயற்சித்தும் புழுக்களை சாப்பிட முடியவில்லை. ஒரு சிறிய துவாரம் மட்டும் தான் இருந்தது அதன் கையையும் நுழைக்க முடியவில்லை. கொஞ்சம் முயற்சிக்கு பின் சுற்றும் முற்றும் எதையோ தேடியது. ஒரு நீண்ட நாணல் குச்சி கிடைத்தது. அதை எடுத்து வந்து தன் வாய் எச்சிலை தடவி அந்த மர துவாரத்தினுள் விட்டு வெளியே எடுத்தது. கையையும் நுழைக்க முடியவில்லை.

என்ன ஆச்சரியம்! அந்த நீண்ட குச்சி முழுவதும் அந்த புழுக்கள் ஒட்டி கொண்டு வந்தது. அதை குரங்கு சாப்பிட தொடங்கியது. அதே போல் அந்த குச்சி உடைந்து போனதும் மீண்டும் வேறு குச்சியைத் தேடி கொண்டு வந்து முன்பு போலவே தன் எச்சில் பசையால் புழுக்களை சாப்பிட்டது இது அந்த குரங்கிற்கு இறைவன் கொடுத்த ஞானம். அதை தக்க சமயத்தில் சமயோசிதமாக பயன்பட்டு அந்த ஐந்து அறிவு ஜிவனுக்கு சமயோசித புத்தியை பயன்படுத்தும் போது, நமக்கு ஏன் பயன்படுத்த தெரியவில்லை.? அங்கே குரங்கின் வெற்றிக்கு காரணம்… பயமின்மை  பதற்றமின்மை, அவசரமின்மை மற்றும் நிதானம்.

இதில் இன்னொரு விசேஷ காட்சி என்னவென்றால், அதன் குட்டிகளும் இதே முறையை கையாள ஆரம்பித்ததுதான். ஆக.. சொல்புத்தி, சுயபுத்தி, சமயோசி புத்தி எல்லாமும் ஒரு சேர பயன்படுத்தும் குரங்கை விட. ஆறறிவு படைத்த மனித இனம் மட்டும் முடிவுகளில் குழப்பிக் கொள்கிறோம். இந்த சமயோசித புத்தி உணர்வை முடிவுகளுக்கு பயன்படுத்த வேண்டுமே தவிர ஒருவரை மட்டம் தட்ட பயன்படுத்த கூடாது. இன்று நம்மில் பலர் புத்திசாலித் தனமாக பேசுவதாக நடந்து கொள்வதாக நினைத்து தன்னை புத்தியற்றவர்களாகவும், பிறர் மனம் நோகும்படியாகவும் நடந்து கொள்கிறார்கள்.

சமயோசித புத்தி என்பது எப்படிப் பட்டது என்பதை உணர்த்தும் கதை.    ஒரு அரசன் நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும் ஒருவருக்கு 1000 பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்து  வந்து பலர் பொய்களை சொல்லி பார்த்தனர் .ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை! ஒரு நாள் கந்தல் உடை அணிந்து ஒரு ஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாக கூறினான். அரைகுறைமனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான் அரசே உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு வந்தேன்” என்றதும். அரசனுக்கு கோபம் வந்துவிட்டது.

“நீ பொய் சொல்கிறாய். நானாவது உனக்கு கடன் தர வேண்டியிருப்பதாவது என்று கத்தினான். உடனே ஏழை “அரசே நீங்களே ஒத்துக் கொண்டீர்கள் நான் சரியான பொய் சொன்னேன் என்று, எனவே போட்டி விதியின் படி 1000 பொற்காசுகளை கொடுங்கள்” என்றான்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்