Home » Articles » வெற்றி உங்கள் கையில் -57

 
வெற்றி உங்கள் கையில் -57


கவிநேசன் நெல்லை
Author:

மன அழுத்தம் தேவையா?

வீரன் நெப்போலியன். பல நாடுகளை வென்று சாதனை படைத்த சாகசத் தலைவர்.

“இந்த உலகத்தையே வெற்றி காண வேண்டும்” என்ற எண்ணத்தில் பல போர்களில் ஈடுபட்டு, வெற்றி சரித்திரத்தை நிலைநாட்டியவர்.

ஆனால், நெப்போலியனின் கடைசிக் காலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

வெற்றிகளையே குவித்த மாவீரர் நெப்போலியன், சாதனை சாகசத்தில் தோல்வியடைந்தார். அவரது மனம் மகிழ்ச்சியை விட்டுவிலகி வேதனைத் தீயில் வாடியது.

பிரிட்டிஸ் ராணுவம் அவரை சிறைபிடித்தது. பின்னர், ஆப்பிரிக்காவிலுள்ள தனிமை சிறையில் நெப்போலியனை அடைத்து வைத்தது. வீரமிக்க படை வீரர்களோடும், வெற்றி முழக்கத்தோடும் வாழ்க்கையை வளமாக்கிய நெப்போலியனுக்கு, இந்தத் ‘தனிமைச் சிறை’ மன அழுத்தத்தை உருவாக்கியது. கவலையோடும், கண்ணீரோடும் தனிமைச் சிறையில் வாடினார் நெப்போலியன்.

அப்போது அவரைப் பார்க்க வந்த ஒரு நண்பர், ஒரு சதுரங்க அட்டையை அவரிடம் கொடுத்தார்.

சதுரங்க அட்டையைக் கொடுத்த நண்பர் “இந்த சதுரங்க அட்டை உங்கள் சிந்தனையைக் கூராக்க உதவும். சிறப்பாக செயல்பட வைக்கும். உங்களது தனிமையைப் போக்கவும் இது உதவும். இதனை நன்கு பயன்படுத்துங்கள்” என்றுசொல்லி சென்றார்;.

சதுரங்க அட்டையை நண்பரிடமிருந்து வாங்கிய மாவீரன் நெப்போலியன், அதனை ஒரு மூலையில் தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் கவலையில் ஆழ்ந்தார்.

இருந்தபோதும், நெப்போலியன் மனதில் அடிக்கடி அவரது ‘வெற்றி மகிழ்வுகள்’ வலம் வந்து சென்றது. ஆனால், தனிமைச் சிறையின் வேதனையை எண்ணும்போது, மீண்டும் அவரால் செயல்பட முடியவில்லை. வெற்றிமீது அவர்கொண்ட கவனம் விலகிப்போனது. கவலையில் கண்ணீர் வடித்த மாவீரன் நெப்போலியன் உணவு உண்ணாமல் மெலிந்தார். கவலை அவரை கவ்வித் தின்றது. கொஞ்ச நாட்களுக்குள் நெப்போலியன் மரணம் அடைந்தார்.

நெப்போலியனின் மரணச் செய்தி உலகையே உலுக்கியது.

நெப்போலியன் மறைவுக்குப்பின்பு அவரிடமிருந்த சதுரங்க அட்டையை அந்த நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். பின்னர், அந்த சதுரங்க அட்டையை ஏலம்விட முடிவு செய்தார்கள். அப்போது, அந்த அட்டையை ஆய்வு செய்தவர்கள், சதுரங்க அட்டையின் நடுப்பக்கத்தில் இருந்த சிறிய குறிப்பைக் கவனித்தார்கள். அந்தக் குறிப்பில் சிறைச்சாலையிலிருந்து நெப்போலியன் தப்பிச் செல்வதற்கான வழிமுறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கான வழிமுறைகள் சதுரங்க அட்டையில் குறிப்பிடப்பட்டிருந் தும், மாவீரன் நெப்போலியனால் அதனை கூர்ந்து கவனிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நெப்போலியனின் மனதில் இருந்த மன அழுத்தமும், பதற்றத்தை உருவாக்கும் எண்ணங்களும்தான்.

வாழ்க்கையில் நாள்தோறும் மன அழுத்தமும், பதற்றங்களும் எல்லா மனிதர்களின் மனதிலும் உருவாகின்றன. “மன அழுத்தம் தனக்குள் இருக்கிறது” என்றஎண்ணம் கூட இல்லாமல் பல நேரங்களில் நம்மில் பலர் உலா வருகிறார்கள். மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை நாம் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்