Home » Articles » கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்

 
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்


அனந்தகுமார் இரா
Author:

ஒவ்வொரு துறையிலும் அதற்கான நுட்பங்கள் இருக்கின்றன. நிசர்கதத்தா மகராஜ் அதுபோல வாழ்வின் தத்துவ தொழில் நுட்பத்தை சமீபத்தில் சொல்ல கேட்டேன். நிஜத்தில் அவர் பேசி இருக்கிறார்.  அவர் கூறியதை எழுதியிருக்கிறார்கள். அவரை கண்டு கேட்டு அறிந்ததாக எழுதியிருக்கிறார்கள். அப்படி ஒரு வெளிநாட்டவர் எழுதியிருந்தார். கோயமுத்தூர் மாவட்டம் சின்ன வதம்பச்சேரியில் 1989 வாக்கில் உதைக்கத் தொடங்கிய கால்பந்தை இரண்டாயிரத்துப் பதினெட்டில் சென்னை கொடுங்கையூர் முல்லைப்பூ நகரிலும் பல நுட்பங்களோடு கற்றுக் கொள்வதைப் போல.. அதற்கான ஸ்டெட் STED- Shrm Children Talent and Education Development என்கின்ற ஒரு NGO உதவிக்கு வந்தது போல நிசர்கதத்தா மகராஜ்  (Nisargadatta magaraj) அவர்களது புத்தகம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அமைதியாக என்னிடம் இருந்தது அவ்வப்போது அதை புத்தக அடுக்குகளில் பார்க்கும் பொழுது இடம் மாற்றி அடக்குவதோடு சரி டாக்டர் வெய்ன் டையர் உடைய வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது (Being in Balance I principles for Creating Habits to match Your Desires) என்கின்ற  புத்தகத்தை வேறொரு காரணத்திற்காக வாங்க நேர்ந்தது. அந்த காரணம் என்னவென்றால் ராகூர் ரூமி ஐயா எழுதிய அதே விநாடி, இந்த விநாடி, அடுத்த வினாடி புத்தகங்களில் டாக்டர் வெய்ன் டையர் குறித்து பாராட்டி கூறப்பட்டிருந்தது தான்.

புத்தகத்தில் படித்த புத்தகம் பற்றி இப்படி கால்பந்து பாஸ் செய்யப்படுவது படிப்பில் படிகள் வழியே உயர்ந்தேன்.

அப்படியாக… படித்துக் கொண்டிருந்த பொழுது திருவண்ணாமலை நண்பரொருவர் கொடுத்திருந்த நிகர்கதத் மகராஜ் அவர்களின் புத்தகம் (I  AM THAT) மூலமாகத் தெரிந்து கொண்ட அந்த ஞானியினுடைய பெயர்.. டாக்டர் வெய்ன் டயர் (Dr. Wayne Dyer) இந்திய ஆசிரியர் கூறினார் என்று முன்மொழிந்துவிட்டு  சொன்னதன் வாயிலாக.. என்னை வந்தடைந்தது. என்னை நோக்கிப் பாயும் அம்பினைப் போல… கவனத்தை அது ஈர்த்தது. டையர் அவர்கள் மகராஜை ஆசிரியர் என்கிறார்.  உடனே இரண்டு புத்தகங்களையும் அருகருகே வைத்து அவர்தானா இவர் என்று சரி பார்த்துக் கொண்டேன். இரண்டு புத்தகங்களிலும் பரஸ்பரம் எந்த பக்கத்தில் தொடர்புடைய மேற்கோள்கள் காட்டப்பட்டு உள்ளன என்று குறிப்புக்காக  கொடுக்கப்பட்டுள்ள தாள்களில் பென்சிலால் குறித்து வைத்துக் கொண்டேன். அத்தகைய பொன்மொழி என்ன என்றும் கீழே எழுதிவிடுகின்றேன். ஏனெனில் இதற்கான பில்ட் அப் ஏற்கனவே மிக நீளமாக போய்விட்டது… சில நேரங்களில் பில்ட் அப் அவசியம்தான்.. என்னிடத்திலே இரண்டு வருடங்களாக இருந்த ஒரு புத்தகத்திற்கு புதிதாக வந்த வெயின் டையர் புத்தகம் தந்ததும் அதேதான் பில்ட் ஆப்.. இதற்கு மேலும் நகர்த்தாமல் தத்துவம்…

இருந்தால் மட்டும் அவசியம்

சும்மா இருந்தால்… என்கின்ற ஒன்றை மட்டுமே

நான் பரிந்துரைப்பேன்.

மலைமேல் ஏறுவதும், தியானம் செய்வதையும் கூட

நீங்கள் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை

சும்மா இருங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள்

என்று கூட நான் சொல்லவில்லை, ஏனெனில் நீங்கள்

யாரென உங்களுக்கே தெரியாது நீங்கள்

சும்மா இருங்கள்…

மேற்கண்ட  ஒன்பது வரிகளில் நிகர்கதத்த மஹராஜ் கூறியதை வெயின் டயர் தனது புத்தகத்தில் திரும்ப எழுதியிருக்கிறார். அமெரிக்க மேடைகளில் இலட்சக் கணக்கானவர்களுக்கு அவர் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் நிம்மதியைத் தருவதற்கும் சுய முன்னேற்றத்தை உண்டாக்குவதற்கும்… ஆக சிறந்த வழிமுறையாக இந்த தத்துவத்தை அவர் கூறியுள்ளார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்