Home » Articles » தமிழ் ஒரு பக்தி மொழி

 
தமிழ் ஒரு பக்தி மொழி


நம்பிராஜன் M
Author:

நம் அன்னைத் தமிழ் என்பது நம் அனைவருக்கும் பெருமை தரும் பேருண்மை. மொழியியல் வல்லுநர்கள் செம்மொழியென மொழிந்ததும், தகுதிகளைத் தன்னகத்தே தன்னிகரற்றுப் பெற்றதும் நம் அன்னைத் தமிழே! அதுமட்டுமன்று, அவற்றுக்கும் அப்பாற்பட்டு பல்வேறு பன்முகச் சிறப்புகளைக் கொண்டதாய் உள்ளது தமிழ்.

இலக்கணம், இலக்கியம், காவியம், ஓவியம், கட்டுரை, இயல், இசை, நாடகம், அறிவியல், தொழில் நுட்பம் எனப் பன்முகம் காட்டும் தமிழின் இன்முகத்தோடு இன்னொரு முகமும் உண்டு. அதுவே பாமரன் தொட்டு பரமன் வரையிலும் பரவசமடையைச் செய்யும் பக்தி. ஆம்! தமிழ் பக்தி மொழியாகவும் மிகச் சிறந்ததொரு பரிமானம் கொண்டுள்ளது.

இறையியல் குறித்த சிந்தனைகளைப் பரப்பும் நோக்கில் பிறமொழிப் பக்தி இலக்கியங்கள் விரவிக் கிடக்க, அந்த இறைப் பேராற்றலையே மலைக்கச் செய்த வல்லமை கொண்டதாகத் திகழ்கிறது நம் பக்தி மொழி தமிழ். கொண்டதாகத் திகழ்கிறது நம் பக்தி மொழி தமிழ்.

பக்தி என்பதை கண்மூடச் செய்யும் சடங்காக அல்லாமல் நம் அகக் கண்களைத் திறக்கச் செய்யும் கருவூலமாக அமைகிறது தமிழ்.

தமிழே! இயற்கையின் சுயமாய்த் தோன்றியவள் நீயே!

மயக்கமறஎங்கும் நிறைந்தோங்கி ஆதித்தமிழனாய் அவகரித்து, அகிலமெங்கும் பண்படுத்தி நீதி போதிக்கும் நாகரிகத் தமிழ் நீயே!

ஞானசம்பந்தனாய் இறைவியிடம் ஞானப்பால் உண்டவள் நீயே!

நாவுக்கரசரின் நாவில் நடம் ஆடியவள் நீயே!

சுந்தரத் தமிழாய் சுந்தரரை ஆட்கொண்டவள் நீயே!

திருவாசகத் தேன் அளித்த மணிவாசகராய் மலர்ந்தவள் நீயே!

திருமூலரின் திருமந்திரங்களாய் திகழ்ந்தவள் நீயே!

ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப்பிரபந்தமாய் நாவினிக்கச் செய்தவள் நீயே!

ஒரு வில், ஒரு சொல், ஓர் இல் எனக் காட்டும் கம்பனின் காவியமானவள் நீயே!

இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரத்தின் சிலம்பை அணிந்தவள் நீயே!

செய்குதம்பிப் பாவலரின் நபிகள் நாயகம் பதிற்றுப்பத்தந்தாதி நீயே!

வீரமாமுனிவர் தந்த தேம்பாவணியில் தேனாய்    இனித்தவளும் நீயே!

சித்தம் தெளிவிக்கும் சித்தர் பாடல்கள், தேகம் சிலிர்க்கச் செய்யும் தேவாரம், குமரகுருபரர் படைத்த மீனாட்சி பிள்ளைத் தமிழ், கந்தர் கலி வெண்பா, சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம், ஒளவைப் பிராட்டி அருளிய விநாயகர் அகவல், பாடப்பாட வாய் மணக்கும் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், ஆண்டாள் அருளிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெரும்பற்றப்புலியூர் நம்பி, பரஞ்ஜோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம், காரைக்காலம்மையார் எழுதிய அற்புத திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், திரு.வி.க. இயற்றிய முருகன் (அல்லது) அழகு ஆகியவற்றையெல்லாம் உருவாக்கிய தமிழே நீ ஒரு பக்தி மொழியே!

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2018

நிதானமும் நீள் ஆயுளும்
“வாழ நினைத்தால் வாழலாம்” -20
வாழ்வை அமைக்கும் நேயம்
திருக்குறள் விழிப்புணர்வு முகாம்
சிந்திக்க வைக்கும் சீனா
மனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்
பக்கவாதம்
மற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…
இயற்கையைப் பாதுகாப்போம்..! இந்திய தேசத்தை வளர்ப்போம்..!
ஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே
கல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்
ஈர்ப்பும் ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில் -57
கிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்
தமிழ் ஒரு பக்தி மொழி
தன்னம்பிக்கை மேடை
ஆசிரியம் என்பது தொழிலல்ல..! அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…!
உள்ளத்தோடு உள்ளம்