– 2018 – August | தன்னம்பிக்கை

Home » 2018 » August (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உள்ளத்தோடு உள்ளம்

    1947 ஆம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் வசந்தத்தை ஏற்படுத்திய தினமாகவே கருதப்பட்டு வருகிறது.

    அந்நாள் நம்முடைய புதிய சுதந்திர நாட்டின் உதய நாள். ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத்திகழும் நமது பாரத்தின் சுதந்திரம் என்பது, ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள், புரட்சியாளர்கள், போராட்டக்காரர்களின் வெற்றி என்று பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.

    நமது தாய்த்திரு நாடான இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நாம் அனைவரும் நம் தாய் மண்ணில்  சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மைக் காரணம் தேசியத் தலைவர்களும், போராட்ட வீரர்களுமே தான்.

    200 ஆண்டுகளாக, நாம் சொந்த நாட்டில் அந்நியர்களிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களின் பீரங்கிக்கும், துப்பாக்கிக்கும் பயப்படாமல் அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்தனர்.

    புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நிகழ்த்தி அந்நியர்களையே அச்சப்பட வைத்தனர். இவர்களின் அனைவரின் ஒரே நோக்கம்  சுதந்திரம் என்பதாகவே இருந்தது. சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தந்தவர்கள் இம்மண்ணில் ஏராளம். இந்த தியாக உள்ளத்தையும், அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தையும் இந்நாள் நாம் கொண்டாடி வருகிறோம். இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களின் நினைவைப் போற்றி கொண்டாடுவோம்.

    தேசபக்தியுன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்… வாழ்க இந்தியா… வளர்க பாரத திருநாடு….

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    சிகரம் எட்டு

    நொடிக்கு நொடி

    சப்தமிடும் கடிகார முட்களாய்

    இருந்து விடு.!

    புயல் காற்று வீசினாலும்

    பூகம்பமே வந்து பூமியே

    இரண்டாக பிளந்தாலும்

    தொடர்ந்து முயற்சி செய்.!

    அடர்ந்த காடுகள் எல்லாம்

    அதிசயமாக உருவானது தான்

    விழுந்த பழங்கள் எல்லாம்

    விதையாக எழுவதனால் தான்.!

    விழுந்து விழுந்து  எழுந்திடு

    அப்பொழுது தான் விழுவதன்

    வலிகளை உன்னால்

    உயர முடியும்.!

    விழுந்தே கிடந்து விடாதே

    விடை தெரியாத புதிராக

    பூமிக்கு பாராமாக .!

    நிலவில் தடம் பதித்தவரும்

    விண்ணுலவி வாழ்ந்தவரும்

    உன்னைப் போல் மனிதன் தான்..!

    ஒரு நாள் விடுமுறை என

    ஆகாய சூரியனும் நிலாவும்

    ஒரு போதும் இருந்ததில்லை

    ஒரு மனதாய் முயன்றவர்

    ஒருபோதும் தோற்றவர்

    இல்லை

    ஒரு துளி தண்ணீர் தான்

    ஒரு கணம் அந்த நிலவை

    தள்ளாட செய்கிறது..!

    இரவின் ஒளி

    பல தோல்விகளை

    வென்றே ஒளிர்கின்றது..!

    முடியும் என்ற மந்திரமே

    முடியாததையும் முடித்து

    காட்டும்..!

    வெற்றிப் பாதை விடாமல்

    துரத்தினாலும் வீழ்ந்தவன்

    என்பதை மறவாதே..!

    வானம் வசப்படும்

    மனம் வசப்படும்

    இனிய தருணங்களில்..!

    கவிஞர் மீன் கொடி

    கி. பாண்டிய ராஜ்

    திறமையே பெருமை தரும்

    மெர்வின்

    நம்மிடம் இருக்கும் திறமை, செயல்திறன், படைப்பாற்றல், சிந்திக்கும் சக்தி ஆகியவை சேர்ந்ததினால் தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ முடியும்.

    நம் வாழ்க்கை என்னும் நல்ல நிலத்தைப் பெற்று இருப்பதினால், திறமை என்ற பயிர் பசுமையாக விளைகிறது. அந்தப் பயிரைப் பாதுகாத்து உரம் போட்டு வளர்க்க வேண்டும்.

    அதிலேயே கவனம் செலுத்தி, அல்லும் பகலும் பாடுபட்டால் அருமையான அறுவடை செய்ய முடியும்.

    இது போல நாமும் திறமையைப் பெற்றிருப்பதினால் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி, செம்மை செயல்படும் போது தான் வெற்றியைப் பெற இயலும்.

    நம்மிடமுள்ள திறமையை தகுந்த முறையில் ஒழுங்காகவும், நேர்மையாகவும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை அறித்து முழுமையாக வெளிப்படுத்தி  மேன்மைப்படுத்துவதில் தான் வெற்றியே அடங்கியிருக்கிறது.

    நம்முடைய வாழ்க்கை ஓடும் நீராக இருக்க வேண்டும். அந்த நீர் பலருக்கும் பயன்படுத்தும் படியாக இருக்க வேண்டும்.

    காலத்திற்கு ஏற்றபடி திறமையை உயர்த்திக் கொண்டே செல்லும் பொழுது தான் வெற்றியைக் குவிக்க முடியும். நல்ல திறமைக்கு எப்போதும் சந்தர்ப்பம் காத்துக் கொண்டேயி ருக்கும். நேரமும் ஆற்றலும் இருக்கும் போதே அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நாம் வசதியாகவும், வளமாகவும் வாழ, திறமையையும், அறிவையும் பயன்படுத்த வேண்டும்.  வீசும் காற்றும், எழும் அலையும் எப்போதும் திறமையான மாலுமியின் பக்கமே இருக்கும்.

    வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் எல்லோரும் தங்களுடைய திறமையிலேயே உருவானவர்கள் தான். வெற்றியின் திறவுகோல் திறமையே, இதனை பயன்படுத்தாவிட்டால், எந்த சந்தர்ப்பம் வந்து காத்துக் கொண்டிருந்தாலும் பயன் இல்லாமல் போய் விடும்.

    திறமையை வளர்த்துக் கொண்டால் யாராக இருந்தாலும் நிச்சயமாக  பேரும் புகழும் செல்வாக்கும் பெற முடியும். இதற்கு  சரியான எடுத்துக்காட்டு ஓட்டல் அதிபர் ஓபராய், பள்ளிப்படிப்பு முடித்ததும் செருப்பு தைக்கும்  நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார்.

    அதன் பிறகு சிம்லாவில் உள்ள ஓட்டல் பணியாளரானார். தானே ஒரு ஓட்டலை தொடங்கினார். ஓட்டன் முன்னேற்றத்திற்காக இரவும் பகலும் பாடுப்பட்டார்.

    அன்பான உபசரிப்பும் பண்பான  வரவேற்பும் பலனாகக் கவர்ந்தது. அதன் பயன் அவருடைய ஓட்டலுக்கு வருபவர்கள் அதிகமானார்கள்.

    ஓட்டலே தன்னுடைய முழுத்திறமையையும் செழுத்தி மென்மேலும் விருத்திச் செய்தார். ஓட்டலை விரிவுப்படுத்துவதிலேயே அல்லும் பகலும் செலவிட்டார்.

    அதனுடைய பயன்  என்னவென்றால் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் பல ஓட்டல்களை திறம்பட நடத்திக் காட்டினார்.

    மனோத்தத்துவத்துறையில் வல்வரான ஆல்பர்ட் அட்லர் சிறுவனாக இருக்கும் பொழுது, தனக்கு கணக்குப் பாடம் வராது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

    வகுப்பை கவனிக்காமல் வெளியே பார்த்துக்  கொண்டிருந்தார். அச்சமயத்தில் கணித ஆசிரியர் ஒரு கணக்கைக் கொடுத்து போட சொன்னார். அவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் அவரால் அக்கணக்கை போட வழித் தெரியவில்லை. உடனே ஆசிரியர் உனக்கு கணக்கு வராது நீ ஒரு மடையன் என்று கூறினார். இது அட்லர் மனதில் பதியவில்லை. எப்படியும் கணக்கு பாடத்தில் முதன்மை  பெற வேண்டும் என்று முடிவெடுத்து திறமையை வளர்த்துக் கொண்டார்.

    ஒரு நாள் ஆசிரியர் கரும்பலகையில் கணக்கை எழுதினார். அதை எப்படிப் போடப் வேண்டும் என்று வகுப்பிருந்த எந்த மாணவர்களுக்கும் போட தெரியவில்லை. ஆனால் அட்லர் என்னால் இக்கணக்கை நன்றாகப் போட முடியும் என்று நம்பினார். உடனே எழுந்து நின்று நான் இந்தக்கணக்கை போட்டு காட்டுகிறேன் என்றார்.

    இதைக் கேட்ட வகுப்பில் இருந்த அத்துனை மாணவர்களும் சிரித்தார்கள்.  இவனாவது கணக்கைப் போடுவதாவது, இவனுக்கு தான் கணக்கே தெரியாதே என்று இலக்காரமாய் சிரித்தார்கள்.

    அட்லருக்கு வேகம் வந்துவிட்டது. எழுந்து போய் கரும்பலகையில் கணக்கைச் சரியாகப் போட்டு காண்பித்தார்.  எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அட்லர் தனக்கு கணக்கு போடும் அளவிற்கு திறமை வந்துவிட்டது. அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை  உறுதியாக நம்பினார்.  அதுவே அவருக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

    எந்த வயதிலும் தன்னுடைய திறமையை வளர்த்தக் கொள்ள முடியும், திறமையின் மேன்மைக்கு வயது ஒரு தடையில்லை. இளமையிலும் ஏற்றம் பெற முடியும், முதுமையிலும் முன்னேற முடியும், திறமையை வளர்த்துக் கொள்வதில் வயது வித்தியாசம் எதுவும் இல்லை.

    நம்முடைய திறமையை வளர்த்துக்  கொண்டு செயல்பட்டால், நிச்சயமாக வெற்றியுடன் வாழ முடியும்.