Home » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” -19

 
“வாழ நினைத்தால் வாழலாம்” -19


மித்ரன் ஸ்ரீராம்
Author:

பணம் பத்தும் செய்யும்

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

கடன் என்ற கட்டுமானத்தின் அஸ்திவாரமே “பணம்” தான்.  அஸ்திவாரம் உறுதியாக இருந்தால்தான் – அரண்மனைகளும், அரசாங்கங்களும்”.

பணம் குறித்து சில பாதைகள் தெரிந்தால் – பயணிக்க ஏதுவாக இருக்கும் என்று பல நண்பர்கள் பகிர்ந்து கொண்டது எனக்கு நிறைய நிறைவை தந்தது நிஜம்.

இப்போது “பணம்” என்ற பாதையிலே சற்று பயணிப்போம்.

தலைப்பைப்போலவே “பணம் பத்தும் செய்யும்”, பணம் பாதாளம் வரை பாயும், பணம் என்றால் பிணம் கூட வாயை பிளக்கும் – என்ற பல வழக்கு சொற்கள் வரிசையில் நின்று பணத்தைப்பற்றி பாடுவதை பார்க்கவும், கேட்கவும் முடிகின்றது.

பணத்துடனான பிரயாணம் தான் மனிதனுக்கு – பிறப்பில் இருந்து இறப்பு வரை –  என்ற காலகட்டத்தில், இன்று பிறப்பதற்கு முன்பே அது என்ன பானம் என்று தெரிந்து கொள்ளவே பணம் பயன்படுகிறது.  அது சட்டப்படி தவறு என்று தெரிந்த பிறகும், தருவதற்கும் பெறுவதற்கும் யாரும் தயங்குவதே இல்லை.

ஒரு ஓரமாக உண்டியல் வைப்பது முதல் – ஊர்த்திருவிழா நடத்த நன்கொடை என்பது வரை “பணம்” இல்லாத இடமே இல்லை.

என் சொந்த அனுபவத்தில் பல திரைத்துறை, கலைத்துறை பிரபலங்கள் – பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள, பேச, பெரிய தொகைதான் கேட்கிறார்கள்.  நிகழ்ச்சி அமைப்பாளர்களின் நிலைமைதான் பாவம்.

பல செல்வந்தர்களின் வீட்டில் அடுக்கி வைத்த ஐநூறும், இரண்டாயிரமும் கட்டுக்குள் இருந்தாலும் – வருமானம் கட்டுக்குள் இருப்பதில்லை.

பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வதைப்போல – பணம் பாதாளம்வரை தான் பாய்கின்றது.  அதனால் தான் அதை சில இடங்களில் இருந்து வெளியே தோண்டி எடுக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு அநாதை பிச்சைக்காரன் இறந்தபின், அவன் பிணத்தை எடுக்கும்போது பல லட்சங்கள் அவனது கோணிப்பையில் இருந்தது” என்ற துப்புரவு தொழிலாளர்கள் சொல்லியதாக பத்திரிகைகளில் செய்தி.

ஆக, அரசன் தொடங்கி ஆண்டி வரை “பணம் படுத்தும் பாடு” – கடினம் தான்.

“பணம்” – அன்னக் காவடியனையும் ஆசைக்காரன் ஆக்கும் அரக்கன்.

“பணம்” – ஆசைக்காரனை பேராசைக் காரனான ஆக்கும் அசுரன்.

“பணம்” – மனிதனின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் வெளிச்ச கீற்று.

“பணம்”  போ முகங்களை அலசிக் காட்டும் அமிலம்.

“பணம்” – உறுதியற்ற மனங்களை உரசிப் பார்த்து, தவறு செய்ய வைக்கும் தர்க்கம்.

எந்த கோணத்தில் அணுகினாலும் துன்பத்தையும், தவற்றையுமே துணைகொள்ளும் விதமாய் “பணம்” – நம் சிந்தனையை பதை பதைக்க வைக்கிறது. நல்லவைக்கு “பணம்” துனைவருமா? என்று கேட்டால், பல நேரங்களில் இல்லை என்ற பதில்தான் எல்லோர் காதுகளிலும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2018

இலக்கை எட்டு… இமயம் தொட்டு.!
ஈர்ப்பும்.. ஈடுபாடும்
சக்தியும் நீள் ஆயுளும்
இங்கு… இவர்… இப்படி… தன்னம்பிக்கைத் தமிழர்
மனநிலை மாறிய மனிதர்களால் மக்கிப்போன விவசாயம்
சிந்திக்க வைக்கும் சீனா….
இளம்பருவத்தினரை வளர்க்கும் முறை (Parenting of Adolescents)
செல்போன் வரமா? சாபமா?
தமிழா உனக்காக எல்லாம் உனக்காக
அப்படியென்ன குறைந்து போகும்…
நீயின்றி அமையாது உலகு..!
பக்கவாதம் Stoke
“வாழ நினைத்தால் வாழலாம்” -19
திறமையே பெருமை தரும்
சிறுகதை சிறப்பு அம்சங்கள்
கிடைத்ததும்… படித்ததும்…. படைத்ததும்… பிடித்ததும்.
வெற்றி உங்கள் கையில்- 56
இனியொரு விதி செய்வோம்….
தன்னம்பிக்கை மேடை
கல்லூரிக் கனவுகள்…! களையாத நினைவுகள்…!
உள்ளத்தோடு உள்ளம்