Home » Articles » சிறுகதை சிறப்பு அம்சங்கள்

 
சிறுகதை சிறப்பு அம்சங்கள்


கிரிஜா இராசாராம்
Author:

விருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பி அறா

ஆக்கம் பலவும் தரும் ( குறள் 552)

என்ற குறள், அன்பு நீங்காத சுற்றம் இருப்பின் ஒருவர்க்கு  அது மேன்மேலும் நிலைத்து வளரும் ஆக்கம் பலவற்றையும்  கொடுக்கும் என்ற கருத்தை விளக்குகின்றது. உறவுகளின் முக்கியத்துவம் பற்றி மகாபாரதம், இராமாயணம் போன்ற உயரிய இலக்கியங்களில் நாம் படித்து அல்லது கேட்டிருந்தாலும் சிறுகதைகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் வகையில் சில கதைகள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

தந்தை பற்றிய சிறுகதைகள்:

நூல் அறுந்த பட்டம், தந்தை ஒருவர், தன் மகனுடன் சேர்ந்து பட்டம் மிக உயரத்தில்  பறந்து கொண்டிருந்த போது, மகன் பட்டம்  மிக உயரத்தில்  பறக்க நாம் நூலை அறுத்து விடுவோம் என்றான்.  தந்தையும் அவ்வாறே செய்ய, பட்டம் சிறிதுதூரம் உயரப் பறந்து பின் கிழே விழுந்து விட்டது.  தந்தையார், அப்போது தன் மகனிற்கு ஒரு கருத்தைக் கூறினார். நூல் பந்து என்பது உறவுகள் ஆகும் நூல் அந்த பந்துடன் இணைந்திருந்த போது பட்டம் வேகமாகப் பறந்தது. ஆனால் நூலை அறுத்தவுடன் தன்நிலை தடுமாறி விழுந்துவிட்டது. இப்படித் தான் மனிதர்கள் தங்களது உறவுகளின் உதவியால் மிக உயர்ந்த நிலையை அடைந்து, பின் அவர்களின் உறவை மறந்துவிட, அவன் சிறிது உயரத்திற்கு போன பின், நன்றி மறந்தமையால் வாழ்க்கையின் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்ற கருத்தைக் கூறி உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

குழந்தையும் குடுவையும்-  குழந்தை ஒன்று ஒரு குடுவையில் கையை விட்டு விளயாடிக் கொண்டிருந்தது. அதன் தாயும் தந்தையும் வீட்டு வேலைகளில் கவனமாய் இருந்தனர். திடீரென்று குழந்தை குடுவையின் வாய்ப்பகுதியிருந்து தன் கையை வெளியே எடுக்க முடியாமல் அழுதது.  காரணம் குடுவையி ஒரு நாணயத்தைப் போட்டு அதை எடுக்க முயற்சித்த போது அதன் கை, குடுவையின் வாய்ப்பகுதியில் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியவில்லை.  குழந்தையின் பெற்றோர்கள் கையை வெளியே எடுக்க முயற்சித்தும் பலனில்லை.  பின் தந்தை தன் கையில் ஒரு நாணயத்தை எடுத்து குழந்தையிடம் கொடுப்பது போல் காட்டியதும் அதை வாங்கும் ஆவல் கையை நீட்ட நினைக்க அந்த குழந்தையின் கை வெளியே வந்துவிட்டது. தந்தை தன் மகளிற்கு வழிகாட்டும் செய்தி என்ன  என்றால், ஒரு தோல்வி வந்துவிட்டால், அதையே நினைத்து காலத்தை வீணாகப் போக்கிக் கொண்டிராமல் அடுத்து நிகழ்விற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

தந்தை மகன் பாசம் : மகள் ஒருவன் தன் வயதான தந்தையுடன் உணவகம் ஒன்றில் உணவகம் ஒன்றில் உணவு அருத்திக் கொண்டிருந்தான். தந்தை, தன் வயோதிகத்தின் காரணமாய் உணவு அருந்தும் போது தன்னுடைய உடையிலும் சாப்பிடும் மேஜை மீதும் சிந்தும் படி அருந்தினர். அதைப் பார்த்து அங்கிருந்த பலர் நகைத்தனர்.  ஆனால் மகன், அதைப்பொருட்படுத்துவது தான் தந்தைக்கு உணவை ஊட்டிவிட்டு, பின் கைகழுவும் அறைக்கு அழைத்துச் சென்று அவர் உடைகளைச் சுத்தம் செய்து வெளியில் அழைத்து வந்தார். அப்பொழுது அங்கிருந்து ஒருவர், அந்த மகனைப் பார்த்து, எள்ளி நகையாடியவர்களுக்கு உன் செயல் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கும் என்றார். வயதான தந்தை தற்பொழுது ஒரு குழந்தை மாதிரி. நாம் குழந்தையாக இருந்த போது தந்தை நமக்கு உணவை ஊட்டிவிட்டு, பின் நம் உடையில் உணவுப் பொருட்கள் ஒட்டியிருப்பதை சுத்தம் செய்திருந்தார்.  அதே போல் நாம் வளர்ந்த பின் குழந்தை போன்று வயோதிகத்தின் காரணமாய் மாறி இருக்கும் நம் தந்தைக்கு நாம் பணிவிடை செய்ய வேண்டும் என்ற கருத்தை விளக்குகின்றது.

தந்தை மகள் பாசம்: தந்தை ஒருவர் ஒரு உயர்ந்த பணியில்  சேர்ந்து அதிகமான பணம் மற்றும் செல்வாக்குடன் இருந்தார். அவருடைய மகளுக்கு கடுமையான நோய் ஒன்று பற்றிக் கொண்டது. பல உயரிய சிகிச்சைகள் செய்தும்  அவர் மகளை அவரால் காப்பாற்ற முடியாமல் அக்குழந்தை இறந்து விட்டது, அந்தக் கவலையிருந்து மீளமுடியாமல் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு அறை ஒன்றிலேயே இருந்தார்.  வெளியே வராமல், யாருடனும் தொடர்பு கொள்ளாமல் இருந்தார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment