Home » Articles » கிடைத்ததும்… படித்ததும்…. படைத்ததும்… பிடித்ததும்.

 
கிடைத்ததும்… படித்ததும்…. படைத்ததும்… பிடித்ததும்.


அனந்தகுமார் இரா
Author:

பரேய்யில் படித்த நாட்கள் பசுமையானவை. அந்தக் கதையை எழுத வேண்டும் என்றால் இளங்காலை பனியில் இருந்து தொடங்க வேண்டும். பத்து முதல் பதினைந்து அடி தூரம் தான் வழி தெரியும். சுமார் ஆயிரத்து முன்னூறு ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைந்து இருக்கலாம்.சென்ற ஆண்டு சுமார் பதினைந்து வருடம் கழித்து போய் பார்த்து விட்டு வந்தேன். சில பல கட்டிடங்கள் புதிதாக முளைத்துள்ளன. கட்டிடங்களுக்கு வெள்ளையடித்திருந்தார்கள். கதவுகளுக்கு முன்னால் கொசுகள் நுழையாத  வலைக் கதவுகள் அமைத்திருக்கின்றார்கள்.  அங்கே இருக்கின்ற கால்பந்து மைதானத்தைப் பார்க்க விரும்பினேன்.  எனது ஆய்வு வழிகாட்டியான பேராசிரியர் ஹரியானாவை சேர்ந்தவர்.  அவர் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அன்புடன் விருது கொடுத்து உடன் தற்போது கால் நடை மருத்துவ முதுகலை மற்றும் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்களைச் சந்திக்க அழைக்கச் சென்றார்.  அவர்களை சந்தித்த பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்ந்தேன். சமையல் செய்கின்ற ககன் என்ற உதவியாளர் இன்னும் பணியில் இருந்தார். அடையாளம் கண்டு கொண்டு மகிழ்ந்தார். அப்போது தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்த நாட்கள் காலை முதல் மாலை வரை படிப்புத்தான்.

காலை விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக செல்லும் போது கூட எதாவது சப்ஜெக்ட் எடுத்துப் பேசினால் உடன் வருகின்றவர்களுக்கு சுமையாகத் தெரியாது. நண்பர்களில் பலரும் தேர்வுக்குத் தயாராகி வந்ததால் எங்கெங்கும் காணினும் கல்வியடா டைப் படிப்புத்தான் ஆனாலும் விளையாட்டிற்கு குறைவு இல்லை.. பெங்காகளுடன் கால்பந்து விளையாடியிருக்கிறீர்களா? உடன் கொஞ்சம் கேரளத்துக் காளைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களில் அப்போதைக்கு வேறுயாரும் கூட கால்பந்தாட வந்ததாக ஞாபகம் இல்லை.

சது, பிஜு, கோயல், அனிஷ், என்று மலையாள நண்பர்கள் பெங்கா மாணவர்களின் உருவம் தான் ஞாபகம் வருகின்றது, பெயர் நினைவில்லை.  தினமும் மாலை வேளை ஆனேகமாக விடுமுறை நாட்களில் கொஞ்சம் நேரத்திலேயே தொடங்கிவிடுவோம். ஐ.வி. ஆர்.ஐ பெங்காகளுக்கு இந்தியாவில் தாங்கள் மட்டும் தான் கால்பந்தை குறித்து அனைத்தும் அறிந்தவர்கள் என்றுதான் நம்பிக்கை. அதில் அதற்கு சவால் விடும் வண்ணம் கால் பந்தின் மேலே உயிரை வைத்து கொண்டாடுவார்கள், மலையாளிகள். இவர்களுக்கிடையே குறுக்கே, நான் ஒருவன், கேரளா, மேற்குவங்காள மேட்ச் ஆடுவதில்லை. நல்ல வேலையாக நாங்கள் எல்லோரும் கலந்துதான் ஆடுவோம்.

ஆடும்போது பேசிப்பேசியே பெங்கா சொற்களும் நினைவில் நிற்கும் மலையாளம் தமிழ்  போலத்தான். களத்தில் இன்று நம் அணியில் இருப்பவர் நாளை எதிர் அணியில் இருக்கலாம். ஆராக்கியமான போட்டி நிலவியது. டீம் எடுக்கும் பொழுது..  கொஞ்சம்  வீக்காக இருப்பவர்களை கடைசியாக நிற்க வேண்டும்.  அதன் பிறகு இரண்டு கேப்டன்களை தேர்ந்து எடுப்போம். பிறகு ஒவ்வொரு முறைக்கு ஒருவராக ஆளுக்கு ஒருமுறை மாறி மாறி தனது டீமிற்கு கேப்டன் தேர்ந்தெடுப்பார் வலுவான பிளேயர் முதலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவார்.

நானும் கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் ஒருநாள் வந்தது. அப்பொழுதும் கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.  அந்த கிரௌன்ட் உன்னாவா என்ற இடத்தில் இருக்கிறது. காலம் பிப்ரவரி 2017. உன்னவா லக்னோ அருகே இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலம் அங்கே கிட்டத்தட்ட ஒரு மாதம்  இருக்க நேர்ந்தது. அப்பொழுது கால்பந்து விளையாட ஒரு பதினைந்து நாட்கள் சென்றிருக்கலாம்.  அதில் தான் என்னை கடைசியாக எடுத்தார்கள்,  புதுமையான அனுபவம் அது. சிறந்த ஆட்டக் காரனாக இருந்தாலும் கால்பந்தாட்டத்தில் அணி உணர்வு அவசியம். அதனால் புதிய ஆட்டக்காரரை கடைசியில் எடுத்தனர். வாழ்வும் அப்படித்தான் பல வேலைகளில் செய்து விடுகிறது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment