வலைத்தள வசதியை வளைக்கும் சிலரால்
வளைந்து போகிறது இவளின் கதை……..
புகைப்பட கருவியை புரட்டும் சிலரால்
புதைந்து போகிறது இவளின் நிலை……..
பணவெறியாளும் பசிவெறியாளும்
பகடையானது இவளது மானம்……….
ஆண்மை உருக்கொண்ட அரக்கர்கள்-சிலரால்
அழிந்து போனது இவளது பெண்மை……..
கண்காணிப்புக் கருவிக்கொண்டு இவளை
கல்லரையில் ஏற்றின கயவர் கூட்டம்…….
மரணத்தின் வாசலை காண்பிக்காமல்-அவர்களை
மண்ணித்து விட்டது நமதுச்சட்டம்………
தன் இச்சைக்கும் ஆசைக்கும்-இசையாததால்
இவளை ஈட்டியில் குத்தினான்-இதயமற்றவன்……..
காதல் என்னும் நாடகத்தில் இவளை
கயிற்றில் ஏற்றினான் கள்வனொருவன்….
பள்ளியில் பயிலும் சிறுமி இவளை
கொள்ளியில் ஏற்றினர் கொடியவர்கள்……
கருணையின்றி கன்னி இவளின்
துகிலை உரித்தனர் துன்மார்க்கர்கள்………
பெண்வெறிப் பிடித்த பேய்கள் எல்லாம்
சுதந்திரக் காற்றில் சுற்றி வர
மாசுகள் படியா மங்கை இவளோ
கதவுக்குப் பின்னால் கைதியாகிறாள்……..
சிகரத்தை அடைய சிந்திக்கும் இவளோ
தகரத்தின் பின்னால் தள்ளப்படுகிறாள்……..
இவள் அன்னையின் அழுகையும் அண்ணனின் கதறலும் செவிட்டுக் காதுகளை சேரவில்லை……….
ஆசையை மறுத்தால் அமிலத்தை எடுக்கும்
அரக்கக்கூட்டங்கள் மாறவில்லை………
இந்த இதழை மேலும்

August 2018





















No comments
Be the first one to leave a comment.