Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

சுதந்திர தின உரையாக மக்களிடையே நீங்கள் கூறும் அறிவுரைகளும், ஆலோசனைகளையும் பற்றிச் சொல்லுங்கள்.

பிரபாகரன் பெரியசாமி

ஆசிரியர் சேலம்.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு காலனி நாடுகள், ஒன்றன்பின் ஒன்றாக சுதந்திரம் அடைந்தன. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது, அதோடு பாகிஸ்தான் தனி நாடாகவும் பிரிந்தது.

ஜனநாயகம்: நம்மை நாமே ஆட்சி செய்வது தானே குடியரசு, அதுவும் ஆட்சியாளர்களை நாமே தேர்வு செய்வது தானே ஜனநாயகம்? இங்கு ஆட்சி செய்து கொண்டிருந்த வேறு நாட்டவரை வழியனுப்பிவிட்டோம். நம் நாட்டவரையே ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிட்டோம். ஆக ஜனநாயக முறையில் நடக்கும் குடியரசு நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த 71 ஆண்டுகள் சுதந்திர நாட்டில் நமது முன்னோர்கள் நினைத்தவை எல்லாம் நடந்து விட்டனவா? நமது நாட்டின் தற்போதைய நிலைமைதான் என்ன என்று பார்ப்போம்.

அரசியல் அமைப்பு: அரசியல் சாசனம் நம் மக்கள் அனைவருக்கும் அனைத்து நீதிகளும் வழங்கிவிட்டது. அதில சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி, ஆகியவற்றில் முக்கியமானது பொருளாதார நீதி. ஏனென்றால், பொருளாதார நீதி இல்லாமல் மற்ற நீதிகள் இருந்தும் பயனில்லை. ஒருவர் பட்டினியால் வாடும்போது அவருக்கு சமூக நீதியும், அரசியல் நீதியும் கிடைத்தால், அதனால் என்ன பயன்? இன்று இந்தியாவில் 25 சதமானம் மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவர்களின் தினசரி வருமானம் ரூ. 75 க்கும் கீழ். இந்த பரம ஏழைகளுக்கு வீடு, உணவு, உடை, மருந்து, கல்வி போன்றவை எப்படி கிடைக்கும். உலக உணவு நிறுவனத்தின் கணக்கின்படி, 118 நாடுகள் பட்டிணிப் பட்டியலில் 100 ஆவது நாடாக நாம் இருக்கிறோம். பங்களாதேசம் நம்மைவிட நல்ல நிலையில் 88 வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் நம்மைவிட மோசமான நிலையில் இருக்கின்றன.

பொருளாதார சுதந்திரம்: நம் நாடு, தனிமனித வருமானத்தில் உலகில் உள்ள 188 நாடுகளில் 123 வது நாடாக இன்று இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகள் சிலவும், ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் மட்டுமே நம்மை விட ஏழை நாடுகளாக உள்ளன. அதோடு கல்வியில் 168 வது நாடாகவும், மனமகிழ்ச்சியில் 122 வது நாடாகவும் இருந்து வருகிறோம். பள்ளிகளில் சேரும் பிள்ளைகளில் 50 சதவீதம் 8வது வகுப்பை கடந்து போவது இல்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை, பொறியியல் படித்த பட்டதாரிகள் குமாஸ்தா வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். பொறியாளர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாக கிடைக்கிறது. இது வருத்தத்திற்குரிய நிலை.

சுகாதாரம்: தூய்மையில் 180 நாடுகளில் நாம் 177வது இடத்தில் இருக்கிறோம். உலகில் மாசுபட்ட நாடுகளில் நமக்கு கிட்டத்தட்ட முதலிடம் என்று ஆகிவிட்டது. அதுவும் கான்பூர், பரிதாபாத், வாரனாவசி, கயா, பாட்னா, டெல்லி, லக்னோ ஆகியவை உலகிலேயே முன்னனி மாசுபட்ட நகரங்களாகத் திகழ்கின்றன. ஆறுகள் சாக்கடையாகிவிட்டன, நகரங்களில் கூட திறந்தவெளி சாக்கடைகள் எல்லா இடங்களிலும் தோன்றிவிட்டன. இந்தியாவில் 56.9 கோடி மக்களுக்கு கழிப்பறை இல்லை, 6.3 கோடி மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை, 24 கோடி மக்களுக்கு மின்விசிறி கூட இல்லை. ஆண்டொன்றுக்கு 20 லட்சம் குழந்தைகள் 5 வயது நிரம்புவதற்கு முன்னரே இறந்து விடுகின்றனர். பசி, பட்டிணி, வறுமை, சுத்தமில்லாத சூழ்நிலை, இந்த அவல நிலை உலகில் படித்த மக்கள் வாழும் எந்த நாட்டிலும் இல்லை!.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment