Home » Articles » போரிடாமல் ஜெயிப்பது எப்படி?

 
போரிடாமல் ஜெயிப்பது எப்படி?


ராமசாமி R.K
Author:

வெற்றியின் ரகசியம் எளிமையானது, சரியான விஷயத்தை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்தால் வெற்றி கிடைத்துவிடும்.

– அட்னனால்டு கிளாஸோ

தொழிலும், வர்த்தகமும், யுத்தம் போன்றது தானா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. ஆம்,  வணிகமும், யுத்தமும் ஒன்று தான். தொழிலும், யுத்தமும் ஒன்று தான். ஆனால் களங்களும், ஆயுதங்களும் மட்டும் வெவ்வேறானவை,  இரண்டிலும் போட்டிகள் உண்டு. போட்டி என்று வந்துவிட்டால் வெற்றியோ, தோல்வியோ ஏதோ ஒன்று நிகழ்ந்து தான் தீரும்.

இந்திய விடுதலைப்போரின் போது மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசை எதிர்த்து, ஒரு விடுதலை  யுத்தத்தைத் தொடங்கினார்  கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று  வருகுது”  என்று நாமக்கல் கவிஞர் குறிப்பிட்டபடி  அஹிம்சை, ஒத்துழையாமை, உண்ணாநோன்பு என்ற இந்த மூன்று ஆயுதங்களையும் வைத்து ஆங்கிலப்பேரரசை வீழ்த்திக் காட்டினார்.

அது போல இன்று தொழில்களிலும், வர்த்தகங்களிலும் போட்டிகள் யுத்தங்களாக மாறி விட்டன, இந்த யுத்தத்தில் போட்டியாளரை வீழ்த்தினால்தான்  வெல்லமுடியும். இதில் 1. பொறுமை காத்தல், 2. புத்தி சாதுர்யம், 3.புதிய யுக்திகள், 4.நிர்வாகத்திறமை, 5.எதிரி கணிக்க முடியாத வியூகங்கள், 6.சரியாக திட்டமிடல், 7.வேகமாக மற்றும் முறையாக செயல்படுதல், 8. சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துதல், 9.துல்லியமான அனுமானங்கள், 10. விளைவுகளை கணித்தல், 11.நிபுணர்களை பயன்படுத்திக் கொள்ளுதல்,  12.ஆழம் காண முடியாத அமைதி, 13. சகிப்புதன்மை, 14.நிதானம் தவறாமை, 15.மௌனத்தை கடைப்பிடித்தல், 16.கோபப்படாது இருத்தல்,17.பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல், 18. சந்தைப்படுத்துவதில் புதுமையை புகுத்துதல், 19. மாற்றி யோசித்தல், 20. பணியாளர்களை அரவணைத்து, அர்ப்பணிப்பு உணர்வை அதிகப்படுத்துதல், எல்லாவற்றிக்கும் மேலாக 21.வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துதல் போன்றவைகள்  ஆயுதங்களாக அமைகின்றன.

அனுபவசாலிகளின் கருத்துப்படி, “வியூகங்கள் முக்கியமானவை. தவறான வியூகம் அமைத்து தோற்றுப்போன படைகள் பல உண்டு.  சரியான முறையில் சந்தைப் படுத்துவதில் தவறி, தோல்வி கண்ட பெரிய நிறுவனங்களும் உண்டு. சந்தைப் படுத்துதலில் வெற்றி கண்டு, பெரிய நிறுவனங்களை வெற்றிகண்டவர்களும் உண்டு. இதில் தலைமை ஏற்பவர்களைப் பொறுத்து வெற்றி அமையும்.  லைமை சரியாக இருந்தால் ஒரு நிறுவனத்தில் எப்பொழுதும் இலாபத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்”.

கடலில் பெரிய அலை ஒன்று புறப்படும், ஆனால் கரைக்கு வராமலேயே பாதியிலேயே நின்று விடும், சின்ன அலை இன்னொன்று புறப்படும். அது இறுதி வரை வந்து கரையைத் தொட்டுப் பேசும். எந்த அலை கரை சேரும் என்று நாம் சொல்ல முடியாது, அது போல வணிகத்திலும், தொழிலும் எந்த நிறுவனம் ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் உற்பத்தி செய்யும் பொருளின் தரம் உயர்வாக இருந்தால் ஜொலிக்க முடியும். “குறைந்தபட்ச லாபம், அதிகபட்ச விற்பனை அளவு (Turnover)” என்பது வணிகத்திலே ஒரு தாரக மந்திரம்.

எந்த பெரிய சாதனைக்கும், மனதில் முதலில் தோன்றும்  முதல் எண்ணமும், கருத்தும்தான் விதையாக அமைகிறது. அந்த விதைக்குள் இருப்பது ஒரு ஆலமரம், அது வெளி வர, வளர, உயர தன்னம்பிக்கை என்ற நீரும், திட்டமிடுதல், செயல்படுதல் என்ற உரங்களும் தேவைப்படுகிறது.

“விதியை நம்பிக்கொண்டு  இருப்பவன் எதையும் செய்ய மாட்டான்” என்கிறது அர்த்த சாஸ்திரம், அப்படி இருப்பவனுக்கு போர் கிடையாது, போராட்டமும் கிடையாது, யுத்தமும் கிடையாது. யுத்தம் இல்லாத இடத்தில் வெற்றி எப்படிக் கிடைக்கும்.

ஒரு தொழில் அல்லது வணிகம் சிறக்க வேண்டும் என்றால் அந்த நிறுவன தலைமைக்கு புத்தி சாதுர்யம் இருக்க வேண்டும் . எந்த நேரத்தில் எதைத் தொட்டால் ஜெயிக்கும் என்ற தீர்க்கதரிசனம் வேண்டும். எப்போது இருப்பு வைக்க வேண்டும்? எப்போது விற்பனைக்கு கொண்டு வருவது? எப்போது உற்பத்தியை அதிகப்படுத்துவது? எப்போது நிறுத்துவது? எப்போது விரிவாக்கம் செய்வது? எப்படி விளம்பரப்படுத்துவது? எந்த வகையில் சந்தைப்படுத்துவது ? என கணிக்கும் திறமை இருக்க வேண்டும், உற்பத்தி அதிகரிக்க, அதிகரிக்க தரத்தையும் உயர்த்திக் கொள்ளும் சாதுர்யம், நிர்வாகத்திறமை, எதிர்போட்டியாளானகளின் வியூகத்திற்க்கு ஏற்ப மாற்று வியூகத்தை அமைப்பது, எப்போது தாக்குதலைத் தொடங்குவது ? எந்த நேரத்தில் அமைதியாக இருப்பது? எப்போது பின்வாங்குவது ? என்ற வியாபார வித்தகங்கள் இருத்தல் வேண்டும்.

வாடிக்கையாளர்களை பெருக்கிக் கொள்வது என்பது ஒரு கலை. ஒரு வாடிக்கையாளரை இழந்தால், நாம்  பத்து வாடிக்கையாளர்களை  இழக்க நேரிடும், வாடிக்கையாளர்களை கவருவதற்காக புதிய, புதிய உத்திகளை பயன்படுத்த வேண்டும், மற்றவர்கள் வியக்கும்படியாக விளம்பரப்படுத்த வேண்டும். புதிய வடிவங்களில் எல்லாத் தரப்பினரையும் கவரும் வகையில்  பெயர் வடிவமைக்கப் படவேண்டும். போட்டியாளர்களுக்கு எதிர்பாராத திருப்பத்தைத் தருவதைப் போல மாற்று யுக்திகளை பயன்படுத்துதல் வேண்டும். ஏழாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும். மூன்றாம் பார்வையும் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். உற்பத்திமுறை, விற்பனை முறை, சேவைப் பிரிவு இவைகளை போன்ற சரியான அமைப்புகளை உருவாக்க வேண்டும். உற்பத்திக்கு  முன்பாகவே விற்பனை என்ற யுக்தியை  பின்பற்ற வேண்டும். நிறுவனத்திற்கென்ற அடையாளக் குறியீட்டை ( Brand ) பிரபலப்படுத்த வேண்டும், ஒரு பொருளின் மதிப்பையும், லாபத்தையும் உயர்த்தும் முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் ( MVP – Maximizing value and profit).

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்