Home » Articles » ஈர்ப்பும்… ஈடுபாடும்

 
ஈர்ப்பும்… ஈடுபாடும்


கோவை ஆறுமுகம்
Author:

“அவன் வாயிலே விழாதே! அவன் எது சொன்னாலும் நடந்திடும்”. “ஏன் அவன் மகானா?”“மகான் இல்லே.. மகா மோசமானவன். கருநாக்குக்காரன் அவன் வாய் வெச்சா வௌங்காது என்றும், “ம்ம்.. வண்டியை எடுக்கும் போதே நெனைச்சேன். இப்படி நடக்கும்னு” என்றும். ஒருவர் எதையோ சொல்லப் போய் நடந்து விட்டால் உடனே அவரை மோசமாக கரித்து கொட்டுவோம். இங்கு யாருக்கும் கருநாக்கும் கிடையாது? சொல்லி நடந்தவர்கள் தீர்க்க தரிசிகளும் கிடையாது.

அப்படியென்றால்.. ஒரு சிலர் சொன்னது பலிக்க காரணம் என்ன? பெரிய சக்தியெல்லாம் கிடையாது. வெறும் எதிர்மறை எண்ண சக்திகள் தான் அப்படி முடிகிறது. ஒருவர் மற்றவைப் பற்றி வைத்திருக்கும் நல்ல அபிப்ராய எண்ணமோ தவறான அபிப்ராயம் எண்ணமோ, தீவிரமாகப் பதிவாகிவிட்டால். அவர் சொன்னால் எதுவும் (கெட்டதோ, நல்லதோ) நடக்கும் என்கிற எதிர்மறை, நேர்மறை எண்ணத்தை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம்.

பாகற்க்காய் கசக்கும். எனக்குப் பிடிக்காது என்ற எண்ணம் எதிர்மறையாக பதிவாகிவிட்டால் அந்தப் பாகற்க்காய் என்ன தான் நன்மையாக இருந்தாலும்  மனம் ஏற்றுக் கொள்ளாது. இந்த மன நிலைதான் வேலை,படிப்பு,திருமண வாழ்க்கை உறவுகள் என பலவிதங்களில் நடக்கின்றது.

பொதுவாக நம் மனம் எண்ணங்களை ஈர்க்கும் சக்தி கொண்டது. அதன் படி நாம் ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு விஷயத்தில் ஈர்க்கப்படுகிறோம். ஒரு சில விஷயங்களில் ஈர்ப்பு  சக்தி குறைவால் ஈர்க்கப்படாதிருக்கிறோம். உதாரணத்திற்கு ஒருவர் வேண்டாம் என்று ஒதுக்கிய துணி மற்றொருவரால் ஈர்கப்படுகிறது. அதே போல் அந்த ஈர்ப்பு காதலாக இருக்கலாம் அல்லது அன்பு, பாசம், பற்று, ஆசை மற்றும் காணும் பொருட்கள் என அனைத்து விதங்களிலும் ஈர்க்கப்படலாம். இந்த ஈர்ப்பு எண்ணம் எப்படி செயல்படுகிறது என பார்ப்போம். கிராமங்களில் சொல்வார்கள் பூமிக்கும் ஒரு ஈர்ப்பு உண்டு,சாமிக்கு ஈர்ப்பு உண்டு.என்று.

அறிவியல் பூர்வமாக மேலே எறியும் பொருள் கிழே நோக்கி விழுவது பூமியின் ஈர்ப்பு விசை என்கிறோம் அதே போல் எங்கோ திரியும் எண்ணங்களைத் தான் நம் மனம் ஈர்த்து கொள்கிறது. இதற்கு மன ஈர்ப்பு விசை எனலாம் அதாவது பிரபஞ்சத்தில் ஈர்க்கும் சக்தி நிறைந்து இருக்கிறது. அப்படியிருக்கும் போது எண்ணங்கள் மூலமாகத்தான் இந்த வகையான ஈர்ப்புகள் நிகழ்ந்தாக வேண்டும். ஏதோ ஒரு ஈர்ப்பு எண்ணத்தால் தான் நம்மால் எதையும் வியத்து,விரும்பி ஒரு செயல் செய்யப்படுகிறது.

அந்த ஈர்ப்பை தான் ஆசை,ஆர்வம், நாட்டம், வெறி என்றெல்லாம் கூறுகிறோம். “எண்ணபடி வாழ்வு” என்பது பிரபலமாகிவிட்ட வார்த்தை. உன் எண்ணம் எப்படியோ அப்படியே உருவாகிறாய். என்கிறது சரி..ஆனால்  வறுமையில் கஷ்டப்படுபவரும் வேலையின்றி கஷ்டப்படுபவர்களும்,விரும்பிய பொருட்கள் வாங்கும் விரும்புவர்களும் இதையெல்லாம் விட்டு விரும்பி தான் விரும்புவர்களும். யாரும் வறுமையிலும்,கஷ்டத்திலுமே இருக்க நினைக்க மாட்டார்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்