Home » Articles » கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?

 
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?


செல்வராஜ் P.S.K
Author:

தமிழர்களின் வீரவிளையாட்டான கபாடி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

தமிழக பாரம்பரியத்தின் கூறுகளைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும், தமிழக மண்ணின் பாரம்பரிய விளையாட்டான கபாடி தமிழகத்தில் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர்.

மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோர் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதற்குக் காரணம், தனியார் நிறுவனங்களின் விளம்பரம் மற்றும் பள்ளி அளவில் அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுவதுதான்.

கபடி  கிராமப்புற ஏழைகளின் மற்றும் ஏழை மாணவர்களின் விளையாட்டாக மட்டுமே மாறியதற்கு யார் காரணம்?

சமூகத்தில் தீண்டாமையை எதிர்க்கிறோம்.

விளையாட்டில் கபாடி தீண்டத்தகாத விளையாட்டாக இருப்பதை யாரும் கண்டுகொள்வதில்லை.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குமுன் சுமார் 2000 கிராமப்புற கபாடி கிளப்புகள் இருந்தன.

தற்போது இவை 500 கிளப்களாக குறைந்துள்ளன.

பல்வேறு நிறுவனங்களில் கபாடி கிளப்புகள்தான் அதிக உயர்வோடு உள்ளன.

தமிழகத்தில் ஈரோடு, கரூர், மதுரை,  நெல்லை மாவட்டங்களில் கபாடி கிளப்புகள் அதிகமாக உள்ளன. அதற்கடுத்து கோவை, திருப்பூரில் உள்ளன.

மற்ற இடங்களில் மிகக் குறைவாகவே உள்ளது.

மாவட்ட கபாடி கிளப்புகள் தமிழ்நாடு அமெச்சூர் கபாடிக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாநில கபாடி கழகங்கள் அகில இந்திய கபாடிக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

சாய் எனப்படும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அகில இந்தியக் கபடிக்குழுவை அங்கீகரித்துள்ளது.

அனைத்து விளையாட்டுகளின் நிர்வாகத்தையும் இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் கவனித்து வருகிறது.

10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கபாடி விளையாட்டு பிரபலம் என்ற போதிலும், ஒலிம்பிக்கில் கபாடி சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இந்திய விளையாட்டுகளில் நிர்வாக கோஸ்டி சண்டைகள் பிரபலம் என்ற நிலை கபாடியிலும் இருந்தது.

தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், மாநில அளவில், மாவட்ட அளவில், அகில இந்திய அளவில் கபாடி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவது எப்படி என்பதே கபாடி ஆர்வலர்கள் முன் உள்ள கேள்வி.

1994-ஆம் ஆண்டு ஜப்பானிலும், 1998-இல் பாங்காங்கிலும், 2002 பூசாவிலும், 2006 தோகாவிலும் நடைபெற்ற ஆசியப்போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.

1994,1998 ஆண்டுகளில் ராஜரத்தினம்,கணேசன்,பாஸ்கரன், முருகானந்தம் ஆகிய தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தனர்.

தமிழக வீரர் ராஜரத்தினம் இந்திய அணிக்குத் தலைவராகவே இருந்துள்ளார். பெருந்துறை வட்டம் குக்கிராமத்தைச் சேர்ந்த என். சுப்பிரமணியம் இந்திய – பங்களாதேஷ் போட்டியில் இந்திய அணி சார்பில் விளையாடியுள்ளார்.

இந்திய அரசு தமிழக வீரர் கணேசனுக்கு அர்ஜூனா அவார்டு (விருது) வழங்கி கொளரவித்தது.

2002,2006 ஆசியக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர்கூட இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயமே.

ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த என். சுப்பிரமணியம், கங்காதரன், முகமது இஸ்மாயில், பரிமளம், செந்தில்குமார், அண்ணாதுரை, வெள்ளியங்கிரி, குணசேகரன் , தங்கமுத்து ஆகியோர் தமிழ்நாடு அணிக்காக விளையாடியதன் காரணமாக ஸ்போர்ட்ஸ் கோட்டா சார்பில் ரயில்வே, வருமானவரித்துரை, ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் ஆகியவற்றில் வேலை பெற்றனர். இதெல்லாம் பழங்கதை.

கடந்த 10 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கபாடி விளையாட்டுக்கு, கபாடி வீரர் என். சுப்பிரமணியம் போன்றவர்களின் தீவிரமுயற்சியால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ். ரங்கசாமி அவர்கள் மாநில கபாடி கழகத்தின் தலைவராக இருந்த கால கட்டத்தில் பல்வேறான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்