Home » Articles » நாளைய பாரதம் நம் கையில்

 
நாளைய பாரதம் நம் கையில்


மணிமேகலை ப
Author:

குருடும் செவிடுமாய் இருந்த பெண்மணி ஹெலன் கெல்லரைப்பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம. அவர் சொல்வார் இன்பத்தின் ஒரு கதவு மூடும்போது மற்றொரு கதவுத்திறக்கிறது. ஆனால் மூடிய கதவையே உற்று நோக்குவதில் நமக்காகத் திறந்திருக்கும் கதவை நாம் கவனிப்பதே இல்லை. இக்கருத்தை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும்.

இந்தியாவின் உயிர்நாடியே கிராமங்கள்தான், என்று நாம் எழுதியும், பேசியும் வருகிறோம். ஆனால் அதுதான் உண்மை, ஆனால் அந்த உயிர்நாடியான பகுதிகள் வளமானதாக இல்லை என்று சிந்திக்கும் காலம் வந்துவிட்டது, வெறுமனே சிந்தித்துக் கொண்டியிருந்தால் மட்டும் போதாது அவற்றை செயல்படுத்த செம்மை படுத்த வேண்டிய பொறுப்பு இளைஞர்கள் கையில் மட்டும் தான் இருக்கிறது.

பொதுவாக இளைஞர்கள் என்றாலே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலையில்தான் உள்ளவர்கள். அவர்களின் இளமைத் துடிப்பான பேச்சும், செயல்பாடும் அப்படிதான் நம்மை நினைக்க வைக்கிறது. அவர்கள் வீட்டாரிடத்திலும், வெளி வட்டாரத்திலும் நம்பிக்கை பெறாமல் வெறும் சீர்திருத்தம் பேசுவதிலேயே மதிப்பிழந்து காணப்படுகிறார்கள். இந்த இளைஞன் பொறுப்புள்ளவன், எந்தச் செயலையும் முடிக்காமல் விடமாட்டான் என்ற நம்பிக்கையை முதலில் ஒவ்வொரு இளைஞனும் பெற வேண்டும், அதற்குப் பிறகு இந்த உலகம் இளைஞர்கள் கையில், அவர்கள் ஒன்று சேர்ந்து எதையும் சாதிக்கலாம்.

உங்களுக்கு, உங்கள் வீட்டிற்கு, உங்கள் ஊருக்கு என்ன தேவை என்பதைச் சிந்திக்க வேண்டும். சாலையில் குழியிருக்கிறதா? கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு சரிசெய்யுங்கள். மின்விளக்கு எரியவில்லையா? உடனே மின்துறை அதிகாரிக்குத் தெரியப்படுத்தி அதையும சரிசெய்யலாம்.; மழைநீர் தேங்கி குட்டையாகி அதில் கொசுக்கள், ஈக்கள் மொய்கிறதா? அந்தக் குட்டையை ஓடையாக்கி சரிசெய்யலாம். தண்ணீர் குழாய் உடைந்து நீர் வீணாகிறதா. நான்கு பேர் ஒன்றிணைந்து  அதை அடைக்கலாம்.

இளைஞர்களே நீங்கள எவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்களாக இருந்தாலும், அனுபவத்தால் குறைந்தவர்களே என்பதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். இதனால் பெரியோர்களின் அனுபவங்களையும், அவர்கள் கூறும் கருத்துக்களையும் நாம் ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும்.

நான்கு எழுத்துப்படித்து விட்டாலே நகரத்தில் மண்ஒட்டாத வேலை வேண்டும் என்ற மனம் போக்கு இளைஞர்களிடையே காணப்படுகிறது. இந்தப் போலியை ஆட்படாமல் இருப்பதே அவர்களுக்கு பெரும் வளர்ச்சிதான். இங்கு வேர்வை நதியில் குளித்தவர்கள் தான் வெற்றியின் சிம்மாசனத்தை எட்டியிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மைகளை நாம் படித்திருப்போம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்