Home » Articles » தனை மறந்ததேன்! தென்றலே!

 
தனை மறந்ததேன்! தென்றலே!


அனந்தகுமார் இரா
Author:

  1. பெட்ரோலியமும் குடும்ப விளக்கும்:-

இந்தியன் ஆயில் கார்பொரேஷன் குழுமத்தினர் மிகவும் திட்டமிட்டு செயல்படுகின்றவர்கள்.  இன்னும் நாப்பது வருடத்திற்குத்தான் பெட்ரோலிய பொருட்கள் வரும் என்று 2014 ல் கூறப்பட்டு இருக்கின்றதாம்.  அது ஒரு அறிவியல்பூர்வமான கணக்கீட்டின் அடிப்படையில்.  நாகராஜன் சார் பெட்ரோலிய கம்பெனியில் மாநில அளவிலான பணியில் இருக்கின்றார்.  இந்தியா உலக அளவில் மூன்றாவது மிகப்பெரிய பெட்ரோலியம் பயன் படுத்தும் நாடாக எப்படி வளர்ந்து வந்துள்ளது?  எந்த சிறிய மக்கள் தொகை கொண்ட, சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்ற நாடு மூன்றில் இருந்து நான்காம் இடத்திற்கு முன்னேறி உள்ளது என்பது குறித்தெல்லாம் மிகவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தோம்.  பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ‘பெட்ரோல் பாதுகாப்பு’ வாரம் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது.  அதற்கான மாநில அளவிலான கவிதை கட்டுரை ஓவிய போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்குவதற்காக அழைக்கப்பட்டு இருந்தோம்.  சென்ற இடத்தில் என்ன பேசுவது என்பதை…  போய் தயாரித்துக்கொள்வோம் என்று போன பிறகு…  அங்கே பாவேந்தர் பாரதிதாசனாரது குடும்ப விளக்கு கூட பேசப்பட்டது.

  1. காலம் முன்னும் பின்னும் செல்கிறது:-

பாரதிதாசனாரின் குடும்ப விளக்கிலே ஒரு மகத்தான காட்சி. கடந்த 1995-ல் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் திரு. சுகிசிவம் அவர்கள் பேசும்பொழுது எங்களுக்கு எடுத்து விளக்கிக் காட்டிய காட்சியாக இருக்கலாம்.  நினைவுகள் காப்பிரியா கார்சியல் மார்க்வெஸ் அவர்களுடைய தனிமையின் நூறு ஆண்டுகள் புத்தகத்தில் வதுவது போல கால கட்டுப்பாடுகளை கடந்து முன்னும் பின்னுமாக மங்கலாகப் பதிவாகி இருப்பதாக தோன்றுகின்றது.  இப்பொழுது அந்தப் பேச்சினைக் கேட்டு இருபத்தி மூன்று வருடங்கள் ஆகின்றது…  பெட்ரோலிய பொருட்களின் சிக்கன பயன்படுத்துதல் கூட்டத்தில் பல மொழி பேசுகின்ற பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு இருந்தார்கள்.  ஆனாலும் இந்த இருபத்தைந்து வருடப் பழைய கேள்வி ஞானம் இங்கே பொருந்தும் அதையே பேசிவிடலாம் என்று தோன்றியது.

  1. தன்னை கேலி செய்:-

பொதுவாக கூட்டங்களில் பேசுவதற்கு மெனக்கெட்டு ஆழமாகத் தயாரித்துக் கொண்டு செல்வது உண்டு.  “அதுவாகவே நீ ஆகி விடு” என்று சுவாமி விவேகானந்தர் கூறுவது போல, எந்த ஒரு பொருள் குறித்தும் ஆழமான இயல்பான புரிதலை உருவாக்கிக்கொள்ள அவசியம் ஏற்படுத்திக்கொண்டால் மேடைமீது நிற்கும் பொழுது நிச்சயத்தன்மையோடு கூடிய மனதைக் கவரும் சொற்கள் தானக பொழிந்து கொள்கின்றன.  இக்கட்டுரையைப் போல.  அறிமுகப்படுத்திய பேச்சாளர், ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பம், இப்பொழுது பேச வருகின்றது, என்று ஒருமையில்தான் உரிமையோடு அறிமுகப்படுத்தினார்.  தாராளமான பாராட்டுச் சொற்கள் பிரயோகிக்கப்பட்ட “ஊக்கமூட்டும் பேச்சாளர்” என்கின்ற அடைமொழியையும் பயன்படுத்தினார்.  தற்பெருமை பேசுவதும், தன்னை வியப்பதும், தன்னம்பிக்கையின் உச்சமாகப் பார்க்கப்பட வேண்டியதில்லை.  தன்னை நகைச்சுவைக்குள்ளாக்குவது, கேலி செய்து கொள்வது இரண்டும் எளிமையை நண்பர்களிடத்து எடுத்துச் செல்வதற்கு உதவும் என்று தோன்றியது.  அதனால் புகழ்ச்சிக்கு மயங்காத அல்லது ஊக்குவிக்காத சில சொற்பிரயோகங்கள் இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் பெட்ரோலிய சிக்கனம்! தேவை இக்கணம்!  என்பது போல தொழில்நுட்ப ரீதியிலான உரையும் அவசியம்.  இதில் எந்த அளவிற்கு நகைச்சுவை கலக்க இயலும்!  திரைப்படங்களில்… சில தமிழ்ப்படங்களில் வலிந்து திணித்த  காட்சிகளைப் போல இருந்துவிடக்கூடாது.  லியோ டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியரின் நாடகங்களே…  “செயற்கையாக இருக்கின்றன” என்று விமர்சனம் செய்திருந்தாராம் நம் பேச்சும் – செயற்கையாக இருந்துவிடக்கூடாது!  இப்படி உள்மனசுக்குள்ளே ஏராள எண்ண ஓட்டம் இருந்தது.

  1. தேடுதல் தேவை:-

குடும்ப விளக்கின் கதையோ… இப்படி ஓடுகின்றது வேடப்பன், நகைமுத்து இருவருக்கும் திருமணமாகி குழந்தைப் பிறந்த புதிது.  ஒரு நாள் இரவு மூவரும் அசந்து உறங்கிக்கொண்டு இருக்கின்றனர்.  தந்தை சற்று தள்ளி படுத்து உறங்குகின்றார்.  தாயும் சேயும் சற்றே இடைவெளியில் தூங்குகின்றனர்.  தாயுடைய கை பாதுகாப்பாக குழந்தையைத் தாண்டி கூடாரம் போல ஊன்றப்பட்டு உள்ளது.  தந்தை யோசிக்கிறார்.  அவருக்கு திடீரென ஏதேச்சையாக விழிப்பு வந்துவிட்டிருந்தது.  இந்தக்காட்சி குடும்ப விளக்கில் இருந்து எடுத்துப் பேசப்பட்டதை கேட்டுவிட்டு இருபத்தைந்து வருட இடைவெளியில், இப்பொழுது மீண்டும் மேடையில் பயன்படுத்தப்படுகின்றது.  இப்பாடத்திட்டம் இ.ஆ.ப. தேர்வு சிலபஸில் இருந்திருந்தாலும் பேசிய பின்னரே இந்த கட்டுரை சிறப்பாக அமைய வேண்டி, மீண்டும் புத்தகத்தைத் தேடிப்படித்து வேடப்பன், நகைமுத்து போன்ற பெயர்கள் சரிபார்த்து எடுக்கப்பட்டன.  வாழ்க்கை தொடர் கல்விக்கு நம்மை தயாரிப்பது இப்படித்தான் போலும்.  வீட்டில் இருக்கின்ற இருப்புச் சட்ட அலமாரியில் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் வருபது போல ஒரு ஏணி வாங்கி அவற்றில் புத்தகங்களை இரக வாரியாக அடுக்கி வைத்து படிக்க வேண்டும் தினந்தோறும் தட்டுப்படும் சந்தேகங்களை புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து கண்டுபிடித்து மனதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும், என்றெல்லாம் ஆசை.  இணையதளத்தில் குடும்ப விளக்கு Free pdf download மூலம் குறுக்கு வழியில் படித்துவிடடதாக மனசு குறுகுறுக்கின்றது.  எப்படியோ… கூடாரம் போட்டு இருக்கின்ற காட்சிக்கு வந்துவிட்டோம்.  குடும்ப விளக்கு இன்னும் கைக்கு கிடைக்கவில்லை.  ஒரு வேளை, வேறு எதாவது திருவாசகமோ, புதுமைப்பித்தன் கதையோ, புலிநகக் கொன்றையோ தேடும்பொழுது அகப்பட்டு, விளக்கு எறியலாம்.  அப்படித்தான் அ. முத்துலிங்கம் அவர்களது புத்தகத்தை கிட்டதட்ட பத்து ஆண்டுகள் கழித்துப் படித்துச் சுவைத்தேன், என்னமாய் எழுதுகின்றார்?! அவரது ‘யூ’ டியுப் உரை ஒன்றை சமீபத்தில் கேட்டேன்!  வாகன ஓட்டுனரும், தற்செயலாக கேட்டுவிட்டு தயக்கமின்றி சிலாகித்துப் பாராட்டினார்.  சரி… தூக்கத்திற்குப் போவோம்.  பிஞ்சுக் குழந்தையாய் இருக்கின்றதே! தாய் பருமனாக இருக்கின்றாள்… கோழி மிதித்து குஞ்சு சாகாதுதான்..  ஆனாலும் உருண்டுவிடப்போகின்றாள்! இப்போது அவளை எழுப்ப வேண்டுமே!  அழைத்தால்…  தூக்கம் குழந்தையின் தூக்கமும் தடைப்படுமே… என்று…  வேடப்பன் யோசிக்கின்றார்.  அங்கே…  அந்தத்தாய்… அணிந்திருந்து… களைந்திட்ட மலர்க் கண்ணி ஒன்று கிடந்தது…  அதிலொன்றை எடுத்து… தாயின் கன்னத்தின் மீது லேசாக படுமாறு வீடுகின்றார்…  பூங்கொத்து விழுந்தது…  தாய் தூக்கம் கலைந்தால் வேடப்பன் தனது யோசனை தெரிவிக்கலாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்