Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

சமீபகாலமாக குழந்தைகள் கடத்தல் பற்றிய செய்திகள் வெளி வந்ததாகவே இருக்கிறது, அது உண்மைதானா? அவ்வாறு உண்மை இருப்பின் எவ்வாறு நாங்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

பாரதி தேவி

அரச்சலூர், ஈரோடு.

திருவண்ணமலை மாவட்டம் போளுர் மாரியம்மன் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தவர்களை  கடுமையாகத் தாக்கினார்கள் ஊர் மக்கள். இதில் 65 வயது ருக்மணி உயிரிழந்தார் , அவருடன் சென்ற நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இது  அந்தப் பகுதியில் வன்முறைக் கும்பல்கள் நடத்திய மூன்றாவது படுகொலை.

குழந்தைகளை கடத்த முயற்சித்ததாக சந்தேகப்பட்டு தாக்குதல் நடத்தியது இங்கு மட்டுமல்ல; கர்நாடகவில் ஒருவரும் தெலுங்கானாவில் மூவரும் ஆந்திராவில் இருவரும் இதே நேரத்தில் படுகொலை செய்யபட்டிருக்கிறார்கள். கர்நாடகாவில் மட்டும்  90 பேர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது. ஆனால் இறந்தவர்கள், குழந்தை கடந்துபவர்கள் அல்லர். அவர்கள் அப்பாவிகள், சிலர் பிச்சைகாரர்கள். சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் நகரில்  இறந்தவர் ஒரு அரவாணி,  அவர் ரம்சான் பண்டிகையையொட்டி பிச்சை எடுக்க வந்தவர்.

அனைத்திற்கும் காரணம் வதந்தி. தீயசக்திகள் வாய் மொழியாகப் பரப்பி வந்த வதந்தி, இப்போது  உலகெங்கும்; வாட்ஸ்ஆப்பில் நெடிபொழுதில்  பரப்பப்படுகிறது. எதையும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரப்பழகாத மக்கள் அதிகம் வாழும் நம்நாட்டில் சமூக ஊடகங்கள் பெரிய ஆபத்தானதாக மாறிவிட்டன. சற்றும் உண்மையில்லாத அந்தக் குழந்தை கடத்தல் வீடியோ அறிமுகமாகி மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் பீதியடங்கவில்லை என்பதிலிருந்து மக்களின் அறியாமையும், பீதியைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை என்பதும் நன்றாகப் புரிகிறது.

எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்களை தாக்கிக் கொலை செய்தவர்கள் கொடிய குற்றவாளிகள் அல்ல. அவர்கள் அனைவரும் அந்தப் பகுதி பொது மக்கள். இவர்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு சாதாரண குடிமக்கள் ;   வன்முறை கும்பலில் இருக்கும் போது கொலை வெறியர்கள். இப்படி பொதுமக்கள் ஏன் மிருகத்தனமாக நடந்து கொண்டார்கள்? மிருகத்தனமான என்ற வார்த்தையைப் பயன்டுத்துவது கூட பிழை என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், மிருகங்கள் தேவையில்லாமல் ஒன்று கூடி சக மிருகத்தைத் தாக்கி காயப்படுத்துவது இல்லை. இது மனிதர்கள் மட்டுமே செய்யும் இழிவான செயல் என்பது தான் உண்மை.

கூட்டம், கும்பல் , ஆர்ப்பாட்ட கும்பல் , வன்முறைக் கும்பல்   என்று பல வித மக்கள் கூட்டங்கள்  பற்றி 1900  ஆண்டிலிருந்து  ஆய்வுகள்  பல நடந்துள்ளது. உலக புகழ்வாய்ந்த அறிஞர் சிக்மன் பிராய்டும் பல ஆய்வுகள் நடத்தியுள்ளார். உளவியல் அறிஞர் குஸ்தவ் ல போன்  என்பவர்  The crowd – A study of the  Popular  Mind  என்ற  நூலில்  கும்பலின்  நடந்ததைகளை விரிவாக சிந்தரிக்கிறார் .யாராக இருந்தாலும்  எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் , ஒருவர்  ஒரு ஆர்ப்பாட்ட கும்பலில் அங்கம்மாகி விட்டார் என்றால்  அவரது செயல்களை அவரது மனது கட்டுப்படுத்தாது, அந்தக் கும்பலில் ஒட்டு மொத்த மனதுதான் கட்டுப்படுத்தும்  என்று கூறியுள்ளார். வன்முறை கும்பலில் பல தலைகள் இருக்கும் ஆனால் மூளை இருக்காது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுமியைப் புலி அடித்துக் கொன்றுவிட்டது. அந்த ஊர் சாமியார்தான் இரவில் புலியாக உருவம் மாறி தனது இரத்த வேட்கையைத் தீர்த்துக்கொள்கிறான் என்று முடிவு செய்து அந்த சாமியார் குடியிருந்த கூரை வீட்டைப் பூட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்துக்கொல்லும் தருவாயில் மாவட்ட கலெக்டர் திரு. பிலிப்ஸ் மேன்சன் என்பவர், அவ்வழியாக வந்தார். செய்தியைச் கேள்விபட்ட அவர், இந்த சாமியார் ரத்த வெறி பிடித்தவராக இருக்கக்கூடும், இருந்தாலும், அவனுக்கு நாம் ஆதாரத்தோடு நிரூபித்து தண்டனை வழங்குவோம். ஒருவாரம் இவனை சிறை வைப்போம்,  அந்த நாட்களில் எவரும் புலியால் கடிபட்டு சாகவில்லை என்றால்,  இந்த சாமியார்தான் செய்திருப்பார் என்று முடிவு செய்யலாம் ,  என்று சொல்லி சமாதானப்டுத்தினர். இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பகுதியில் ஒரு பெண்ணை புலி அடித்து கொன்றது. அப்போது  மக்களைக்  கொல்வது சாமியார் அல்ல, புலிதான் என்பது பொதுமக்களுக்கு  புரிந்து விட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் அதே கும்பல்  மனநிலை தான் இன்றும் நம் நாட்டில் நிலவுகின்றது. ஆதாரம் இருந்தால் மட்டும் எதையும் நம்பும் அறிவியல் மனநிலை இன்னும் வரவில்லை, அது படித்தவர்களிடமும் கூட வந்துவிடவில்லை.  இப்படிப்பட்ட கண்மூடிதனமான நம்பிக்கை இருப்பதால் தான் இன்று வெளிநாட்டில் வேலை தருகிறோம், உங்களுக்கு 50 கோடி லாட்டரி அடித்து விட்டது  என்ற குருஞ்செய்தியை நம்பி,மோசடி கும்பலிடம் பணத்தை விட்டுவிடுகிறார்கள் நம் நாட்டு மக்கள் .

குழந்தைகள் கடத்துகிறார்கள் என்பது ஒரு பீதியை கிளப்பும் செய்திதான் என்பதை  மறுக்க முடியாது . குழந்தைகள் உள்ள பெற்றோர் இந்தச் செய்தியை கேட்டதும் பதறிப்போய் விடுவார்கள். பெற்றோர்கள் அவசர அவசரமாக வந்து வாசல் கதவை உடைத்து குழந்தைகளை பள்ளிகளிலிருந்து அழைத்துச் சென்ற பல நிகழ்சிகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன். உயர் போலீஸ் அதிகாரி என்ற முறையில் அவர்களை சமாதானம் செய்யவும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கும் மனநிலையில் இருக்கமாட்டார்கள், குழந்தையைக் கையோடு அழைத்துச் சென்று விடுவார்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


July 2018

போரிடாமல் ஜெயிப்பது எப்படி?
சத்துணவும் நீள் ஆயுளும்
மனம் கூறும் தன்னம்பிக்கை
வாங்களையோ வசவு…
முயற்சியே முன்னேற்றம்!
நேற்று போல் இன்று இல்லை
ஈர்ப்பும்… ஈடுபாடும்
வெற்றி உங்கள் கையில்- 55
கபாடி விளையாட்டு தமிழகத்தில் புத்துயிர் பெறுமா?
நாளைய பாரதம் நம் கையில்
மகிழ்ச்சிக்கான வழி !
வாழ நினைத்தால் வாழலாம் – 18
மூலை முடக்குவாதம் (Cerebral Palsy)
நன்மை தராத செல்வம்
தனை மறந்ததேன்! தென்றலே!
நம்பிக்கையே வாழ்க்கை
தன்னம்பிக்கை மேடை
விழிப்போடு இரு விண்ணைத் தொடு…
உள்ளத்தோடு உள்ளம்