Home » Articles » எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்

 
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்


சரவண பிரகாஷ் கோவை
Author:

என்னை மன்னித்து விடுங்கள்.  உங்களை பற்றி உங்களுக்கு தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன்.  அவை சற்று முகம் சுளிக்க வைக்கலாம்.  “வேளைக்கு சோறு இல்லை, நாளைய சோற்றுக்கு வேலை இல்லை” என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஞையின் மனநிலையில் இருந்ததுதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

“டீ யா இது இதெல்லாம் மனுஷன் குடிப்பான, நீயெல்லாம் எப்போ மாறப்போறானே தெரியல”  என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில் அரசியல்வாதிகள் பங்கேற்கும்  தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துவிட்டு “இந்த நாடு எப்போ மாறப்போதோ” என்று ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நாளும்.

மாற்றம் அன்றாட வாழ்வில்  இந்த சொல்லை பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்களிடமும் நான் கேட்டிருக்கிறேன்.  ஒரு நாள் காற்றோடு கதை பேசவும், மண்ணையும் மனிதர்களையும் திரும்பி பார்க்கவும் என கணினி உலகத்தை விட்டு வெளியே வந்தேன்.  மக்கள் கூடும் இடங்களில் ஒரு காட்சி, ஒரு குழு எம்மக்களிடம் “உங்கள் நாடு முன்னேறயாரிடம் மாற்றம் வேண்டும்?” என்ற கேள்வியை பலதரப்பட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  நான் கவனித்தேன்.  அவர்கள் பதில்களின் வந்த வார்த்தைகள் அரசியல்வாதிகளிடத்தில், அதிகாரிகளிடத்தில், பொதுநலவாதிகளிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், பண்பாடு மறந்த மாணவர்களிடத்தில், எழ மறுக்கும் இளைஞர்களிடத்தில் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது.

குழப்பமான மனதுடனும், சோர்ந்த உடலுடனும் வீட்டை அடைந்தேன்.  உதவாக்கரை,  ஒரு வேலைய உருப்படியா செய்றதில்ல,  உன்ன யாரு மாத்தப்போரான்னு தெரிய” என்று தம்பியை நொந்துகொண்டிருந்தார் அப்பா.

கொஞ்சம் சிரித்துக் கொண்டு, அதை மறைத்துக் கொண்டு என் அறையை அடைந்தேன்.  அறைக்கதவினை தாளிட்டு மனக்கதவினை திறந்தேன்.  எப்போதோ ஓய்வு பெற்ற என் நாட்குறிப்பை தேடி எடுத்தேன்.  இப்போதுதான் என் நாட்குறிப்பில் உள்ள வெள்ளை பக்கங்களுக்கு மறுமணம் நடந்தது.  என் எழுத்தாணியின் மைத்துளிகளால் அந்த பக்கங்களில் நான் எழுதியது இது தான்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…