Home » Articles » தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்

 
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்


அனந்தகுமார் இரா
Author:

  1. கடமையும் பலனும்:

இந்திய ஆட்சிப்பணித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரை இக்கட்டுரை மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. தேர்வுக்கு படித்த பத்து வருடங்கள் மிக சுவராஸ்யமாக கழிந்தது என்று என் நண்பர் ஒருவர் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது கூறினார். அவரும் நானும்  பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஒன்றாகப் படித்துக் கொண்டு இருந்தோம். எனக்கு பாடப் புத்தகங்கள் பரிச்சை எழுதும் ஐடியாக்கள், கேள்வி பதில் அலசல்கள் குறிப்புதவி புத்தகங்கள் என்று பல விதங்களில் உதவி செய்தார். நண்பர் பலமுறை நேர்முக தேர்வு வரை முன்னேறினார். அவர் இ.ஆ.ப ஆகாவிட்டாலும், நாங்கள் இணைந்து மிரட்டிய, படித்த காலங்களின் பயன் இருவரது எதிர்கால ரிசல்டிலும் வெளிப்பட்டது. நம்மில் யார் வென்றாலும் நாம் வென்ற மாதிரிதான், என்று மகிழக்கூடிய நெகிழ வைக்கக்கூடிய நண்பர் அவர்.

  1. அது ஒரு கனாகாலம்:

சிவில் சர்வீஸ் தேர்வுகள் மிக நீளமான தயாரிப்பு காலத்தைக் கொண்டுள்ளன. அவற்றை தாக்குப் பிடிக்கிற மன வலிமை, படிக்கின்ற காலத்திலேயே, பண்பில் ஒரு பக்குவத்தை வரவழைத்து விடுகின்றது. பரிச்சை எழுதி விட்டு தேர்விற்கு காத்திருக்கும் காலம் அது ஒரு கனா காலம். எனக்கு நான்கு முறை  அது ஏற்பட்டது. எமது நண்பருக்கு ஏழு முறை. இந்தக்காலக்கட்டத்தில் அவர் நம்மைத் தவிர இன்னும் பலருக்கும் நெஞ்சார்ந்த உதவி செய்திருக்கின்றார். இப்படியெல்லாம் படித்து பதினைந்து வருடங்கள் ஆன பின்பும் படிக்கின்ற போட்டித் தேர்வர்களை மாணவ மாணவியரை சந்திக்கும் பொழுது… சில அடிப்படையான படிப்பிற்குத் தேவையான விஷயங்கள், காலப்போக்கில் அவ்வளவாக மாறிவிடவில்லை என்றே தோன்றுகின்றது. நண்பர்கள் வாழ்வை வண்ணமயம் ஆக்குகின்றார்கள். தேர்வுக்குப் படிப்பது போருக்குத் தயராவது போல சீரியஸான மேட்டரென்றாலும், அதை ஒரு சிரமந்தெரியாத சீரான பயிற்சியைப் போல மாற்றிக் கொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

  1. பரிச்சை ஹாலில் பாயும் புலி:

கேள்வித்தாள் கிடைத்தவுடன் மடைதிறந்த வெள்ளம் போல் சீறி வருகின்ற சிந்தனைகளை ( அப்படி எங்க சார் வருது? என்று அங்கலாய்ப்பவர்களை அடுத்து தனியாக சந்திப்போம்) ஒரு முறைப்படுத்தி வரிசைப்படுத்தி பதில் தாள்களை நிரப்ப பயன்படுத்த வேண்டியது அவசியம். ஒரு ஐந்து நிமிடத்தை அனைத்துக் கேள்விகளையும் படித்துப்பார்க்க உபயோகப்படுத்துவது நல்லது. இப்படியாக எழுதும்பொழுதெல்லாம் நான் எழுதிய படிப்படியாய் படி ( விகடன் பிரசுரம்) படித்தாலே இனிக்கும் (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்) முதலான புத்தகங்களில் சொல்லாத புது விஷயத்தை சொல்ல வேண்டும்.

  1. சொல் புதிது பொருள் புதிது:

அப்படி படிக்கிற விஷயத்தில் அல்லது எந்த ஒரு விஷயத்திலாவது காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய தனிமையின் நூறு ஆண்டுகள் புத்தகத்தில் வந்திருப்பதைப் போல எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என்பது நிஜம் தான். படிப்பதற்கான டெக்னிக்குகளை பல காலமாக பள்ளிகளும் கல்லூரிகளும், கோச்சிங் சென்டர்களும் ஒவ்வொரு வருடமும் படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவற்றில் இல்லாத ஒரு மேஜிக்கல் ரியலிஸம் இக்கட்டுரையில் என்ன வந்துவிடப் போகின்றது? என்று கேட்டீர்களே ஆனால் அரதப்பழசான விஷயங்கள் கூட மீண்டும் ஒருமுறை புதிய கோணத்தில் பார்க்கும்பொழுது புதுமையாக படும். அது மனதில் பதியும் என்கின்ற ஒரே நம்பிக்கை சிக்னலை கொண்டுதான் நம் மனதுகள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளப் போகின்றன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…