Home » Articles » வாழநினைத்தால் வாழலாம்- 17

 
வாழநினைத்தால் வாழலாம்- 17


மித்ரன் ஸ்ரீராம்
Author:

கடன் (முதல் பாகம்)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே

கடன் அன்பை முறிக்கும் என்ற அறிவிப்புப்பலகை சில கடைகளில்.

இன்று ரொக்கம், நாளை கடன் என்ற அறிவிப்பு பல தேநீர் விடுதிகளில்.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்- என்று கவிதையில் சொல்லும் கம்பன்.

என்கடன் பணி செய்து கிடப்பதே என்று உழைப்பை உண்மையாக அறிவிப்பவனின் பெருமை வாசகம்.

பெற்றகடன் இருப்பதால் தான் முடியவில்லை என்ற போதும் என் குழந்தைகளுக்கு என்னால் முடிந்ததை செய்கிறேன்- எனும் தந்தையின் புலம்பல்.

போன  ஜென்மத்தில் பெற்ற கடனே- இந்த ஜென்மத்தில் நான் படும் துன்பம் எனும் நடுத்தர வர்கத்தின்  நடுக்கம்.

ஆனந்தமாக கடலை ரசிக்கலாம் என்றால்- கடன் எனும் அலைகள் நமது காலில் மீண்டும் மீண்டும் மோத- குழப்பங்கள் நெஞ்சில் கூடாரமாய்.

சிறு வயதில் பள்ளியில் கணித ஆசிரியர் கடன் வாங்கி கழித்தல் கற்றுக்கொடுத்தது பலருக்கு இன்னும் மறக்காத பாடமாக மாறிப்போனது வேதனை. அவர்கள் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற நடைமுறை பழமொழியின் நடமாடும் சான்றுகள்.

கடன் அமைதியைக் கெடுக்கும் அரக்கன்

கடன் துன்பத்தில் சிக்கவைக்கும் தூண்டில்

கடன் வளமையை கெடுக்கும்

கடன் வாழ்க்கை பயணத்தின் பாதையில் போடப்பட்ட பாறை

கடன் உங்கள் ஆனந்தத்தை எரிக்கும் அமிலம்.

கடனே வாங்காமல் வாழ முடியுமா? என்ற ஆச்சிரியமான குரலில் உங்கள் அறிவு கேள்வி கேட்பது என் காதுக்குள் விழுந்து கொண்டு தான் இருக்கிறது. அந்நிய நாட்டு பொருளாதாரம், இந்திய நாட்டு பொருளாதாரம் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரமும் கடன் தவறில்லை என்றே சொல்லி வந்திருக்கிறது.

உண்மையில் அது உண்மையில்லை.

இந்தியக்குடிமகன்கள் ஒவ்வொருவரும் கடன்காரர்களே என்று அரசாங்கம் அவ்வப்போது அறிவித்துக்கொண்டு தான் இருக்கிறது.ஒவ்வொரு கால கட்டத்திலும் உங்கள் பேரின் பக்கத்தில் எழுதப்படும் எண்ணிக்கைதான் மாறுபடும். இதில் ஆச்சிரியம் என்னவென்றால் ஜனத்தொகை கூடக்கூட உங்கள் தொகையும் கூடிக்கொண்டே போதுவது தான் புரியாத புதிராக இருக்கிறது என்று கணித வல்லுனர்களே கவலைப்படுகின்றனர்.

கடன்  தேவை தான் என்று ஒப்புக் கொண்டாலும் தேவையான கடன் எது என்ற தெளிவு இருந்தால் தான், வாழ்வுப்பாதையின் திசைகள் தெரியும்.

தேவையான கடன் தேவையற்ற கடன் குறித்த ஒரு வரைபடத்தை வரையும் முயற்சியே  என் வார்த்தைகள்.

ஒரு பெரிய புகழ்பெற்ற, திறமைசாலியான, அனுபவசாலியான வக்கீல் எந்த வழக்காக இருந்தாலும் வெற்றிக்கு குறைவாக எதையும் அவர் பெறவில்லை. அவர் பெயரைக் கேட்டாலே நீதிமன்றமே நடுக்கும்.

அவரிடம்  ஒரு  தொழில் பழகி வந்தான். தனக்கு அனைத்து விந்தைகளும், தொழில் ரகசியங்களும், நுணுக்கங்களும் எதுவும் வாங்காமல் கற்றுக் கொடுத்தார். பணம் கொடுக்க விழைந்தும் முற்றிலுமாக மறுத்தார். ஒரு கட்டத்தில் நான் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேன். அந்த கடனை அடைக்க சந்தர்ப்பம் கொடுங்கள் என்றான். கவலைப்படாதே காலம் வரும் என்று கூறினார் வக்கீல்.

சில காலங்கள் கடந்தன. இனி கற்றுக் கொடுப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் எதுவும் இல்லை என்ற நிலையில் வக்கீல் சொன்னார் இனி நீ தனியாக செய்யலாம். நீ ஜெயிக்கும் முதல் வெற்றியின் காணிக்கையாக எனக்கு ரூ 10 லட்சம் தர  வேண்டும். இதுவே நீ எனக்கு தீர்க்க வேண்டிய கடன் இது தான் குரு காணிக்கை இதை நீ மீறக்கூடாது என்றார். அதிர்ச்சியாக இருந்தாலும் ஒத்துக் கொண்டார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…