Home » Articles » முயற்சியே முன்னேற்றம்

 
முயற்சியே முன்னேற்றம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

வாசக அன்பர் ஒருவர் தொலைபேசியில் பேசினார் “முயற்சி என்பது எது வரை இருக்க வேண்டும்?”

ஒரே பதில்:

“முயற்சி என்பது மூச்சு உள்ளவரை இருக்க வேண்டும்” என்றேன்.

அதற்கு அவர் “முயன்று வென்று விட்டோம். அதன் அனுபவம் நம்மிடம் உள்ளது. மீண்டும் ஏன் முயல வேண்டும்” என்று கேட்டார்.

இனிய வாசகர்களே! ஒன்றை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகோரப்பசி. நாம் சுவையான உணவை வேண்டுமளவிற்கு சாப்பிட்டு சந்தோசப் படுகின்றோம். சாப்பிட்ட உணவு சீரணமடைந் தவுடன் மீண்டும் பசிக்கின்றது. இந்தப் பசிப்பிணியைப் போக்க உழைத்து, பொருளீட்டி உண்கிறோம்.

இது போன்றது தான் முயற்சியும். ஒலிம்பிக் போன்றஎல்லாப் போட்டிகளிலும் வென்றவர்கள், அடுத்த போட்டிகளுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தா தங்களைத் தயார் செய்கின்றனர்?

இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் அல்லவா கடுமையான பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள். எனவே முயற்சி என்பது நம் வாழ்நாள் முழுதும் தேவை.

உதாரணத்துக்கு நாடிசுத்தி என்னும் ஒரு பிராணாயாமப் பயிற்சியை எடுத்துக் கொள்வோம். திருமூலர் தன் திருமந்திரத்தில்

“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்

கூற்றை உதைப்பர்”

என்று கூறியதை நினைவு கூறுவோம்.

மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி சுவாசிக்கும் பழக்கம் மரணத்தைத் தள்ளி வைக்கும் என்பது பொருள்.

“எனக்குத் தான் தெரியுமே! எதற்கு தினமும் செய்ய வேண்டும்” என்று கேட்கின்றார் ஒருவர்.

அதற்கு பயிற்சி அளிப்பவர் “கடந்த மூன்று ஆண்டுகளாகச் தினமும் செய்து விட்டேன். இன்னும் எதற்குச் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய். ஆரம்பித்த புதிதில் நீ ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறைமூச்சு விட்டாய்?”

“எட்டு முறை” என்றார்.

“இன்று நீ ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறைமூச்சு விடுகின்றாய்?” இந்தக் கேள்விக்கு பயிற்சி செய்பவர் கூறினார் நான்கு முறை என்று.

பயிற்சி அளிப்பவர் சொன்னார்; “முயற்சி என்பது பயிற்சியாகி முந்தைய நிலையுடன் இன்றைய நிலையை ஒப்பிடுவதாகும். அதில் முன்னேற்றமிருக்க வேண்டும்” என்றார்.

மேலும் சிறு உதாரணம் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளவாம்.

பிறந்த குழந்தை வளரும் போது அதன் தேவைகளைப் பெறுவதற்குப் பேச இயலாத நிலையில், அழுகையின் மூலம் தெரிவிக்கும்.

அக்குழந்தை மலம் கழித்தபின் தாய் சுத்தம் செய்து விடுகிறார். மூன்று வயதுக்கு மேலாகும் போது சுத்தம் செய்யக் கற்றுத் தருகின்றார். இப்பயிற்சி சில வருடங்கள் கூட நீடிக்கும்.

குழந்தை தெரிந்து கொண்டாலும் தன் தாயை அழைத்து, காட்டி சரியா என உறுதி செய்து கொள்வதை நாம் வீடுகளில் பார்க்கின்றோம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2018

உள்ளத்தோடு உள்ளம்
பள்ளி குழந்தைகளுக்கான சுகாதார பழக்க வழக்கங்கள்
தடை அதை உடை
வெற்றியாளர்கள் நீங்கதான்!
எனிமாவும் நீள் ஆயுளும்
தோல்வியைத் தவிர்த்து வெற்றி பெறுவது எப்படி?
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
முயன்றேன் வென்றேன்
வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்
வாழ்வின் இலக்கு
தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்
வாழநினைத்தால் வாழலாம்- 17
முயற்சியே முன்னேற்றம்
மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்
வெற்றி உங்கள் கையில் 54
வெற்றியை வாழ்க்கையாக்கு
தன்னம்பிக்கை மேடை
இடைவிடாத முயற்சி! வாழ்க்கையில் மகிழ்ச்சி!!…