Home » Articles » முயற்சியே முன்னேற்றம் – 4

 
முயற்சியே முன்னேற்றம் – 4


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

அன்றாட வாழ்வில் முயற்சி என்பதைத் தெரிந்து கொள்ள இரு உயிரினங்களைக் கூறலாம். ஒன்று எறும்பு மற்றது சிலந்தி.

எறும்பு சிறிய உயிரினம். அதனுடைய சுறுசுறுப்பும்,  தொடர் உழைப்பும் நம்மிடம் வந்து விட்டால், நாம் நினைப்பதைச் சாதிக்கும்  வல்லமையுடன்  வாழ முடியும்.

சாதாரணமாக ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதையில் தடையை உண்டாக்கினால், அது சோர்ந்துவிடாமல், வேறு பாதையைத் தேடும்.

எல்லாப் பாதைகளையும் மூடி விட்டாலும் முயற்சி செய்து கொண்டே இருக்கும். முதலில் தரையில் அங்குமிங்கும் செல்லும், பிறகு மேலே ஏறி கிழே இறங்கும்.

எறும்பைப்பற்றி:

மனித இனம் தோன்றுவதற்கு முன் தோன்றிய உயிரினம். இவை தோன்றி  பல மில்லியன்  வருடங்களாயின. நான்கு அறிவு உள்ளது. தொடு உணர்வு, சுவை உணர்வு, வாசனை உணர்வு மற்றும் பார்வை உணர்வு உள்ளது. காதுகள் இல்லை; ஆனால் அசைவு மற்றும் அதிர்வுகள் மூலம் தன் கால்களால் தரையைத் தொடும் போது கேட்கிறது.

ஒரு மணி நேரத்தில் சுமார் 300 மீட்டர் ஓடக்கூடியது. அதன் நீளத்தை விட பல மடங்கு தூரம் ஒரு நிமிடத்தில் ஓடும்

  • இணைந்து செயல்படும் இனம்.
  • குளிர் பிரதேசமான அண்டார்டிக்காவில் இல்லை.
  • முட்டையிட்டு, குஞ்சு பொறிக்கிறது.
  • ராணி எறும்பு சுமார் 30 வருடங்கள் உயிர் வாழும்.
  • ஆண் எறும்புகள் சில வாரங்களே வாழும்.
  • வேலைக்கார எறும்புகள் சுமார் 3 வருடங்கள் வாழும்.
  • சேமிப்பு குணம் நிறைந்தது.
  • குளிர் காலங்களில் உறக்க நிலையில் கழிக்கும்.
  • தம் வசிப்பிடத்திலிருந்து சுமார் 700 அடி தூரம் வரை பயணிக்கும்.
  • தன் எடையை விட 10 முதல் 50 மடங்கு எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லும்.
  • தாக்குதலுக்குள்ளாகும் போது இணைந்து செயல்பட்டு தாக்குதலை முறியடிக்க முயற்சிக்கும்.

எறும்பிடமிருந்து:

சுறுசுறுப்பு: எறும்பைப் போல எப்போதும்  சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். தொடர் முயற்சியால் சுறுசுறுப்பைப் பெறுகிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2018

தகுதியை அறிந்து கொள்
பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13
சவால்களை வெல்வது எப்படி?
நரையும் திரையும்
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
உலகில்லை உழவனின்றி
சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?
சாதுர்யம்
வெற்றி உங்கள் கையில் – 53
வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்
முசோலினியின் செயல்பாடு
முயற்சியே முன்னேற்றம் – 4
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5
சாதனைகளைச் சாதிப்போம்
தன்னம்பிக்கை மேடை
உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்