Home » Articles » சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5

 
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5


கிரிஜா இராசாராம்
Author:

மதிப்பு

உலகில் தோன்றும் உயிருடைய  தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள், உயிரற்ற ஜடப் பொருட்கள் அனைத்தும் தனக்கென்று ஒரு மதிப்பைப் பெற்றுள்ளது. சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று வாசங்கள் கருத்தை உறுதிப் படுத்துகின்றன. மதிப்பு என்ற சிறுகதையில் மனிதனின் மதிப்பு பற்றி ஒரு உவமையின் மூலம் எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு புகழ்பெற்ற  பேச்சாளர், ஒரு கருத்தரங்கில் பேசும் பொழுது, அங்கிருந்த 200  பார்வையாளர்களிடம் ஒரு புதிய நூறு ரூபாயைக் காட்டி, இந்த நூறு ரூபாய் உங்களுக்குப் பிடித்துள்ளதா? பிடித்தவர்கள் தங்களின் கையை உயர்த்துங்கள் என்றார். பார்வையாளர்கள் 200 பேரும் கையை உயர்த்தினர் பின், தன் கையில் உள்ள ரூபாய் நோட்டை கையால் கசக்கினார். அந்த நோட்டை உங்களில் ஒருவருக்கு தரவிரும்புகிறேன். இதைப் பெற்றுக் கொள்ள விரும்புவர் கையை உயர்த்துங்கள்  என்றார். அதற்கு அவையில் உள்ள 200 பேரும் உயர்த்தினார்கள். அடுத்து அதே ரூபாய் நோட்டை தனது நெருப்பு காலால் போட்டு மிதித்தார். அது மேலும் கசங்கி காணப்பட்டது. அதைப் பார்வையாளர்களிடம் காண்பித்து தற்போது இது யாருக்கு தேவை என்றார் அதிசிய தக்க வகையில் மீண்டும் அனைவரும் கையை உயர்த்தினார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் ரூபாய் நோட்டு எவ்வளவு தான் கசங்கி காணப்பட்டாலும் அதன் மதிப்பு குறையப் போவது இல்லை. பேச்சாளர், பின் தன் கருத்தைப் பின் வருமாறு கூறினார்.

எப்படி ரூபாய் நோட்டின் மதிப்பு குறையவில்லையோ அதே போல் தான் மனிதனும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மதிப்பு உடையவன். வாழ்க்கையில் பிரச்சனைகள்  மனிதனை கசக்கிப்பிழிகின்றன. சில தவறான முடிவுகளாலும், சூழ்நிலைகளைச் சரியாகக் கையாளத் தெரியாமல் சில தவறுகளைச் செய்வதாலும் நம்மை நாமே ஒன்றிற்கும் பயன் படாதவர்கள் என்று நம்மை நாமே தாழ்த்தி எடைபோடுவது பெரிய தவறு. இந்த ரூபாய் நோட்டு எப்படி கசங்கினாலும் அதன் மதிப்பு குறையவில்லையோ அதுபோல் உங்கள் வாழ்வில் எது நடந்தாலும், எது நடக்கவிருந்தாலும் உங்கள் மதிப்பை கைவிட்டு விடாதீர்கள். நீங்கள் மதிப்பிற்குரியவர் என்று கூறி பார்வையாளர் களிடம் தன்னம்பிக்கை என்ற விதையை விதைத்தார்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2018

தகுதியை அறிந்து கொள்
பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13
சவால்களை வெல்வது எப்படி?
நரையும் திரையும்
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
உலகில்லை உழவனின்றி
சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?
சாதுர்யம்
வெற்றி உங்கள் கையில் – 53
வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்
முசோலினியின் செயல்பாடு
முயற்சியே முன்னேற்றம் – 4
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5
சாதனைகளைச் சாதிப்போம்
தன்னம்பிக்கை மேடை
உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்