Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

பள்ளி விடுமுறை காலங்களில் மாணவர்கள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்?

பாமிதாபானு, சென்னை

எப்பத்தான் தேர்வுகள் முடியும், ஜாலியாக இருக்கலாம் என்று மாணவர்கள் நினைப்பது உண்டு. ஆனால் தேர்வுகள் முடிந்துவிட்ட பிறகு, என்னதான் செய்யலாம் என்று அவர்களே யோசிப்பார்கள். அவர்களுக்கும் போர் அடிக்க ஆரம்பிக்கும். இன்னும் சரியாகப் படித்திருக்கலாம் என்றும் கூட சிலர் வருந்துவர். அப்படி இப்படி என்று விடுமுறையும் முடிந்துவிடும். மீண்டும் பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று விடுகின்றனர் மாணவ கண்மணிகள்.

விடுமுறைகாலங்களில் ஒரு மாணவனுக்கு இத்தனை மணிக்கு எழ வேண்டும், இத்தனை மணிக்கு பள்ளிக்குப் போக வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல் இருப்பது ஒரு பெரிய சுதந்திரம் கிடைத்தது போன்றஉணர்வு ஏற்படும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என்ற வழக்கமான பாடங்களும் படிக்க வேண்டியது இல்லை. இது மனமார ஒரு செயலைச் செய்ய ஒரு நல்ல சூழ்நிலை கூட. எனவே இந்தக் காலகட்டத்தில் மகிழ்ச்சியாக சில நல்ல காரியங்களை செய்து விடலாம். தங்களை மேம்படுத்திக் கொள்ள சில அறிவுத்திறன்களை இந்த விடுமுறை பருவத்தில் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம்.

தாராள சிந்தனை

பள்ளிக்கூடம் நடக்கும் நேரத்தில் சிந்திக்க இடமில்லை; சிந்தனை செய்ய நேரமும் இல்லை. விடுமுறை நாட்களில் தினமும் ஒரு மணி நேரம் சிந்தனை செய்வதற்கு ஒதுக்கலாம். அதுவும் காலையில் இந்தப் பணியைச் செய்யலாம். எவற்றைப் பற்றி சிந்திக்கலாம் என்று பார்ப்போம் :

  • நமது பலம் யாவை, பலவீனம் யாவை?
  • நமக்கு பிடித்த வேலை என்ன?
  • நமது லட்சியம் என்ன?
  • நாம் இந்தச் சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும்?
  • உலகம் எவ்வளவு பெரியது; அதில் நாம் எவ்வளவு?
  • இன்று மட்டும் என்னென்ன வேலைகளைச் செய்யலாம்?

நூல் வாசிப்பு

விடுமுறைநாட்களில் பிடித்தமான நூல்களை வாசித்து முடிக்கலாம். அதுவும் அறிவியல் நூல்களை வாசிக்கலாம். அது இயற்கை உலகைத் தெரிந்து கொள்ள பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக இந்த பூமி எப்படித் தோன்றியது, பூமி எதனால் ஆனது, இந்த விண்வெளி எப்படிப்பட்டது, நட்சத்திரங்கள் என்பவை என்ன? மின்சாரம் எப்படி தயாரிக்கிறார்கள்? மனிதன் எப்படித் தோன்றினான்? போன்ற கேள்விகளுக்கு விடை காணும் அறிவியல் நூல்களை வாசிக்கலாம். Encyclopedia என்றவகை நூல்களைப் பெற்றோர் வாங்கித் தரலாம். சிறந்த அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். சர் ஐசக் நியூட்டன், கலிலியோ, மைக்கல் ஃபாரடே, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஆன்டன் லவாய்சியர், கெப்ளர் போன்றவர்கள்.

இவர்கள் மீது ஆர்வம் காட்டி, இவர்களது வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். இவர்களது உன்னத கண்டுபிடிப்புகளை எண்ணி வியப்படையலாம்.

ஆங்கில புலமை

ஆங்கிலப்புலமை இல்லை என்பது பள்ளி மாணவர்களின் தீராத ஒரு குறையாகவே உள்ளது. இதனால்தான் அறிவியல் கருத்துக்களைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத அவல நிலையும் உள்ளது. கல்லூரிக்குச் சென்றபிறகும் ஆங்கிலம் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்தச் சிக்கலால் பொறியியல் படிப்பு படித்திருந்தும் வேலை கிடைப்பது இல்லை. எனவே இந்த இரண்டு மாத விடுமுறையில் ஆங்கிலம் தாராளமாகப் பேச ஒரு பயிற்சிப் பள்ளிக்குப் போகலாம்! அல்லது இணையதளத்தில் ஆங்கிலம் பேச பயிற்சி எடுக்கலாம். தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். ஆங்கிலம் சரளமாகப் பேசவும் எழதவும் தெரிந்தவர்களுக்குப் பிரகாசமான வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2018

தகுதியை அறிந்து கொள்
பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13
சவால்களை வெல்வது எப்படி?
நரையும் திரையும்
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
உலகில்லை உழவனின்றி
சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?
சாதுர்யம்
வெற்றி உங்கள் கையில் – 53
வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்
முசோலினியின் செயல்பாடு
முயற்சியே முன்னேற்றம் – 4
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5
சாதனைகளைச் சாதிப்போம்
தன்னம்பிக்கை மேடை
உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்