Home » Online News » முயன்றேன் வென்றேன்

 
முயன்றேன் வென்றேன்


ஆசிரியர் குழு
Author:

‘தன் உழைப்பை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்காது நம் நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்க தயாராக இருங்கள் இளைஞர்களே!’ என்ற பெரும் எதிர்பார்போடும், கனவோடும் வாழும் நமது இளம் அறிவியலாளன் இராகுலுடன் ஒரு சந்திப்பு.

இயற்கை வளம் கொழிக்கும் பொள்ளாச்சியில் ஓடியகுளம் என்ற ஊரில் பிறந்தேன். நடுத்தர குடும்ப சூழ்நிலையில் தான் ஜீலை மாதம் 1996 ஆம் ஆண்டு பதிமூன்றாம் தேதி எனது வாழ்வே துவங்கியது. அரசு பணியாளராய் மின்துறையில் பணிபுரியும் என் தந்தை மந்தராச்சலதிற்கு நான் பொறியியல் துறையில் பெரும் புகழ் பெறவேண்டும் என்பது தான் விருப்பம். பொறியியல் துறையில் சாதனை புரிய வேண்டும் என்பதை விட அதில் பணிபுரிந்து திருமணம் செய்து சாதாரண குடும்ப வாழ்வை வாழ வேண்டும் என்று தான் அவர் பெரிதும் விரும்பினார்.

எனது சிறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய தாய் மஞ்சுளாதேவி வீட்டினை திறம் பட நடத்தி வந்தார்.  ஆர்.கே.ஆர். கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு வரை படித்து வந்தேன். எனக்கு மேற்கொண்டு படிக்க விரும்பம் இன்றி டிப்ளமோ பொறியியல் படித்தேன். படிப்பை தொடர்ந்த முதலாம் ஆண்டிலேயே 2012-இல் ஈழத்தமிழர் படுகொலையை எதிர்த்து பள்ளி கல்லூரி மாணகர்கள் போராட்டத்தை துவங்கவே நானும் பங்கேற்றேன்.

ஈழத்தமிழர்களுக்காக போராட எண்ணும் பொழுது தான் நான் தமிழ் மீது ஆர்வம் கொண்டேன். அன்று தமிழை படிக்கும் பொழுது தான் தமிழில் பலதரப்பட்ட கருத்துகள் நிழவுவதை அறிந்து அன்று முதல் தான் என்னுடைய வாழ்வை துவங்கினேன். அதுவரை படிக்கும் மாணவனாக மட்டுமே பயணத்தை தொடர்ந்திருந்தேன். டிப்ளமோ முடிக்கும் பொழுது என்னுடைய ஆய்வாய் எனது websiteயை, சமர்பிக்கவே எண்ணினேன். ஆனால் குறுப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாததால் வேறு ஆய்வை செய்து முடிக்க, கல்லூரி முடித்த அடுத்த மாதத்தில் எனது ஆய்வை  நிறைவு செய்தேன்.

நான் முடித்த ஆய்வினையே மேலும் தொடர எண்ணி எனது இல்லத்தில் கூறினேன். எனது வீட்டினருக்கு அதனை புரிய வைக்கவே எனக்கு தண்ணீர் பட்ட பாடாய் மறைய, பெரும் சிரமம் கொண்டு எனது இல்லத்திற்கு புரியவைத்தேன். எனது ஆய்வான இந்திய சுயாதீன கண்டுபிடிப்பு வெளியீட்டாளர் (Indian Independent Invention Publisher)  என்பதை எவருமே ஏற்காத ஒன்றாய் போனது. இது இந்தியாவில் எங்குமே இல்லை எனும் போது எனது இல்லத்தினர் ஏற்கவே இல்லை. மேற்கொண்டு பொறியியல் துறையை தொடர கூறவே நான் ஒரு வருடம் வாய்ப்பு கேட்டு  கோவைக்கு வருகை புரிந்தேன். முதல் முறை கோவைக்கு வந்தேன். கணினி மையங்களில் பணிபுரிந்தேன். Date entry, computer service, coding போன்ற பல வேலைகளை செய்தேன். நான் சேர்த்த பணத்தை கொண்டு எனது ஆய்வினையும் அப்பிளிகேசனையும் வெளியிட்டேன்.

நானும் எனது குழுவும் இது தமிழ் நாட்டோடு நிற்க கூடாது என்று பல கண்டுபிடிப்பாளர்களை தேடி சென்றோம். இதன் மூலம் முதல் கண்டுபிடிப்பாளர்களாக சிபி எனும் திருப்பூரை சேர்ந்தவர் நெகிழி இல்லா திருப்பூர் குழுவிலிருந்து சந்தித்தார். அவர் மக்கும் நெகிழியை வெளியிட்டோம். அடுத்து பெண்களின் மாதவிடாய் சமயங்களில் அவர்கள் உபயோகிக்கும் நப்கின்களை இயற்கை முறையில் தயாரிக்க திட்டம் வகுத்தோம். அதற்கு தமிழ்நாட்டின் பல காலங்களை தொட்டு பயணிக்க விரும்பினோம்.  7ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு காட்டனை தான் உபயோகித்தனர் என்பதை சான்றோடு அறிந்து கொண்டோம். புளிச்சக்கீரை என்னும் மூளிகையை தான் அவர்கள் உபயோகித்தனர்.  புளிச்சகீரையை கயிறு திரிக்க உபயோகித்தனர் நமது முன்னோர்கள். இந்த கீரை மற்ற கீரைகளை விட நுண்ணுயிர் கிறுமிகளை கொல்லும் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. இதனை பெண்களில் நலனுக்காக தயாரிக்கலாம் என்று முயன்று வருகின்றோம்.

எங்களது இந்த கண்டுபிடிப்புகள் மூலம் பலரை பலருக்கு அறிமுகப்படுத்த எண்ணினோம். பலரும் வாய்ப்புகள் அற்று சிரமம் கொண்டு முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் அவர்களை முன்னேற்ற எங்களது இந்த ஆய்வை பயன்படுத்துகின்றோம். பல கண்டுபிடிப்பாளர்களை கண்டு அவர்களை முன்னேற்ற நாங்கள் தயாராக இருகின்றோம். வேலையில்லா நிலையை மாற்ற வேண்டும் என்று எண்ணினோம். 2020இல் வேலையில்லா நிலை பெரிதும் நீடிக்கும். இன்றைய சூழ்நிலைகளில் விவசாயிகள், நடுத்தரவர்க்கத்தின் குழந்தைகள் பலரும் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். பலருக்கு வாய்ப்பு தர எண்ணி ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று இதனை பற்றி எடுத்துரைக்க விரும்பினோம்.

பல கல்லூரிகளுக்கு சென்று சிறப்பு வகுப்புகள் மூலம் பலரை ஊக்குவித்தோம். இன்றைய சூழலில் 200 ஆய்வுகள் வெளியீட்டிற்காக காத்திருக்கின்றன. பலரை ஊக்குவிக்கும் பொருட்டு நடக்கும் இந்த போராட்டத்தில். ஆட்டோ மோபைல் என்னும் வேலையை தொடர எண்ணினோம். புதுவகையாக இருசக்கர வாகனத்தை வடிவமைக்கும் பணிகளை தொடர்ந்திருக்கின்றோம். 300 யூனிட் தரும் பொழுது 400கிமீ  தூரம் எளிதாகவும், 80 கிமீ ஒரு மணி காலம் வரை பயணிக்கும்.

இந்த ஆய்வை தொடர எங்களுக்கு பொருளாதாரம் மிகவும் அவசியமாக தேவைபடவே பலரை நாடினோம். பொருட்களை கண்டுபிடிக்கவும், அதனை வெளியிடவும், மக்களிடம் சோர்க்கவும், பொருளைதாரம் ஆவசியமானது. இதற்கான எவ்வித உதவியும் செய்ய எந்த நிறுவனங்களும் முன்வரவில்லை. பலரும் அழைபிதழ்களை வாங்கவும் இல்லை, அவர்கள் வாயில்களை தொடவும் விடவில்லை. வங்கிகளில் பணம் தர சில நிறுவணங்கள் இடையூறாய் நின்று உதவ மறுக்க காரணமாய் நின்றன. சுதந்திரமான நடவெடிக்கைகளை எடுக்கும் பொழுது எவருக்கும் அதன் உட்கருத்து புரிவதில்லை. முதலில் மறுத்த எங்களது இல்லங்களும் எங்களுக்கு உதவின. என் பொற்றோரும் நிறுவனத்தில் பணிபுரிவதாய் கூறி உறவினர்கள் மூலம் இன்று உதவுகின்றனர்.

பலநிறுவனங்கள் தயாரிக்கும் நப்கின்களின் விற்பனைகளுக்கு தடை ஏற்படும் என்று எங்களுக்கு பல இன்னங்களை தர தயாராய் நின்றன. இதனை எல்லாம் கடந்து தான் நானும் எங்கள் குழுவும் முயன்று பலவற்றை வெளிகொணர முயன்று வருகின்றோம். இந்த பயணத்தின் பொழுது என்னுடைய பள்ளியில் பயின்ற எங்களது அண்ணா கனகராஜ் என்பவர் பாண்டிசேரி பல்கலைக்கழகத்தில் ஆய்வுதுறையில் பணி புரிகின்றார். அந்த பல்கலைக்கழக்கதிற்குள் மற்றவர்களை அனுமதிக்காத சூழலில் பணியே தடை ஏற்படினும் எங்களின் பணிக்காக உதவினார். அவரது தலைமையில் ஆய்வினை அவரது பல்கலைகழகத்தில் ஆய்வாளர்களை தங்க வைத்து ஆய்வினை முடித்து கொடுத்தார். சீ.வி.முனிஷ் என்னும் பலவிருதுகளின் சொந்தகாரர் எங்களுக்கு உதவினார். இவர்களை நான் மட்டுமின்றி எனது குழுவும் என்றுமே மாறவாதிருப்போம்.

எங்களது பணியை நம்பி முதன் முதலில் அவர்களது படைப்பை கொடுத்த சிபியும், நப்கின் தயாரிக்க உதவிய கௌத்தம், இவர்கள் சுயநலமற்ற நபர்களாக எங்களுக்கு உதவினர். எங்களது பெறும் வெற்றி என்றால் எங்களை அவர்கள் நுழைவாயிலில் கூட அனுமதிக்காத பல நிறுவனங்கள் எங்களை இன்று அழைத்து அவர்களின் வேலையாட்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுக்க பணிவதோ!! சில கல்லூரிகளில் நிராகரிக்கப்பட்ட எங்களது திறமைகளை அவர்கள் கல்லூரி மாணகர்கள் அறிய பல வகுப்புகளை எடுக்க அழைத்தனர். இதன் மூலம் வரும் பணத்தை நாங்கள் ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்க செலவளிக்கின்றோம். திருப்பூரில் பகிலும் ஒரு பெண்ணை இன்று எங்கள் சார்பில் படிக்க வைக்கின்றோம்.

வளர்ந்து நிற்கும் குடும்பங்கள் வளர்ந்து கொண்டே செல்கின்றனர். ஆனால் நடுத்தரமும் ஏழைகளும் உயர்வதில்லை. இதனால்  பலரை முன்னேற்ற பலரை சார்திருப்பவர்களை வெளியேடுப்பதே எங்களது குறிக்கோளாக உள்ளது.

 


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2018

தகுதியை அறிந்து கொள்
பேசும் தெய்வம் உலக அன்னையர் தினம் – மே 13
சவால்களை வெல்வது எப்படி?
நரையும் திரையும்
நம்பிக்கை இழக்காமல் இருப்போம்
தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு
வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!
உலகில்லை உழவனின்றி
சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?
சாதுர்யம்
வெற்றி உங்கள் கையில் – 53
வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்
முசோலினியின் செயல்பாடு
முயற்சியே முன்னேற்றம் – 4
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள் -5
சாதனைகளைச் சாதிப்போம்
தன்னம்பிக்கை மேடை
உழைப்பின் ஏற்றம் உயர்வின் முன்னேற்றம்