Home » 2018 » April (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  வாழ நினைத்தால் வாழலாம் -15

  மௌனம் 

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  “கோதை ஆண்டாள் – தமிழை ஆண்டாள்”  என்று புகழப்பட்ட ஆண்டாளைப்பற்றிய ஒரு கவிஞனின் கருத்து – ஒலித்ததும், எதிரொலித்ததும் இரைச்சலை.

  வாதத்திற்கு எழுந்தது எதிர்வாதம்.  அவை எதிரொலித்ததும் இரைச்சலையே!

  பெரிய தலைவனாகப் பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவரின் சிலையை பற்றிய ஒருவரின் கருத்தும், கண்ணோட்டமும் – ஒலித்ததும், எதிரொலித்ததும் இரைச்சலையே !

  வினைக்கு எதிர்வினை விளைந்தது எதார்த்தம்.  அவை எதிரொலித்ததும் இரைச்சலையே

  சிலையை வைத்தாலும், எடுத்தாலும், புதிதாய் திறந்தாலும் – நம் செவிப்பறைகளை அதிகம் தாக்குவது சினம் கொண்ட சிலரின் சிவப்பான வார்த்தைகளையே!

  “மௌனத்தை”  மறந்ததால் வந்த விளைவு என்பதே உண்மை.

  இன்னொருபுறம், “களம் வேறு !  கண்ணோட்டம் வேறு !

  மகாபலிபுரத்து சிலைகள் ஒரு கலைஞனின் கற்பனைக்கு கிடைத்த விலைமதிக்க முடியாத வெகுமதி.

  பரத்தின் சிறப்பு மட்டுமல்ல நமது பாரதத்தின் சிறப்புகளையும் சிலையாக பார்க்கும்போது – நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் கண்முன்னே காட்டிய எத்தனையோ சிற்பிகளை பாராட்ட விழைகிறது மனம்.

  கோவில்களில் இருக்கும் சிலைகள் – நம்முள் புதைந்து கிடக்கும் பக்தியை வெளிக்கொணரும் வேலையை “மௌனமாக”  செய்கிறது. அதனால்தான் ஆலயங்களில் சிலைகள் முன்பு நாமும் சிலையாக “மௌனமாக” நின்று – மனதோடு பேசுகிறோம்.

  உண்மையில், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் நாம் கற்றுத்தெளிய வேண்டியது “சிலையை மட்டுமல்ல, இன்றைய நம் நிலையை கண்டு நாம் மனனம் செய்ய வேண்டிய பாடம் “மௌனம்”  தான் என்பது.

  “வார்த்தைகள் செவிகளோடு பேசும் – ஆனால் “மௌனம்” மனதோடு பேசும்”.

  வாழ்க்கை பயனத்தில் வெற்றி வாசலை விரைவில் அடைய “மௌனம்” ஒரு அடையாள சீட்டு என்று அறிக.

  சமூகம் “படிக்கத்தெரிந்தவர்களைவிட – நடிக்கத்தெரிந்தவர்களையே” நிரம்ப கொண்டிருக்கின்றது.

  “மௌனம்” பழகுங்கள்!

  உங்கள் திட்டங்களை ஆமோதித்து அறிவுரை சொல்ல – அதிகம் ஆட்கள் இல்லை.  “மௌனம்” பழகுங்கள்!

  இந்த இதழை மேலும்

  முயற்சியே முன்னேற்றம்

  இன்று முயற்சி என்பது எல்லா இடங்களிலும், எல்லா நிலைகளிலும் தேவைப்படுவதை நாம் நன்றாக அறிவோம்.

  முயற்சிக்ககு முந்தைய நிலையான தகவல்கள் சேகரிப்பது இன்று வெகு சுலபம். ஆனால் சுமார் 50 வருடங்களுக்கு முன் இருந்த நிலை மோசம்.

  உதரணமாக என்னையே எடுத்துக் கொள்ளலாம். பள்ளி இறுதி வகுப்பு (11 ம் வகுப்பு) அரசுப் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன்; டாக்டர் ஆக வேண்டுமென்று ஆசை.

  வெறும் ஆசை தான். மதிப்பெண்கள் அதிகம் பெற்றதால் உண்டான ஆசை என்றும் சொல்லலாம். அதனால் PUC யில் நேச்சுரல் சையின்ஸ் பிரிவில் சேர்ந்தேன். உயர் மதிப்பெண்களுடன் தேறினேன்.

  அதன் பிறகு என்முன்னேற்றத்தில் ஆர்வமுடைய பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் டாக்டருக்குப் படிக்க ஆசை ; என்ன  செய்ய வேண்டு மென்றேன்?

  என் குடும்ப நிலை, பொருளாதாரம் முதலியவைகளை நன்கு அறிந்த அவர்கள் “சிரமம் ; வேண்டாம்” என்றனர்.

  டாக்டர் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு B.Sc (ஜுவாலஜி) சேர்ந்து, அப்படிப்பை முடித்தால் ஆசிரியப் பணிக்குத் தான் அதிக வாய்ப்பு என்பதால் அதிலிருந்து விலகி BA (பொருளாதாரம்) மாற்றினேன்.

  படித்தது விஞ்ஞானம் ; படிக்க இருப்பது பொருளாதாரம். 2 நாள் வகுப்பில் ஒன்றுமே புரியவில்லை. நான் விரும்பிய B.Sc (கெமிஸ்ட்ரி) கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் கல்லூரிப்படிப்பை விட்டு விலகினேன்.

  பெற்றோருக்கு ஆதங்கம். பின் அரசுப்பணி. வாழ்வின் லட்சியம் பட்டப்படிப்பு முடிக்க வேண்டும்.

  என்ன செய்யலாம் என யோசித்து தபால் மூலம் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தேன்.

  ஒரு வெறி வந்தது. யார் யாரோ நிறைய பட்டங்களைத் தம் பெயருக்குப் பின்னால் எழுதும் போது, என்னாலும் ஏன் முடியாது என்ற எண்ணம் வந்தது.

  எண்ணம் செயலுக்கு வந்தது. ஆங்கில எழுத்துக்கள் A முதல் Z முடிய 26 தான். ஆனால் என் பெயருக்குப் பின்னால் 26 க்கும் அதிகமான எழுத்துக்களில் பட்டங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

  இந்த இதழை மேலும்

  சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

  மனிதன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ ரகமான நிகழ்வுகளைப் பார்த்து அவற்றின் விபரங்களைப் புரிந்து கொள்கின்றான். புத்தகக் கல்வியால் மட்டும் அனைத்து அறிவையும் பெற்று விட இயலாது. அதையும் தாண்டி ஒரு உணர்வு உண்டு. அதைப் பொது அறிவு என்றும் கூறலாம். இந்தப் பொது அறிவு பற்றி அரிஸ்டாட்டில் முதல் எத்தனையோ அறிவாளிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த உணர்வு மனித இனத்திற்கு மட்டுமின்றி மிருகங்கள் மற்றும் பறவைகளிடமும் உண்டு. ஆனால்  அந்த உணர்வின் அளவு மனிதனிடம் கொஞ்சம் அதிகமாக உள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். தனக்கு வரும் ஆபத்தை முன்னெச்சரிக்கையாய் உணர்ந்து அந்த உணர்விற்கு கட்டுபட்டு நடந்தால் எவ்வித அசம்பாவிதமும் நடக்காது. ஆனால் அதைபங பொருட்படுத்தாது நடந்தால் அதன் விளைவுகள் வருத்தப்பட்டதாகவும் அமையும். அந்தக் கருத்தை நேர்மறைச் சிந்தனை என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இக்கருத்தை மையமாகக் கொண்டு சில சிறு கதைகள் இந்தக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

  உயிர் பெற்று எழுத்த சிங்கம்:

  ஒரு நகரத்தில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். நால்வரும் பிராமண குலத்தைச் சேர்ந்த வாலிபர்கள். இவர்களில் மூன்று வாலிபவர்கள் வேதங்களை நன்கு கற்றறிந்தவர்கள். ஆனால் பொது அறிவு ஞானம். இல்லாதவர்கள், நான்காவது வாலிபர், இந்த மூவர் போல் வேதங்களைப் பற்றிய அறிவில்  சிறந்தவனாக இல்லாவிட்டாலும்  பொது அறிவில் ஞானம் பெற்றவன்.முதல் மூவர்  ஒருநாள் தங்கள் திறமையை அரசன் பாராட்டும் படியான ஒரு செயலைச் செய்ய வேண்டும்.அல்லது தங்கள் அறிவுத்திறமையால் அதிகம் பொருள் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினர். நான்காம் வாலிபவர் தம்மையும் உடன் அழைத்துச் செல்லும் படி மன்றாடிக் கேட்டுக் கொண்டான். அந்த மூவரில் ஒருவன், நம்பணாகப் பழகிவிட்டான். அதனால் அவனை விட்டுச் செல்வது சரியில்லை உடன் அழைத்துச் செல்வோம் என்று சொல்ல அனைவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.

  அவ்வாறு செல்லும் போது ஒரு காட்டில் சிங்கத்தின் எலும்புகள் கிடைப்பதைப் பார்த்தனர். முதல் வாலிபன் தன் மந்திரத்தால் எலும்புகள் ஒன்று சேர்ந்து சிங்கத்தின் எலும்புக்கூட்டை உருவாக்கினான். இரண்டாம் வாலிபன் தன் மந்திரத்தின் மகிமையால் அதற்கு தசை மற்றும் தோல் உண்டாக்கும் படி செய்தான். மூன்றாம் வாலிபன் தன் மந்திரத்தால் உயிர் கொடுக்க எண்ணி அதற்கான சடங்குகளைச் செய்ய ஆயுத்தமானான். அப்பொழுதுநான்காம் வாலிபன் நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் முயற்சியால் சிங்கம் உயிர் பெற்று விடும். பின் அது நம் அனைவரையும் கொன்று விடும் என்று வலிவுறுத்தினான். ஆனால், அவர்கள் தங்களின் அறிவுத்திறமையைக் கண்டு அவனுக்கு பொறாமை என்று கூறி அவனை கேலி செய்தார். பின் அவன், அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அதன்படி செய்யுங்கள் என்று கூறினான். நான் அந்த மரத்தில் ஏறிக்கொள்கிறேன். அதன்பின் அந்த முன்றாம் வாலிபர் தன் சடங்குகளைத் தொடரட்டும் என்றான். அதன் படி அவன் மரத்தில் ஏறியதும்  மூன்றாம் வாலிபன் சடங்குகளைச் செய்ய சிங்கத்தின் உயிரற்ற உறுப்புகள் உயிர் பெற்றன. இதைக் கண்டு நம் முயற்சியில் வெற்றி பெற்று விட்டோம் என்று கொண்டாடும் தருணத்தில் உயிர் பெற்ற சிங்கம் அவர்களைக் கொன்றுவிட்டது. சிறிது நேரம் கழித்து நான்காம் வாலிபன் சிங்கம் அங்கிருந்து செல்வதைப் பார்த்த பின் மரத்திலிருந்து கிழே இறங்கி வந்து பார்த்தான். நண்பர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து வருத்தப்பட்டான். பின் அவன் மட்டும் ஊருக்குத்திரும்பிச் சென்றான். அவனது உள்ளணர்வு அவனைக் காப்பாற்றிது.

  இந்த இதழை மேலும்

  துணிவே வெற்றி

  தினசரி பத்திரிக்கைகளில் ஏதாவது ஒரு பகுதியில் தற்கொலை என்ற தலைப்பில் செய்தி வராமல் இருந்தது இல்லை. செய்திதாளின் பெயர் இல்லாமல் தினசரி பத்திரிக்கை இல்லையோ அதுபோல் தற்கொலை என்ற செய்தியில்லா செய்தித்தாளே இல்லை. இப்படி செய்திதாளில் தினமும் இடம் பெறுவதற்கான காரணங்களை மேலோட்டமாக பார்த்தால் வெவ்வேறாக தோன்றலாம். குக்கிராமத்தில் இருந்து படிப்பு சதவீதம் அதிகமுள்ள நாகரீக  நகரம் வரை தடையின்றி பரவியிருக்கும் ஒருவித மனநிலை பாதிப்புக்கான வெளிப்பாடாக இருப்பது தற்கொலை நிகழ்வுகள். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது நாம் வாழும் சமுதாயத்தை அச்சப்படுத்த வைக்கிற புள்ளியல் விபரமாக இருக்கிறது. நாட்டின் உயர்கல்வி வழங்ககூடிய கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மத்தியிலும் தற்கொலை நிகழ்வு நடக்கிறது என்றால் நினைத்துப்பாருங்கள். கல்வி, வாழ்க்கையை சீர்செய்ய எப்படி பயன்பட வேண்டுமோ அப்படி பயன்படுத்தபட்டிருக்கிறதா என்றால் இல்லை.  கல்வியின் குறைபாடா, கற்பிக்கும் விதத்திலா அல்லது கற்றுக்கொள்வதில் உள்ள குழப்பமா? ஏன் இப்படிப்பட்ட நிகழ்வுகள்? சமீபத்திய செய்தி 7ம் படிக்கும் மாணவி ஆசிரியர் திட்டியதால் தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை. சமுதாய நல்லொழுக்க பாதை என்ற மனிதத்தை கொலை செய்கிற கொடுமை. ஏன் இந்த மனநிலை?

  தற்கொலை செய்துகொண்டதை நியாயபடுத்தி- தற்கொலை செய்தகொண்டவருக்கான தீர்வு அது தான் என யாரும் ஆமோதிப்பதும் இல்லை ஆதரிப்பதும் இல்லை. சரி தற்கொலை செய்துகொண்ட ஒருவரது விருப்பத்தை பூர்த்திசெய்துகொள்வதற்கான வாய்ப்பாக கருதி செய்துகொண்டிருக்கலாம் எனவும் கருத முடியாது. ஏன் என்றால் தற்கொலை விரும்பி செய்து கொள்வதில்லை.மாறாக விருப்பத்திற்கு எதிராக கட்டாயபடுத்திக்கொண்ட ஒரு செயலாகும். அதனால் தான் அது தற்செயலாக இல்லாமல் தற்கொலையாக மாறி இருக்கிறது. இந்த நிகழ்வுகள் முன்னேறமடையாத முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளா என்றால் இல்லை. மாறாக நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற வெள்ளையர்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு தற்கொலை நடக்கிறது என்றும் பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என உளவியல் சார்ந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஏன் இப்படி?

  எந்த ஒரு செயலுக்கும் அதனை செய்தவருக்கும் அல்லது அவர்மீது செயல்படுத்தப்பட்டதற்கும் அவர் சார்ந்த சூழல் முக்கிய காரணியாக இருக்கும். தற்கொலை என்பது தன்னைத்தானே கொலை செய்து கொள்கிற ஒரு குற்றம் என்ற உணர்வு தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இல்லை என கூறலாம். பொதுவாக ஒரு குற்றத்தை செய்யும் போது தோன்றும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கண்ணோட்டம் தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்களிடமிருந்துபெறப்பட்டவாக்குமூலம் நிரூபிக்கும். பொதுவாக மனநலமின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் தற்கொலைக்கான இலக்காக இருக்கிறார்கள். உலகத்தில் 6,50,000 பேர்கள் ஆண்டுதோறும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் அதில் அரைமில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்கொலையால் உயிர் இழக்கிறார்கள். என்ன கொடுமை இது ?

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி…?

  வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் நிச்சயம் தேவைதானா? அவர்களால் நம்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை, என்று பொதுவான கருத்து நிலவி வருகிறது. அது பற்றிச் சொல்லுங்கள்?

  மதியழகன்

  ஆசிரியர், விருதுநகர்.

  வட மாநிலத்தவர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வேலை செய்வதைப் பார்க்கிறோம். அவர்கள் சென்னை, கோவை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல இப்போதெல்லாம் கிராமங்களில் விவசாய கூலி வேலை கூட செய்கிறார்கள்.

  வடநாட்டார் ஏன் வரவேண்டும்? 

  இந்திய அரசியல் அமைப்பு, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பல உரிமைகளையும், சுதந்திரங்களையும் வழங்கியுள்ளது. எந்த குடிமகனும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் (ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர்த்து) என்று அரசியல் சாசனம் கூறுகிறது. ஆக, வடமாநிலத்தவர் இங்கு வந்து வேலை செய்வது அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எனலாம். இதில் சட்ட சிக்கல் ஏதுமில்லை.

  வடநாட்டவர் தென்நாட்டில் ஏன் வேலை செய்ய வேண்டும்? அவர்களுக்கு அங்கு கிடைக்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் இங்கு கிடைக்கக்கூடும், அதோடு அவர்களது மாநிலங்களில் வேலைகளும் இருக்காது. வாழ்ந்தாக வேண்டும், உழைக்க மனது இருக்கிறது; எனவே ஆயிரம் மயில்கள் கடந்து இங்கு வந்து வேலை செய்கிறார்கள். இதில் அவர்களைக் குறை சொல்ல முடியாது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளாவிற்கும், பெங்களூருக்கும், மும்பைக்கும், டில்லிக்கும் வேலைக்குப் போனார்கள், அது போலத்தான் இதுவும்.

  தமிழ் நாட்டவர் ஏன் வேலை செய்யவில்லை:

  தமிழ்நாட்டில் அனைவருக்கும் இன்று வேலை கிடைத்து விட்டதா என்றால், இல்லை என்பது தான் பதிலாக வரும். படித்தவர்கள் 85 லட்சம் பேர் வேலை கேட்டு  விண்ணப்பித்து இருக்கிறார்கள். படிப்பறிவு இல்லாத பல லட்சம் பேர்கள் இங்கே சும்மாதான் இருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அப்படி இருக்க இன்று தமிழ்நாட்டு விவசாயியைக் கேளுங்கள், விவசாய வேலை பார்க்க ஆள் கிடைப்பதில்லை என்கிறார். தொழிலதிபரைக் கேளுங்கள், வேலை தெரிந்த ஆள் கிடைப்பதில்லை என்கிறார். இதே சூழ்நிலைதான் ஒரு செங்கல் சூழையிலும்; கட்டிடம் கட்டும் இடத்திலும் இருக்கிறது.

  இப்படியாக, தமிழ்நாட்டில் உருவாகியிருக்கும் வேலைகளைச் செய்ய தமிழ்நாட்டவர் ஏன் முன்வரவில்லை என்று விசாரித்தால், மூன்று காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று கூலி வேலை என்பது கவுரவமில்லாத வேலை என்று கற்பிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையிலிருந்து மீளவே மக்கள் விரும்புகிறார்கள். இரண்டாவது, சம்பளம் மிகக் குறைவாக இருக்கிறது என்பது. மூன்றாவது காரணம், நம் மாநிலத்தவர்கள் பலர் படித்துவிட்டார்கள், எனவே இது போன்ற உடலுழைப்பு வேலை செய்யத் தயங்குகிறார்கள் என்பது.

  படித்ததால் வேலை போச்சு : 

  இப்படி தமிழ்நாட்டவர் படித்துவிட்டதால் உடலுழைப்பு வேலை செய்ய தயங்குகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அப்படி படித்துவிட்டவர்களுக்கு அறிவுப்பூர்வமான ஒரு வேலை செய்யத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! அதாவது அவர்களுக்கு ஒரு மொழியைக் கற்பிக்கத் தெரியுமா? ஒரு இருசக்கர வாகனத்தைப் பழுது பார்க்கத் தெரியுமா? இறால் குஞ்சு வளர்க்கத் தெரியுமா? அல்லது ஒரு கணினியைப் பழுது பார்க்கத் தெரியுமா, என்றால் இல்லை. இது போன்ற பணிகள் கூட இன்று வடநாட்டவர்கள் இங்கு வந்து செய்கிறார்கள். இன்று புதிதாக வந்துள்ள NEET என்ற மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு நம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வடநாட்டவர்கள் இன்று வந்துள்ளனர். பயிற்சியளிக்க வேண்டிய படித்து பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பட்டதாரிகள் எங்கே போனார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

  பொறாமை : 

  பிற மாநிலத்தவர் வந்து பணி செய்வது மும்பை, பெங்களூர், டில்லி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தங்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைகளை பிற மாநிலத்தார் செய்வதை, அதுவும் இன்னும் சிறப்பாகச் செய்வதைக் கண்ட உள்ளூர் சோம்பேறிகள் விரும்புவதில்லை. வெளிமாநிலத்தவர் ஒருவர் ஒரு குற்ற செயலில் ஈடுபட்டால் அம்மாநிலத்தவர் அனைவரும் குற்றச் செயல் செய்பவர்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி விடுகிறார்கள். சில உள்ளூர் குற்றவாளிகள் அந்த அப்பாவிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்திவிடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் கும்பல் கும்பலாக வெளியேறிய சம்பவங்கள் உண்டு.

  ஆடிடும் ஓடமாய் வாழ்க்கை : 

  இப்படிப்பட்ட அவமானத்திற்கும், தாக்குதலுக்கும், ஆபத்திற்கும் இடையில் வடமாநிலத்தவர் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது என்றால் அவர்களது உழைப்பு உள்ளூரில் தேவைப்படுகிறது. விவசாயம் செய்பவர்களுக்கும், செங்கல் சூழை நடத்துபவர்களுக்கும், தொழிற்சாலை முதலாளிகளுக்கும், கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர்களுக்கும் இவர்களது உழைப்பு கண்டிப்பாக வேண்டும் என்ற நிலை உள்ளது. அவர்களே இந்த வடநாட்டாரை வரவழைத்து தங்க வைத்து, பராமரிக்கிறார்கள்.

  இந்த இதழை மேலும்

  உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….

  தேக்கம்பட்டி சிவக்குமார், சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்ட்

  Catering Owners Association, செயற்குழு உறுப்பினர்

  தந்தை பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் புரவலர்

  கோவை மாவட்ட அமெச்சூர் கபாடிகழக இணை செயலாளர்,

  தேக்கம்பட்டி, கோயமுத்தூர்

  ஆரோக்கியமே மனித இனத்தின் தேவைகளில் ஒன்று. அதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் அக்கரைச் செலுத்தினாலே வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழலாம். அந்த வகையில் சிறந்த முறையில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே தயாரித்து இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்றமாநிலங்களில் இவரின் கைவண்ணத்தை சுவைக்காதவர்கள் யாருமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு சிறந்த உணவுத்தயாரிப்பாளர்.

  இங்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் உண்டு. ஆனால் பணத்தை விட மனிதர்களின் நலம் தான் சிறந்தது, ஆகையால் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட எண்ணெய், உணவிற்குத் தேவையான மற்றப் பொருட்கள் போன்றவை  பழமை மாறாமல் தயாரித்து அதன் மூலம் உணவைக் கொடுத்து வருபவர்.

  உலக இலக்கியம் தொடங்கி உள்ளூர் இலக்கியம் வரை அனைத்தும் கற்றுக் கொண்டு தன்னைச் சந்திக்க வருபவர்களிடம், தன்னிடம் பணியாற்றுபவர்களிடமும் நம்பிக்கை விதையை நாளும் விதைத்துக் கொண்டேயிருப்பவர்.

  கொடுத்த வாக்கில் உண்மை, நேரம் தவறாதிருத்தல், கடின  உழைப்பு, மற்றவர்களுக்கு மனமுவந்து உதவும் மனப்பான்மை போன்றநற்குணங்களே இவரின் அடையாளம்.

  சிறந்த சமையல் கலை வல்லுநர், தலை சிறந்த மேலாண்மைத்துவமிக்கவர், தேக்கம்பட்டி சிவக்குமார் சமையல் குரூப்ஸ் மற்றும் ரெஸ்டாரண்டின் நிறுவனர், இப்படி பன்முகத்திறமை வாய்ந்த தேக்கம்பட்டி சிவக்குமார் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

  கே: உங்களின் இளமைகாலத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

  கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகிலுள்ள தொட்டதாசனூர் என்னும் குக்கிராமம் தான் என்னுடைய ஊர். ஆனால் நான் பிறந்தது என்று பார்த்தால் என்னுடைய தாயின் ஊரான சாலைவேம்பு என்னும் ஊர். இங்கு தான் என்னுடைய தொடக்கக் கல்வி ஆரம்பித்தது. ஆனால் நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது உடல் நலம் பாதிக்கப்பட்டேன். அதனால் தொட்டதாசனூர் ஊருக்கே வந்துவிட்டேன். ஏழாம் வகுப்பு வரை இங்குள்ள அரசுப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை புஜ்ங்கனூரில் படித்தேன்.

  என்னுடைய தந்தை கரும்பாலைத் தொழிலைச் செய்து வந்தார். அவ்வளவு வருமானம் இல்லாத தொழில். ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு போதுமானதாக இருந்தது. நான் படிப்பில் சராசரி மாணவன் தான். எந்த வகுப்பிலும் தோல்வி அடையாமல் வெற்றி பெற்று விடுவேன்.

  கே: சமையல் கலையின் மீது ஆர்வம் எப்படி வந்தது?

  என் தாயின் தந்தை நடேசன். அவர் சமையல் சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தார்.இவர் ஒரு சிறந்த சமையல் தயாரிப்பாளர், அவரின் கைப்பக்குவம் அக்கிராமம் சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் பிரபலம். உணவை நாவில் சுவைத்துப் பார்க்காமலேயே வாசனையை வைத்து அவ்வுணவில் உள்ள நிறைக்குறைகளைச் சொல்லிவிடுவார்.

  நானும் சின்ன வயதிலிருந்தே இவர்களுடனே இருந்ததால் எனக்கும் இவ்வார்வம் வந்துவிட்டது என்றேசொல்லலாம். சின்ன வயதிலிருந்தே நாம் எதைப் பார்த்து வளர்கிறோமே அது நம் வாழ்வில் பின்னிபிணைந்து விடும். படிக்கின்றகாலத்தில் விளையாட்டைக்கூட மறந்து என்னுடைய தாத்தாவின் உடன் வேலைக்குச் சென்றுவிடுவேன்.

  பள்ளியில் ஆசிரியர்கள் கேட்கும் பொதுவான கேள்வி. எதிர்காலத்தில் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நிறைய பேர் ஆசிரியர்,மருத்துவர், ஆட்சியர் என்று அவரவர்கள் விருப்பதைக் கூறினார்கள். ஆனால் என்னைக் கேட்கும் பொழுது சற்றும் யோசிக்காமல் நான் சமையல் கலை நிபுணராக வரவேண்டும் என்று கூறினேன். இதைக் கேட்டு வகுப்பில் உள்ள மற்றமாணவர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் என்னுடைய மருதன் ஆசிரியர் எனக்கு அப்போதே ஊக்கம் கொடுக்கும் படி பேசினார்.

  கே: உங்களின் முதல் கேட்ரிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

  தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்ததால், இவர்கள் செய்த தொழில்  என் குருதியோடு கலந்து விட்டது. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கின்றபொழுது தனியாக ஒரு ஆர்டர் கிடைத்தது. இதை என்னுடைய தந்தையிடம் சொன்னேன். அவருக்கு ஒரு புறம் சந்தோஷம் என்றாலும் மறுபுறம் சற்று பயம் இருந்தது. திருமணம் வீட்டிற்கு சமைத்தல் என்பது சாதாரண காரியம் இல்லை, இதனால் என் பெரியம்மா சின்னப் புதூர் (சமையல் கலைஞர்) அவர்களை என்னுடன் என் தந்தை அனுப்பி வைத்தார்.

  ஆனாலும் என்னால் எதுவும் செய்ய முடியும் என்றநம்பிக்கை இருந்தது. காரணம் நான் கற்றுக் கொண்டது என்னுடைய தாத்தாவிடமிருந்து. என்னுடைய பெரியம்மாவிடம் நானே முழுவதுமாகப் பார்த்துக் கொள்கிறேன். ஏதேனும் தடுமாறும் சூழலில் எனக்கு உறுதுணையாக இருந்தால் போதும்  என்று சொல்லிவிட்டேன். அவர்களும் என்னுடைய பேச்சை மதித்து என்னை சுதந்திரமாக முடிவெடுக்க விட்டார்கள். என்னுடைய முதல் முயற்சி பெருத்த வெற்றி சாப்பிட்டவர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டினார்கள். இது எனக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அதன் பிறகு அப்பகுதியில் என்னுடைய சமையலைப் பரவலாகப் பேசத் தொடக்கிவிட்டார்கள். திருமணம், காதணிவிழா, வலைகாப்பு,  பண்டிகைப் போன்ற விழாக்களுக்குத் தொடர்ந்து ஆர்டர் வர ஆரம்பித்தது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  கே: சமையலுக்கான வேலையாட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பீர்கள்?

  இது மிகவும் முக்கியமான ஒன்று. நான் தேர்ந்தெடுக்கும் அத்துணை வேலையாட்களும் என்னை விட வயதில் குறைந்தவர்களாகவே தேர்ந்தெடுப்பேன். காரணம் என்னுடைய சமையலுக்கென ஒரு தனியான ருசியை வைத்திருப்பேன். அதை மட்டுமே முறையாக பயன்படுத்துவேன்.

  அனைவரிடத்திலும் ஆலோசனையும், கருத்துக்களையும் கேட்பேன் ஆனால் முடிவெடுப்பது நானாக மட்டுமே இருப்பேன்.

  நாங்கள் தென்னிந்தியா, வடஇந்தியா போன்ற உணவுகளையும் தயாரித்து வருகிறோம். அப்படியிருக்கும் போது அது சம்மந்தமான உணவு தயாரிப்பு வல்லுநர்களை பணிஅமர்த்தி அவர்களை என்னுடைய ருசிக்கு ஏற்றார் போல் அவர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கி வருகிறோம்.

  கே: உங்கள் கேட்ரிங் சென்டரின் தனித்தன்மைகள் என்ன?

  எந்த ஒரு நிறுவனமும் தனித்தன்மை பெறவேண்டும் என்றால் மற்றநிறுவனத்தை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் எங்கள் சென்டர்  மாறுபட்டதாக காணப்படுகிறது.

  1. உணவு பரிமாறும் பொழுது உணவின் வரிசை முறைஒழுங்காக வரிசைப்படுத்தி பரிமாறுவதற்கு ஏற்றவகையில் முன்கூட்டியே அமைத்துவிடுவோம்.
  2. சமைப்பவர் முதல் பரிமாறும் அனைவருக்கும் ஓரே நிறத்தில் சீறுடை கொடுத்திருக்கிறோம்.
  3. நாங்களே சொந்தமாக தயாரிக்கப்படும் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களைத் தயாரித்து அந்தப் பொருள் மூலமே தயாரித்து வருகிறோம்.
  4. சமைக்கும் பாத்திரம் அனைத்தும் காப்பர் பித்தளை பாத்திரங்களையே பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு சமையல் முடிவுக்கு பின்னர் ஈயம் பூசி அதற்கு பின்னரே பயன் படுத்தோம்.
  5. அலுமினியம் பாத்திரம், அஜனமோட்டோ போன்றவற்றைநாங்கள் பயன்படுத்தில்லை.
  6. எங்களிடம் 50 ஆயிரம் பேருக்கு சமைக்ககூடிய பாத்திரங்கள் பணியாளர்கள், உணவைக் கொண்டு செல்ல தனித்தனி வாகன வசதிகள் போன்றவை இருக்கின்றன.
  7. அசைவம் மற்றும் சைவம் இரண்டையும் சிறந்த முறையில் தயாரித்துக் கொடுக்கிறோம்.

  இப்படி எண்ணற்றதனித்தன்மைகள் இருக்கிறது. நாங்கள் முற்றிலும் குறைந்த விலையில் அதிக ருசி ஏற்படக்கூடிய அளவில் தான் எப்போதும் உணவைத் தயாரித்து கொடுக்கிறோம்.

  வாடிக்கையாளர்களின் மனநலனும், உடல் நலனுமே எங்களைப் பொருத்த வரையில் முக்கியமாகக் கருதுகிறோம்.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  முன்னொரு காலத்தில் லினோர்டா டிவின்ஸி என்ற புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். அவர் பல சிற்பங்களை செதுக்க ஆரம்பித்து அவற்றை பூர்த்தி செய்யாமல் நடுநடுவே விட்டுவிடுவாராம்.

  அவர் சிற்பத்துறையில் மட்டும் திறமைக் காட்டவில்லை. ஓவியம், பொறியியல் போன்ற துறையிலும் ஈடுபட்டிருந்தார். அவர் செய்து முடித்த வேலைபாடுகள் அனைத்தும் மக்கள் போன்றும் விதமாக ஆச்சரியம் தரும் வகையில் இருந்தது. அதே நேரத்தில் அவர் துவங்கிய சில வேலைப்பாடுகள் இடையில்  முடிக்காதவைகளையே சிந்தித்து ஏமாற்றம்  அடைந்தார்கள்.

  அந்த ஏமாற்றத்தைப் போக்கும் விதமாக மைக்கேல் ஏஞ்சலோ என்ற அழகிய சிற்பத்தை வரைந்து உலக அளவில் மங்காப் புகழைப் பெற்றார்.

  இவரைப் போல தான் நம்மில் பலர், ஒரு சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முற்படுகிறோம். ஒரு வேலை பூர்த்தி ஆகும் முன்னரே மற்றொரு வேலையில் ஈடுபட முன் வருகிறோம்.

  இதனால் முன் தொடங்கிய வேலையும் முடியாமல், புதியதாய் தொடங்கியதிலும் சுணக்கம் கொள்கிறோம். இதனால் தான் தேவையில்லால் பிரச்சனை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது.

  பல தொழில் செய்வதில் தவறு இல்லை, ஆனால் ஒரு தொழில் தொடங்கினால் அதில் முழு சாதனையும் பெற்ற பின்னர் தான் அடுத்த வேலையைத் தொடங்க வேண்டும். லினோர்டா டிவின்ஸி பல வேலைகள் செய்திருந்தாலும் அவரை உலகத்திற்கு காட்டியது அவரின் முதல் வேலையான சிற்பக் கலை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாதிப்பு நம்மை வந்தடையும். நாமும் சாதிப்பு பக்கத்தில் ஒருவராய் திகழலாம்…