Home » Articles » தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்

 
தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்


வித்யாசாகர்
Author:

இந்த உடல் வரம். இந்த உயிர் வரம். இந்த வாழ்க்கை இனிது. நம்மிடமிருக்கும் இந்த ஆற்றல் வலிது. உலகை மடித்து உள்ளங்கைக்குள் மூளையால் அடக்கிக் கொண்டது அறிவியல் எனில் ஒரு விரலால் தாங்கிநிற்கும் பலத்தை மனதால் உடலால் பெறமுடியும். அதெப்படி என்று சந்தேகிப்பீரெனில் ஒரு தீக்குச்சியை எடுத்து வெய்யிலில் போடுங்கள், அது உடனே எரியுமா? எரியாதுதானே? அதே ஒரு லென்ஸ் எடுத்து சூரிய ஒளியை அந்த தீக்குச்சியினுடைய மருந்தின்மீது குவியுமாறு காட்டிப்பாருங்கள், அந்த தீக்குச்சி உடனே தீப்பற்றி எரியும், காரணம், “எங்கு சக்தியானது ஒருமித்துக் குவிக்கப்படுகிறதோ அங்கிருந்து வேறொரு அதீத சக்தி விரைவாக வெளிப்படுகிறது”.

ஆக, அப்படி, எண்ணத்தை குவித்து திறமையை வெளிக்கொண்டுவரல் என்பதொரு கலை. அந்தக் கலையைத்தான் தியானம் வழியே நிகழ்த்தி உடலைத் தனியாகப் பார்க்கவும், மனதை தனியாக அசைக்கவும் நம் பெரியோர் கற்றுத் தந்துள்ளனர்.

தியானம் என்பதில் பலர் பலவாறு சொன்னதும், அங்ஙனம் அவரவர் வென்றதுமாய் நி றையப் புத்தகங்களும் செவிவழி பாடமும் பயிற்சியும், உண்மையின் குறிப்புகளுமென ஏராளமுண்டு. அவைகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே நமக்கு மனதின் எண்ணத்தைக் குவித்து செயலை வெற்றியாக வெளிக்கொண்டுவர ஒரு இலகுவான பயிற்சி தேவைப்படுகிறது. ஆடும் மனதை அடக்கி அலைபாயும் எண்ணத்தை சீராக்கி ஒரே இடத்தில் நிறுத்தி, வேண்டுவதையெல்லாம் பெறும் சக்தி மனிதனிடம் உண்டென்பதை அறிய இத்தகையப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.

தன்னை தானறியும் மனிதன், செருக்கோடு அலைந்தால் பூமி தாங்காதென்று எண்ணிய முன்னோர், உனக்கும் மேல் ஒருவன் உள்ளான் அவனை நம்பு எல்லாம் நடக்குமென்று இயற்கையின் சக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாக  கடவுள் நம்பிக்கையை முன்வைத்து, எல்லாம் அவன் செயலென்று கற்பித்ததன்பேரில்; நம்பிக்கையின் முதன்மை தன்மையென்பது இறையினிடத்து ஒன்றே என்றாகி, அது பின்னர் பலவாக மாறி, இன்று தனையே மறக்கும் நிலைக்கு நாம் வரப்பட்டுள்ளதையும் நாம் அறியவேண்டும்.

ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பி வருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.

பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்