Home » Articles » மௌன அநீதி

 
மௌன அநீதி


சுவாமிநாதன்.தி
Author:

இன்றைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, நகர மயமாக்கல், உலகமயமாக்கல், கணினி, பேஸ்புக், செல்போன் எல்லாம் சேர்ந்து ஆணும், பெண்ணும் பழகுவதற்கு நிறைய வாய்ப்புகளை வாரி வழங்கியிருக்கிறது. தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாத அளவுக்கு காதல் திருமணங்கள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. வயது வந்த ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ நிச்சயமாக உரிமை உள்ளது. ஆனால், காதல் மணம் புரிபவர்கள் அதற்கு கொடுக்கும் விலை மிகவும் அவலமானது என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும்.

25.05.2014 அன்று 25 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, லாகூர் உயர்நீதி மன்றத்துக்கு வெளியே சொந்த குடும்பத்தாரால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக கவனத்தை பெரிதும் ஈர்த்தது. குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. பெண் உயர்ந்த சாதியாகவும், ஆண் தாழ்ந்த சாதியாகவும் இருந்து விட்டால் தம்பதிகளை பிரித்து வைக்கவும், ஊர் நீக்கம் செய்யவும், தற்கொலைக்கு தூண்டவும் கூட சிலர் தயாராகி விடுகின்றனர். சில நிகழ்வுகளில் பல அப்பாவிகள் கௌரவ கொலைக்கு ஆளாகின்றனர்.

உலகில் நடக்கும் கௌரவ கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெறுகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. கோவில் திருமணம் செய்து கொண்டு, பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு வாழ்வைத் துவங்கினாலும் சொந்த குடும்பத்தாரால் புறக்கணிக்கப்படுதல் போன்றகௌரவ சித்ரவதைகளை சந்திக்க நேருகிறது. சில பெற்றோர் தங்களுக்கும், மகளுக்கும் எந்த உறவும் இல்லை எனவும், சொத்தில் பங்கு தர மாட்டோம் எனவும் காவல் துறையில் எழுதித் தருபவர்களும் உள்ளனர். நாகரீக நிலையை நமது சமூகம் இன்றும் அடையவில்லை. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையில் தலையிட வேறு யாருக்கும் உரிமை இல்லை என்றநிஜத்தை ஏற்க மனப்பக்கு வமில்லை.

இன்னமும் பெண்கள் ஆண்க ளைவிட கீழானவர்களாகவே சமூகத்தில் பார்க்கப்படுகிறார்கள். இந்தியச் சட்டப்படி திருமண வயதில் இருக்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையை சுயமாகத் தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது. இதில் யாருமே சட்டப்படி தலையிட முடியாது. பிள்ளைகளுக்கு ஆலோசனை சொல்லலாம். தோழமையோடு அறிவுரை சொல்லலாம். மற்றபடி, கொலை செய்யவும், தண்டிக்கவும் பெற்றோருக்கு உரிமையில்லை.

மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நம் குடும்ப உறுப்பினர்க்கு (நோயாளிக்கு) ரத்தம் தந்தவர் யார் என்று பார்ப்பதில்லை. ஆனால் திருமணத்தில் மட்டும் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. கௌரவ கொலைகள் மிகவும் காட்டுமிராண்டித் தனமானது. பெரும்பாலும் ஜாதி, மதம் காரணமாகவே கௌரவ கொலைகள் செய்யப்படுகின்றன. மகனோ, மகளோ செய்தது பிடிக்கவில்லை என்றால் அதிகபட்சம் உறவை முறித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான். இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சினை. உலகம் முழுவதும் இந்த சிக்கல் உள்ளது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்