Home » Articles » அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23

 
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23


மோனிகா கே. எம்.
Author:

ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல் 23ஆம் தேதியை ‘உலகப் புத்தக தினமாகவும்’, இந்த நூற்றாண்டின் முதல் ஆண்டாகிய 2001-ஐ ‘உலகப் புத்தக ஆண்டாகவும்’ அறிவித்தது.  இந்திய அரசும் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கவும், நூலகப் பயன் அனைவருக்கும் கிடைத்திடவும் 2001-ஆம் ஆண்டைப் புத்தக ஆண்டாக அறிவித்தது.  உலக நாடுகள் அனைத்தும் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றன,  ஏப்ரல் 23ம் தேதியின் முக்கியத்துவம் என்னவென்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியருடைய பிறந்த மற்றும் மறைந்த தினமாகும்.

மற்ற உயிரினங்களின் வாழ்க்கையில் தலைமுறைகள் மாறினாலும் வாழ்க்கை முறைகள் மாறாமல், தொடங்கிய இடத்திலிருந்தே மீண்டும் மீண்டும் தொடங்குகிறது.  ஆனால் மனிதனின் வாழ்க்கை மட்டும்தான் ஒரு தலைமுறை விட்ட இடத்திலிருந்து அடுத்த தலைமுறை வாழ்க்கையைத் தொடங்குகிறது.  மனிதன் தன்னுடைய வாழ்க்கையை வரலாறாக நூல்களில் பதிவு செய்து செல்வதன் காரணமாகத்தான் இது சாத்தியமாகிறது.

வாசிப்பு

மனிதனுக்கு மூளை இயல்பாகவே வளரும். ஆனால் அறிவு வளர வேண்டுமெனில் வாசிப்பும் அவசியம்.  வாசிப்பது ஒர் அற்புத அனுபவம். அது புதியதொரு உலகைத் திறந்து காட்டும்.  பல புதிய, அரிய தகவல்களை அள்ளித் தரும்.  நாடுகளின் எல்லைகளையும், வரலாற்றையும் மாற்றி அமைக்கும் மகா பலம் பொருந்தியது புத்தகங்கள். பல புத்தகங்கள் உலகையே உலுக்கி எடுத்துள்ளன.

வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி, நினைவுத் திறனை அதிகரிக்கிறது.  படிப்பவர்களின் கற்பனையையும் அறிவையும்  புத்தகம்  வளர்க்கிறது,  காட்சி ஊடகங்களைப் போல புத்தகத்தில் உள்ளவை ஒரு முறையுடன் மறைந்துவிடுவதில்லை. அது காலம் காலமாகப் புதிய புதிய  அர்த்தங்களைத் தந்து கொண்டே இருக்கும்.

பாட நூல்களைப் படிப்பது பெரும்பாலும் அதிக மதிப்பெண் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் குறித்த பல அறிஞர்களின் கருத்துகளை வழங்குகிறது.  ஒருவனது வாழ்வு நல்வாழ்வாக அமைய அடித்தளம் அமைப்பது அவனது நற்குணங்களே. அந்த நற்குணங்களைத் தேடித்தருவதில் பெரும்பங்கு வகிப்பது நூல்களே.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்