வெற்றி உங்கள் கையில் -52 - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை

Home » Articles » வெற்றி உங்கள் கையில் -52

 
வெற்றி உங்கள் கையில் -52


கவிநேசன் நெல்லை
Author:

கருத்துக்களை களம் இறக்குவோம்

சிலர் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை ‘உளறல் பேர்வழி’ என்று இந்த உலகம் முத்திரைக் குத்திவிடும். ‘ஸ்பீக்கர்’ என்றும் அவர்களுக்கு பட்டப்பெயர் வைத்தும் சிலர் மகிழ்வார்கள். ‘வாயாடி’ என்று சொல்லி நெஞ்சம் நிறைய வஞ்சம் வைத்து சிலர் வசை பாடுவார்கள்.

“பேசினால் பெருங்குற்றம். ஏன் மற்றவர்களிடம் பேசித் தொலைக்கவேண்டும்” என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஆழமாக மனதில் பதித்தவர்களும், மற்றவர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிடுகிறார்கள். அவர்களை ‘கல்லூரிமங்கன்’ என்றும் ‘ஊமை’ என்றும் ‘அசையாத பெருங்கல்’ என்றும் அடுக்கடுக்காய் பட்டப்பெயர்கள்; வைத்து இந்த உலகம் மகிழ்கிறது.

“நீங்கள் பேசியது ரொம்ப பிரமாதம்” என்று முகத்தில் பன்னீர் தெளித்துவிட்டு, சற்றுதூரம் நகர்ந்தபின் அவரது பின்புறமாக சாக்கடை நீரை தெளிப்பவர்களும் உண்டு.

இந்த உலகத்தில் எதையும் எளிதில் பேசிவிடலாம். பேசி முடித்தபின்பு, “தெரியாமல் சொல்லிவிட்டேன்” என்றுசொல்லியும் தப்பித்தும் விடலாம். ஆனால், ஒரு கருத்தைப் பிறரிடம் எப்படி பகிர்ந்துகொள்வது? என்பதில்தான் ஒருவரின் வெற்றி அடங்கியிருக்கிறது.

இப்போதெல்லாம் பேசுவதைவிட பலர் எழுதத் தொடங்கிவிட்டார்கள். பேஸ்புக் எழுத்தாளர்களும், வாட்ஸ்அப் எழுத்தாளர்களும், டுவிட்டரில் கருத்தை எழுத்தாக்கி பகிர்ந்து கொள்பவர்களும் அதிகமாகி விட்டார்கள். ‘எண்ணத்தில் தோன்றியவற்றையெல்லாம் உடனே வெளிப்படுத்திவிட வேண்டும்’ என்று துடிக்கும் சிலர், அடுத்தவர்கள் கருத்தையும் ஆராய்ந்து பாராமல் ‘பேஸ்புக்கில் சேர் செய்துவிடுகிறார்கள்.

மின்னல் வேகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மிக எளிதாக மாறிவிட்டது. ஆனால், யாருக்கு எது தேவையோ? அதை மட்டுமே பகிர்ந்துகொள்வதுதான் ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றத்தின் அடையாளமாகத் திகழும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்