Home » Articles » ஆயுளைக் குறைக்கும் உணவுகள்

 
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்


அனுராதா கிருஷ்ணன்
Author:

மகான் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர் அவர்கள் நம் உணவினை மூன்று தன்மைகளாகப் பிரித்துச் சொல்கிறார். முதலாவது சாத்வீக உணவுகளாகும். இவைகள் நம் நற்குணத்திற்கு துணை நிற்பதோடு நம் ஆயுளையும் கூட்டும் நல்ல உணவுகளாகும். அது பற்றித்தான் முந்தைய அத்தியாத்தில் பார்த்தோம். மற்ற இரண்டு வகைகளான இரஜோ மற்றும் தாமச குண உணவுகள் நம் ஆயுளைக் குறைக்கும். இரஜோ வகை என்பது நம் குணத்தை வன்மையாக்கும் காரசார மற்றும் அசைவ உணவுகளாகும். அடுத்து, தாமச குண உணவுகள் நம்மை விரைவாக அழிக்கவல்ல கருவாடு போன்ற கெட்டுப்போன மற்றும் சுண்ட வைத்த புளித்த பழைய உணவுகளாகும். அவ்வித உணவுகளைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

பழைய உணவுகளாகும். அவ்வித உணவுகளைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப் போகிறோம்.

  1. துரித உணவுகள் (Fast Foods): இவ்வகை உணவுகள் அதீதத் தீயில் அதிவிரைவான முறையில் தயாரிக்கப் படுவதால் அவற்றில் உள்ள உயிர்ச் சத்துக்கள் யாவும் அழிந்துவிடுகின்றன. துரித உணவுகளைசூடு ஆறியபின்னர் சாப்பிட்டுப் பாருங்கள். வாயில் வைக்க சகிக்காது. நாம் எவ்வளவு ஏமாளியாக இருக்கிறோம் என்று அப்போதுதான் தெரியும். அதிவிரைவாக சமைத்த உணவுகளை சாப்பிட்டால் அதிவிரைவாகப் போய்ச் சேர வேண்டியதுதான்.
  2. நொறுக்குத் தீனிகள்: இவ்வித உணவுகளிலும் குறிப்பிடும் படியான சக்தி மற்றும் சத்துக்கள் எதுவும் கிடையாது. அதோடு இவைகள் மொறு மொறுப்பாக இருப்பதால், நாக்கில் வைத்தவுடன் உமிழ்நீர் அதிகம் உறிஞ்சப்பட்டு நாக்கின் சுவைத் தூண்டல் அதிகரிக்கப்படுவதால் நாம் இவற்றை அதிகம் விரும்புகிறோம். அதே சமையம் இவ்வித உணவுகள் நம் வயிற்றின் ஈரப்பதத்தை பதம் பார்ப்பதால் மண்ணீரல் செரிமானம் கெட்டு கல்லீரலுக்குச் சக்தி கிடைக்காமல் போகிறது.
  3. குறை உணவுகள் : வெள்ளை ரவை, மைதா, நூடுல்ஸ், எண்ணெய்யில் வதக்கிய உணவுகள் ஆகியன உயிர்ச் சத்துக்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட அல்லது நீக்கப்பட்ட உணவுகளாகும். இவைகள் யாவும் தரமற்ற மாவுச்சத்துக்களாகச் செரித்து சக்தியளிக்க முடியாமல் கழிவாகத் தேங்கும்.
  4. ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் வகைகள்: ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட்களில் ஆரோக்கியத்திற்கு என்று எந்த ஒரு சத்தும் கிடையாது. கெட்ட குளுக்கோஸ் மற்றும் கெட்ட கொழுப்பை மட்டுமே கொண்டுள்ளன. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியானது மண்ணீரல் செரிமானத்தை அதிக அளவு குறைக்கிறது. சாக்லேட்டுகள் கல்லீரல் செரிமானத்தைக் கெடுக்கும்.
  5. இரசாயனம் கலந்த உணவுகள்: பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு பதப்படுத்தும் இரசாயனங்களை உண்ணும் உணவில் சேர்ப்பது என்பது நம் மண்ணீரல் மற்றும் கல்லீரல் செரிமானங்களை கெடுப்பதாகும். ஹோட்டல்களில் நாம் சாப்பிடும் அளவைக் குறைப்பதற்காக சாதத்தில் சமையல் சோடாவை சேர்ப்பார்கள். அதேபோல், எண்ணெய்யில் பொறித்து எடுக்கப்படும் உணவுகள் மொறுமொறு என்று இருக்கவும் சமையல் சோடா சேர்ப்பார்கள். இன்னும் சிலர் நம் கண்ணைக் கவர்வதற்கு விதவிதமான இரசாயனச் சாயங்களை உணவிலும், குளிர்பானத்திலும் சேர்ப்பர். இவையாவும் நம் செரிமானத் தன்மையைப் பதம் பார்க்கும்.
  6. கெட்ட கொழுப்பு உணவுகள்: டால்டா அல்லது வனஸ்பதியில் செய்த உணவுகள், கடலை எண்ணெய், வறுத்த நிலக்கடலை, வறுத்த முந்திரி, அல்வா, உருளைக் கிழங்கு சிப்ஸ், மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் ஆகிய யாவையும் நமக்குச் சக்தியளிக்க முடியாத கெட்டக் கொழுப்பு குப்பை உணவுகளே. இவைகளால் நாம் குண்டாவதோடு விரைவாக முதுமையும் அடைவோம்.
  7. அசைவ உணவுகள்: அசைவ உணவுகள் செரிக்க 12 மணிநேரமாகும். அசைவ உணவுகளின் கழிவுகள் வெளியேற அதிக சக்தி தேவைப்படுவதால் அவை வெளியேற மூன்று முதல் ஏழு நாட்கள் ஆகும். அப்படித் தேங்கும் கழிவுகள் நம் உயிர்ச் சக்தியை விரையமாக்கும். இவ்வித உணவிற்காக உயிர்க் கொலை செய்வதால் உயிரினத்தின் பயப்பதிவானது அதன் கறியில் விஷமாக தேங்கியிருக்கும். இது தேவையா?

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்