Home » Articles » புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது

 
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது


ராமசாமி R.K
Author:

தற்போதைய அறிவியல் கணக்குப்படியும் புள்ளி விபரப்படியுளம்,  பூமியின் சீதோஷ்ண அமைப்பில்  வெப்பம்  அதிகமாகிக்கொண்டுள்ளது என்றும்,  1950 ஆண்டிலிருந்து இந்த  வெப்ப உயர்வு அதிகமாகிக் கொண்டே  வருகிறது என்றும்,  இந்த வெப்ப உயர்வு எதிர்பாராத அளவு  உள்ளது  என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு   IPCC (Inter Governmental panel on climate change ) என்ற அமைப்பு தன்னுடைய ஐந்தாவது கணக்கீட்டு அறிக்கையில் இந்த வெப்ப நிலை  உயர்வுக்கு மனிதத் தாக்கம்தான்  முதன்மையான மற்றும் முக்கியமான காரணம் என்று தெரிவிக்கிறது,   வீடுகளில் சமையலறைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களான  கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடும் தான் இதற்குக் காரணம் என்று  சொல்கிறது.  அந்த அறிக்கையில் 21ம் நூற்றாண்டில் பூமியைச் சுற்றியுள்ள வெப்பநிலை குறைந்த அளவாக  0.3 யிலிருந்து  1.7  டிகிரி  செல்சியஸ்ன ( 0.5 to  3.1 ° F)  வரையும், அதிக அளவாக 2.6  யிலிருந்து  4. 8 டிகிரி  செல்சியஸ்ன   (4. 7 to  8.6 ° F)  வரையிலும்  உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   அனைத்து நாடுகளின்  அறிவியல் அறிஞர்களும்   இந்தக் குறியீடு  பற்றி  எதிர்ப்போ,  மாற்றுக்கருத்தோ  சொல்லவில்லை.

புவி வெப்பமடைவதால்  ஏற்படும் விளைவுகள்

 1. புவி வெப்பமடைவதால்  அதன் பாதிப்புகள்  கண்டத்திற்கு கண்டம் மாறுபடும்.
 2. பூமியைச் சுற்றி காற்று மண்டலத்தின் வெப்ப நிலை எதிர்பாராத அளவு  உயரும்.
 3. கடல்களில் நீர் மட்டங்கள் உயர்ந்து நிலப் பகுதிகளில் புகும்.
 4. பனி உறையும் நிலையிலும் ,  பனிப்பொழிவில்  மாற்றங்கள் ஏற்படும்
 5. மழை பொழிவின் அளவு வெகுவாக குறையும்.
 6. இதனால் வரலாறு காணாத வறட்சியும் அதனால்  பாலைவனங்களின்  விஷ்தரிப்புளம்  அதிகமாகும்.
 7. கடலில் ஏற்படும் பாதிப்புக்களைவிட  நிலப்பகுதியில் மாற்றங்களும் பாதிப்புகளும் அதிகமாகும்.
 8. சீதோஷ்ண  நிலையில் மாற்றம் ஏற்பட்டு வெப்பம் உச்ச நிலையை அடையும்.
 9. பருவ காலங்கள் மாறும்.
 10. வெப்ப அலையின் வீச்சு அதிகமாக இருக்கும். இதனால் மனித உயிரிழப்புகள் அதிகமாகும்.
 11. சில இடங்களில் அதிகமான மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும்.
 12. சில இடங்களில்  கடுமையான வறட்சியும், பஞ்சமும் ஏற்படும்.  விளைச்சல் மிகவும் குறையும்.
 13. ஆட்னடிக் பகுதியில்  மிக அதிகமாகப் பாதிப்புகள் இருக்கும்.
 14. மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகி கடலில் மிதக்கும்.
 15. கடல் நீரில் அமில  குணம்  அதிகமாவதால் கடல் வாழ் உயிரினங்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல்  ஏற்படுத்தும்.
 16. கடல் மட்டம் உயர்வதால் கடலோர நகரங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் நகரங்களை  விட்டு வெளியேறக்கூடிய சூழல் ஏற்படும்.
 17. வெப்பம் அதிகமாக அதிகமாக மனித வாழ்விற்கு அச்சுறுத்தலும், ஆபத்தும், உயிரிழப்புக்களும் அதிகமாகும்.

புவி வெப்பமடைய சில அடிப்படைக் காரணங்கள் இவ்வாறு புவி வெப்பமடைவதற்கு இயற்கை காரணமாக  அமையவில்லை,  மனிதனின்  வாழ்வியல்முறைதான்  மூல காரணமாக அமைகிறது.

வீட்டின் சமையலறையிலிருந்தும்,மற்ற அறைகளிலிருந்தும், உபயோகத்திலுள்ள மின் சாதனங்களிலிருந்தும் வெளியேறும் வாயுக்களும், Fridge,  Washing Machine, TV Cellphone, Dryer Water Heater, கேஸ் அடுப்பு, மின் அடுப்பு இவைகளில் இருந்து வெளியேறும் வாயுக்களும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் ஏற்படும் வாயுக்களும், ஆகாய விமானம், பேருந்து,  தொடர் வண்டி போன்ற போக்குவரத்து  வாகனங்களால் ஏற்படும் வாயு பெருக்கமும்,  Plastic போன்ற கழிவுகளை எரிப்பதால்  வரும் புகை மூட்டமும்/  நமது கட்டிடங்களுடைய அமைப்பும்,அதன் பெருக்கமும், இதன் வெப்ப  எதிரொளிப்பும் , பெரிய கட்டிடங்கில் உள்ள  AC  வெளியேறும் வாயுக்களும் காரணங்களாக அமைகின்றன.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்