Home » Articles » மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?

 
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?


செல்வராஜ் P.S.K
Author:

கடந்த இதழ் தொடர்ச்சி

ஆகாய விமானத்தையும், தொலைபேசியையும் இது போன்ற பல சாதனங்களையும் கற்பனை உண்மையாக சிந்தித்தறிந்து அன்றே சிறந்த எழுத்தாளர்கள் எழுதி வைத்தார்கள்.

எதிர்காலத்தில் நடக்கும் அந்த உண்மைக் கற்பனையை தன் கற்பனையாக்கினார்கள். கிரகாம் பெல்லும், ரைட் சகோதரர்களும், இவர்கள் போன்று வரலாற்றில் பதிந்துள்ளவர்களும் அக்கற்பனையை நிஜமாக்கினார்கள்.

மனிதன் எதை நினைத்தானோ அதை அடைய முடியும் என்பதற்கான சான்றுகளும், நீ எதை நினைத்தாலும் அதை அடைய முடியும் என்பதற்கான சான்றும் இதுவே. கற்பனைகள் நிஜமாகும் என்பதற்கான சான்றுகளும் இதுவே.

ஜான்பெயர்ட், நியூட்டன், ஐய்ன்ஸ்டீன், அப்துல்கலாம், அரிஸ்டாட்டில், ரைட்சகோதரர்கள் போன்றவர்களும் இக்கற்பனையின் அடிப்படையிலேயே தான் தாங்கள் நினைத்த ஒன்றை உருவாக்கினார்கள்.

கற்பனைத்திறன் நிஜமானது. நிஜமாக்கியவன் எஜமானனானான். உலகம் இப்படி படிப்படியாக உயர்ந்தது.

எல்லாம் உருவானது ஆனால் அது மனித சிந்தனையிலே தான் ஆனது. முயன்றால் முடியாதது எதுவுமில்லை. முயலாமல் முடிவது ஒன்றுமில்லை.

இதனடிப்படையில் ஒவ்வொரு துறையையும் எடுத்து சிந்தித்துப் பாருங்கள். மனிதனது முன்னேற்றம் என்னவென்பது நமக்குத் தெளிவாகப் புரியும்.

மனிதனுக்கு கிடைக்காத பொருளென்று ஒன்று உலகிலில்லை. கம்ப்யூட்டரால் முடியாதது உலகில் உண்டு. கண்ணா உன்னால் முடியாதது எதுவும் இங்கில்லை. மனிதனால் முடியாதது உலகிலில்லை.

நீ எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவன் – ஆற்றல் உள்ளவன். வென்றவர்களும் வென்று சென்றவர்களும் மனிதர்கள் தான். இளைஞர்கள் தான்.

எதற்கும் அதிசயித்து வியந்து அடிமை ஆகிவிட வேண்டாம். எல்லாம் மனிதனாகிய நம்மால் படைக்கப்பட்டது தான். மனிதனால் ஆகாததென்பது உலகில் எதுவுமில்லை.

இவ்வுலகில் மனிதன் நினைத்தது எதுவானாலும் அதை அப்படியே அடைய முடியும், முடியாதது எதுவுமே இங்கு இல்லை என்பதற்கு சான்றுகளாகப் பல லட்ச மனிதர்கள் மண்ணில் பிறந்து அப்படியே வாழ்ந்து அப்படியே சாதித்துக் காட்டியுள்ளார்கள்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்