கதையில் யாரும் கதாநாயகர்களே - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை

Home » Articles » கதையில் யாரும் கதாநாயகர்களே

 
கதையில் யாரும் கதாநாயகர்களே


நாகேந்திர பிரபு மு.
Author:

கதையில் கதாநாயகன் அடிபடலாம், மிதிபடலாம், எத்தனை அவமானங்களை வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம்; ஆனாலும், அவன்  கதாநாயகன் என்ற இடத்திலிருந்து இறங்கிவிடமாட்டான். கதாநாயகன் என்பதைத் தாண்டி வேறு எந்த ஒரு கதாப்பாத்திரமாகவும் மனிதன் தன்னை உருவகிப்பதில்லை. இதுவரை இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ‘தன்னை இன்னொருவரைப் போலானவன்’ என்று சொல்லிக்கொண்டதே இல்லை. அது “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்தேன்” என்று சொல்பவனானாலும் (இல்லை) “இன்னல்களை மட்டுமே எதிர்கொண்டவன்” என்பவனானாலும் எதிலும் அவனே முன்னிலைப்படுத்தப்படுவான்.

‘தான்தான் எல்லாவற்றையும் செய்கிறோம்’ என்ற எண்ணம் இங்கு எல்லோருக்கும் இருக்கிறது. ‘தான் இல்லையென்றால் தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனையும் ஸ்தம்பித்துவிடும்’ என்ற உணர்வு. பிரபஞ்சத்தின் அனைத்து நிகழ்வுகளும் இவனை ஒட்டியே புரிந்துகொள்ளப்படுகிறது.

தன்னுடைய செயலுக்குக் காரணம் கற்பிக்காத மனிதர்கள் இல்லை; தன்னை மட்டுமே குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் மனிதர்களும் இல்லை. இங்கு குற்றம் நிறையவே நிகழ்ந்து இருக்கிறது; ஆனால், குற்றவாளிகள் என்று யாரும் இல்லை. இந்த உலகத்தின் எந்த ஒரு மனிதனும் தன்னுடைய செயலுக்கான காரணத்தைக் கொண்டிருக்காமல் இருப்பதில்லை.

“நீங்கள் செய்வது சரியல்ல” என்று இன்னொருவர் சொன்னால் அதற்கு மறுப்பு கூறாமல் உங்களால் ஏற்க முடியுமா? இல்லாத போது, அப்படியே இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எப்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? செய்யும் செயல் சரியென்று நினைத்ததால் தான் ஒருவன் செய்கிறான்; அவனிடம் “சரியில்லை” என்று சொன்னால் எப்படி அவன் ஏற்றுக்கொள்வான்? தனக்குச் சரியென்று பட்டு செய்யும் மனிதனிடம் எதைச் சொல்லி அவன் செய்வதைத் தவறென்று உணர்த்துவாய்?

நான் போகும் பாதையில் எதையெல்லாம் கண்டேனோ அதுதானே உலகம். “இல்லையில்லை அதுவல்ல உலகம் இதுதான் உலகம்; இதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதற்கேற்ப வாழ்ந்து வர வேண்டுமென்ற” தத்துவமெல்லாம் அவசியமா?

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்