Home » Articles » பாயும் ஆறு

 
பாயும் ஆறு


அனந்தகுமார் இரா
Author:

சாதல் புதிதன்றே:-

இப்பொழுதெல்லாம், புத்தகங்கள் காணகிடைக்கும் பொழுது அவை மிகப்பெரும் சிந்தனைக்கான சந்தர்பத்திலேயே இயற்கையால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கருத வைக்கின்றது.  இல்லையென்றால் “அதுல் காவண்டே” அவர்களது “அழிபவராக இருத்தல்” (பியிங் மார்ட்டல் -Being Mortal) என்கின்ற பென்குயின் பிரசூரத்தால் வெளியிடப்பட்ட, ஆங்கில புத்தகம் நம் கையில் இந்த பின்னணியில் இவ்வளவு நெரிசலான பயணத்தில் கிடைத்திருக்காது, அப்படி கிடைத்திருந்தாலும், அதை சொந்த ஊரில், வயதான அப்பா அம்மாவின் அரவணைப்பில், அவர்களின் அற்புதமான சமையலில் மகிழ்ந்து சொக்கிப் போயிருக்கின்ற சந்தோஷ மிதப்பில்… மணிக் கணக்கில் படித்திருக்கவும் மாட்டோம்… அற்புதமான… வாழ்கின்ற ஒவ்வொருவரும்… வைத்தியம் தருகின்ற வைத்தியம் பெறுகின்ற ஒவ்வொருவரும்… படிக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை இவ்வளவு தற்செயலாகவா…  ஆனால், “சார், நீங்க, இதை, நிச்சயம், அவசியம் படிப்பீங்க!” என்று லஷ்மி பிரசாந்த் கொடுத்திருக்க மாட்டார்.

மாட்டான்… என்று பாசமுடன் எழுதத்தோன்றி, பயோகெமிஸ்ட்ரி, உதவிப் பேராசிரியர், மற்றும் இவ்வளவு அற்புதமான புத்தகத்தைக் கொடுத்து… சரியான சமயத்தில்… கண்களை திறந்து… அல்ல அல்ல கண்களை சிமிட்டி… (இது பேச்சு வழக்கு – கோவை வட்டார வழக்கு கண்களை சிமிட்டரான் – என்றால் கண்களை மீண்டும் மீண்டும் இமைத்துக்கொண்டு, கொட்டிக்கொள்ளுதல்… கண்மூடித் திறப்பதை படபடவென செய்வதால்… சிந்தனை தெளிவு ஏற்படுமோ?  …நீங்கள் செய்து பார்ப்பதை நம் மனக்கண்ணில் காணமுடிகின்றது) தெளிவான பார்வையோடு வாழ்வை காணவைத்த வழிகாட்டி, மூலம், வந்துசேர்ந்த புத்தகம் இது.

முன்பு கூறிய கணியன் பூங்குன்றனாரின் சங்க இலக்கிய பாடலில், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கின்ற மிகப் பிரபலமான வரிகளில் தொடங்கும் பாடலில் இப்படியான, ‘சாதல் – புதிதன்றே’ என்கின்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.  உலகில் பிறப்புப்போல பழமையானது இறப்பே.  தற்காலத்தில் அது குறித்த தெளிவான புரிதல் நம்மிடம் ஏற்பட்டுக் கொண்டு, உள்ளதன் ஒரு அடையாளம் – அதுல் காவண்டேயின் புத்தகம்.

கெத்தான புத்தகம்:-

வாழ்க்கையில் பல புத்தகங்களில் பல கிராஃபுகளை பார்த்திருக்கின்றோம்… அந்த வாழ்க்கையையே கிராஃபாக… பக்கங்கள் 25, 27 மற்றும் 28 ல் “சிதறிவிழும் செய்திகள்” (Things Fall apart – இதை சிதறிவிழும் பொருட்கள் என்றுதான் மொழிபெயர்க்க வேண்டும் ஆனால் நமக்கு… செய்திதானே என்பதால் நாம் இப்படி எழுதி உள்ளோம்)  என்கின்ற இரண்டாம் அத்தியாயத்தில் வரைந்து காட்டியுள்ளார் அதில் காவண்டே என்றும் அதி உன்னதமான அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் வரப்பிரசாதமாக வந்த எழுத்தாளர்.  இவ்வளவு சூப்பர்லேடிவ் (அளவுக்கு அதிகமான – Superlative) அடைமொழிகளை சேர்த்து எழுதுவதற்கு நியாயங்கள் நிறைய நிறைய இருக்கின்றன.  புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் படித்தபொழுது… (ஏனென்றால் நண்பரின் தந்தையின் மருத்துவ சூழலும் அப்படி) லஷ்மி பிரசாந்திற்கும்… சூழ்நிலைக்கும் நன்றி சொல்ல தோன்றியது.  சூழ்நிலை… நேரம்… என்கின்றபோது அதில் படிக்கின்ற நீங்களும் வந்துவிடுவீர்கள்… நமக்கும் நன்றி…

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்