Home » Articles » சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்

 
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்


கிரிஜா இராசாராம்
Author:

மனிதன் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எத்தனையோ ரகமான நிகழ்வுகளைப் பார்த்து அவற்றின் விபரங்களைப் புரிந்து கொள்கின்றான். புத்தகக் கல்வியால் மட்டும் அனைத்து அறிவையும் பெற்று விட இயலாது. அதையும் தாண்டி ஒரு உணர்வு உண்டு. அதைப் பொது அறிவு என்றும் கூறலாம். இந்தப் பொது அறிவு பற்றி அரிஸ்டாட்டில் முதல் எத்தனையோ அறிவாளிகள் தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். இந்த உணர்வு மனித இனத்திற்கு மட்டுமின்றி மிருகங்கள் மற்றும் பறவைகளிடமும் உண்டு. ஆனால்  அந்த உணர்வின் அளவு மனிதனிடம் கொஞ்சம் அதிகமாக உள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். தனக்கு வரும் ஆபத்தை முன்னெச்சரிக்கையாய் உணர்ந்து அந்த உணர்விற்கு கட்டுபட்டு நடந்தால் எவ்வித அசம்பாவிதமும் நடக்காது. ஆனால் அதைபங பொருட்படுத்தாது நடந்தால் அதன் விளைவுகள் வருத்தப்பட்டதாகவும் அமையும். அந்தக் கருத்தை நேர்மறைச் சிந்தனை என்று ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இக்கருத்தை மையமாகக் கொண்டு சில சிறு கதைகள் இந்தக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

உயிர் பெற்று எழுத்த சிங்கம்:

ஒரு நகரத்தில் நான்கு நண்பர்கள் வாழ்ந்து வந்தார்கள். நால்வரும் பிராமண குலத்தைச் சேர்ந்த வாலிபர்கள். இவர்களில் மூன்று வாலிபவர்கள் வேதங்களை நன்கு கற்றறிந்தவர்கள். ஆனால் பொது அறிவு ஞானம். இல்லாதவர்கள், நான்காவது வாலிபர், இந்த மூவர் போல் வேதங்களைப் பற்றிய அறிவில்  சிறந்தவனாக இல்லாவிட்டாலும்  பொது அறிவில் ஞானம் பெற்றவன்.முதல் மூவர்  ஒருநாள் தங்கள் திறமையை அரசன் பாராட்டும் படியான ஒரு செயலைச் செய்ய வேண்டும்.அல்லது தங்கள் அறிவுத்திறமையால் அதிகம் பொருள் ஈட்ட வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினர். நான்காம் வாலிபவர் தம்மையும் உடன் அழைத்துச் செல்லும் படி மன்றாடிக் கேட்டுக் கொண்டான். அந்த மூவரில் ஒருவன், நம்பணாகப் பழகிவிட்டான். அதனால் அவனை விட்டுச் செல்வது சரியில்லை உடன் அழைத்துச் செல்வோம் என்று சொல்ல அனைவரும் சேர்ந்து பயணத்தைத் தொடர்ந்தனர்.

அவ்வாறு செல்லும் போது ஒரு காட்டில் சிங்கத்தின் எலும்புகள் கிடைப்பதைப் பார்த்தனர். முதல் வாலிபன் தன் மந்திரத்தால் எலும்புகள் ஒன்று சேர்ந்து சிங்கத்தின் எலும்புக்கூட்டை உருவாக்கினான். இரண்டாம் வாலிபன் தன் மந்திரத்தின் மகிமையால் அதற்கு தசை மற்றும் தோல் உண்டாக்கும் படி செய்தான். மூன்றாம் வாலிபன் தன் மந்திரத்தால் உயிர் கொடுக்க எண்ணி அதற்கான சடங்குகளைச் செய்ய ஆயுத்தமானான். அப்பொழுதுநான்காம் வாலிபன் நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் முயற்சியால் சிங்கம் உயிர் பெற்று விடும். பின் அது நம் அனைவரையும் கொன்று விடும் என்று வலிவுறுத்தினான். ஆனால், அவர்கள் தங்களின் அறிவுத்திறமையைக் கண்டு அவனுக்கு பொறாமை என்று கூறி அவனை கேலி செய்தார். பின் அவன், அவர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அதன்படி செய்யுங்கள் என்று கூறினான். நான் அந்த மரத்தில் ஏறிக்கொள்கிறேன். அதன்பின் அந்த முன்றாம் வாலிபர் தன் சடங்குகளைத் தொடரட்டும் என்றான். அதன் படி அவன் மரத்தில் ஏறியதும்  மூன்றாம் வாலிபன் சடங்குகளைச் செய்ய சிங்கத்தின் உயிரற்ற உறுப்புகள் உயிர் பெற்றன. இதைக் கண்டு நம் முயற்சியில் வெற்றி பெற்று விட்டோம் என்று கொண்டாடும் தருணத்தில் உயிர் பெற்ற சிங்கம் அவர்களைக் கொன்றுவிட்டது. சிறிது நேரம் கழித்து நான்காம் வாலிபன் சிங்கம் அங்கிருந்து செல்வதைப் பார்த்த பின் மரத்திலிருந்து கிழே இறங்கி வந்து பார்த்தான். நண்பர்கள் இறந்து கிடப்பதைப் பார்த்து வருத்தப்பட்டான். பின் அவன் மட்டும் ஊருக்குத்திரும்பிச் சென்றான். அவனது உள்ளணர்வு அவனைக் காப்பாற்றிது.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்