Home » Articles » துணிவே வெற்றி

 
துணிவே வெற்றி


முருகேசன் .ஆர்
Author:

தினசரி பத்திரிக்கைகளில் ஏதாவது ஒரு பகுதியில் தற்கொலை என்ற தலைப்பில் செய்தி வராமல் இருந்தது இல்லை. செய்திதாளின் பெயர் இல்லாமல் தினசரி பத்திரிக்கை இல்லையோ அதுபோல் தற்கொலை என்ற செய்தியில்லா செய்தித்தாளே இல்லை. இப்படி செய்திதாளில் தினமும் இடம் பெறுவதற்கான காரணங்களை மேலோட்டமாக பார்த்தால் வெவ்வேறாக தோன்றலாம். குக்கிராமத்தில் இருந்து படிப்பு சதவீதம் அதிகமுள்ள நாகரீக  நகரம் வரை தடையின்றி பரவியிருக்கும் ஒருவித மனநிலை பாதிப்புக்கான வெளிப்பாடாக இருப்பது தற்கொலை நிகழ்வுகள். இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக இருப்பது நாம் வாழும் சமுதாயத்தை அச்சப்படுத்த வைக்கிற புள்ளியல் விபரமாக இருக்கிறது. நாட்டின் உயர்கல்வி வழங்ககூடிய கல்வி நிறுவனங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மத்தியிலும் தற்கொலை நிகழ்வு நடக்கிறது என்றால் நினைத்துப்பாருங்கள். கல்வி, வாழ்க்கையை சீர்செய்ய எப்படி பயன்பட வேண்டுமோ அப்படி பயன்படுத்தபட்டிருக்கிறதா என்றால் இல்லை.  கல்வியின் குறைபாடா, கற்பிக்கும் விதத்திலா அல்லது கற்றுக்கொள்வதில் உள்ள குழப்பமா? ஏன் இப்படிப்பட்ட நிகழ்வுகள்? சமீபத்திய செய்தி 7ம் படிக்கும் மாணவி ஆசிரியர் திட்டியதால் தன்னை எரித்துக்கொண்டு தற்கொலை. சமுதாய நல்லொழுக்க பாதை என்ற மனிதத்தை கொலை செய்கிற கொடுமை. ஏன் இந்த மனநிலை?

தற்கொலை செய்துகொண்டதை நியாயபடுத்தி- தற்கொலை செய்தகொண்டவருக்கான தீர்வு அது தான் என யாரும் ஆமோதிப்பதும் இல்லை ஆதரிப்பதும் இல்லை. சரி தற்கொலை செய்துகொண்ட ஒருவரது விருப்பத்தை பூர்த்திசெய்துகொள்வதற்கான வாய்ப்பாக கருதி செய்துகொண்டிருக்கலாம் எனவும் கருத முடியாது. ஏன் என்றால் தற்கொலை விரும்பி செய்து கொள்வதில்லை.மாறாக விருப்பத்திற்கு எதிராக கட்டாயபடுத்திக்கொண்ட ஒரு செயலாகும். அதனால் தான் அது தற்செயலாக இல்லாமல் தற்கொலையாக மாறி இருக்கிறது. இந்த நிகழ்வுகள் முன்னேறமடையாத முன்னேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில் மட்டுமே நிகழும் நிகழ்வுகளா என்றால் இல்லை. மாறாக நன்கு வளர்ந்த அமெரிக்கா போன்ற வெள்ளையர்கள் வாழும் நாட்டில் தான் அதிக அளவு தற்கொலை நடக்கிறது என்றும் பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என உளவியல் சார்ந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஏன் இப்படி?

எந்த ஒரு செயலுக்கும் அதனை செய்தவருக்கும் அல்லது அவர்மீது செயல்படுத்தப்பட்டதற்கும் அவர் சார்ந்த சூழல் முக்கிய காரணியாக இருக்கும். தற்கொலை என்பது தன்னைத்தானே கொலை செய்து கொள்கிற ஒரு குற்றம் என்ற உணர்வு தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இல்லை என கூறலாம். பொதுவாக ஒரு குற்றத்தை செய்யும் போது தோன்றும் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கண்ணோட்டம் தற்கொலை செய்துகொள்பவர்களிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உயிர்பிழைத்தவர்களிடமிருந்துபெறப்பட்டவாக்குமூலம் நிரூபிக்கும். பொதுவாக மனநலமின்றி பெரும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தான் தற்கொலைக்கான இலக்காக இருக்கிறார்கள். உலகத்தில் 6,50,000 பேர்கள் ஆண்டுதோறும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் அதில் அரைமில்லியனுக்கும் அதிகமானவர்கள் தற்கொலையால் உயிர் இழக்கிறார்கள். என்ன கொடுமை இது ?

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2018

தேடிப்பார் வாழ்க்கைப் புரியும்
மௌன அநீதி
இரண ஜன்னி (Tetanus)
அதிசயச் சிறகுகள் உலகப் புத்தக தினம் ஏப்ரல் 23
வெற்றி உங்கள் கையில் -52
ஆயுளைக் குறைக்கும் உணவுகள்
புவி வெப்பமடைதல் – விழித்துக் கொள்ளும் நேரம் வந்து விட்டது
மனிதனால் முடியாதது உலகில் உண்டா? இளைஞனால் முடியாதது இவ்வுலகில் உண்டா?
கதையில் யாரும் கதாநாயகர்களே
பாயும் ஆறு
வாழ நினைத்தால் வாழலாம் -15
முயற்சியே முன்னேற்றம்
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
துணிவே வெற்றி
தன்னம்பிக்கை மேடை
உழைப்பை உயர்வாக்கு… உணவை மருந்தாக்கு….
உள்ளத்தோடு உள்ளம்