Home » Articles » பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்

 
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்


கிரிஜா இராசாராம்
Author:

“பெண்ணிற்கு பெருந்தக்க யாஉள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின்”

கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருந்தால் அக்கற்புடைய பெண்ணை விடப் பெருமை உடையவை வேறு எவை உள்ளன? என்ற கேள்வியுடன் வள்ளுவர் பெருந்தகை பெண்ணின் சிறப்பு பற்றி கூறுயுள்ளார். “அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” என்ற வாசகம் மனிதன் ஒரு உயரிய படைப்பு என்று அறிவுறுத்துகின்றது. அதிலும் “மாந்தர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்ற வாசகம் பெண் இனத்தின் பெருமையை ஒருபடி உயர்த்தி காட்டுகின்றது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, பெண்கள் அறிவுதிறனிலும், ஆன்மீகத்திலும் மற்றும் பல்வேறு செயல்பாடுகளிலும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். “பெண் ஒரு இயற்கையின் சீதனம்” என்றும் “பெண் இல்லாமல் உலகில் சுகம் இல்லை” என்ற கவிஞர்களின் வாக்கியங்கள் பெண்ணின் சிறப்பை மேலும் வலுவூட்டுகின்றன. அப்படிப்பட்ட பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் புகழ் பெற்ற இந்திய முதல் பெண்மணிகள் சிலரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. “முதல்” என்ற வார்த்தையின் மகிமை அனைவரும் அறிந்தது. இக்கட்டுரை மதல் பெண் எழுத்தாளர், ஆளுநர், விண்வெளி பயணி, IAS அதிகாரி, மற்றும் IPS அதிகாரி பற்றி விவரிக்க உள்ளது.

சுவர்ணகுமாரி தேவி முதல் வங்காளப் பெண் எழுத்தாளர் ஆவார். இவர் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது ஆயுட்காலம் 1885 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 1932ம் வருடம் ஜூலை மாதம் 3ம் தேதி வரை தான்.  இவர் பிராலி என்ற தாழ்த்தப்பட்ட பிராமிணர் குடும்பத்தில் பிறந்தவர். ஜாணகிநாத் கோசல் என்ற ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவரை மணந்தார். கோசல், மற்ற பிராமணர்கள் சுவர்ண குமாரியை தாழ்ந்த ஜாதி என்று கருதியதால், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து தன் உழைப்பால் உயர்ந்து சுவர்ணகுமாரி மற்றும் தன் குழந்தைகளுடன் இன்புற்று வாழ்ந்தார். சுவர்ணகுமாரியின் பாட்டனார், தாய், தந்தை, சகோதிரிகள் அனைவரும் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள். ரவிந்தரநாத் தாகூர் இவருடைய இளைய சகோதரர் ஆவார். அவர் தன் குறிப்பில் “நாங்கள் வெளி உலகில் கற்றதை விட எங்கள் இல்லத்தில் கற்றக் கொண்டவை தான் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார். சுவர்ணகுமாரியின் முதல் நாவல் “தீப்நிர்பன்”1876ல் வெளியிடப்பட்டது. இந்தூல் தேசபக்தி எழுப்பவதாக அமைந்துள்ளது. இவர் 12 நாவல்கள், 4 நாடகங்கள், 3 கவிதைகள் மற்றும் விஞ்ஞானக் குறிப்புகள் நிறைந்த கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார். 1896ல் இவர் “சக்தி சமீதி” என்ற இயக்கதை துவங்கி அதில் விதவைப்பெண்கள், ஆனதைக் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வந்தார். பெண்கல்வியை இங்கு ஊக்குவித்தார். இவருக்கு ஹிரன் மோயி என்ற பெண்மணி ஒத்துழைப்பு நல்கி வந்தார். இவ்வியக்கம் இன்றும் ஹிரன் மோயி மகள் கல்யாணி மாலிக் மூலம் நன்றாக இயங்கி வருகின்றது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் சுவர்ணகுமாரியை 1927ம் ஆண்டு ஜெகத்தாரணி தங்கப்பதக்கம் அளித்து கொரவித்தது. பாரதி என்னும் பத்திரிக்கையின் எடிட்டராக பல ஆண்டுகள் பணிபுரிந்த பெருமையும் இவருக்கு உண்டு.

சரோஜினி நாயுடு இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் பெண் ஆளுநர் ஆவார். இவர் 1879 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் நான் ஹைதாராபாத்தில் ஒரு வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் கல்வியை சென்னை, லண்டன், கேம்பிரிஜ்யில் பெற்றார். டாக்டர். கோவிந்த ராஜீலு இவருடைய கணவர் ஆவார். இவர் கவிதை எழுதுவதில் அதிக நாட்டம் கொண்டவர். அதனால் இவர் இந்தியாவின் “கவிகுயிலி” (நைட்டிங்கேல்) என்றப்பட்டதிற்கும் “பாரதீய கோகிலா” என்ற பட்டதிற்கும் உரியவரானார். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாது ஒரு பேச்சாளர், எழுத்தாளர், சமூகசேவகர் மற்றும் சுதந்திரப் போராட்டவீரரும் ஆவார். காந்தியடிகளுடன் பலப்போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தியப் பெண்களை தங்கள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்து அவர்களை விழிப்படையச் செய்தவர் இவர் தான். 1947ல் உத்திரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுஞராகப் பதவி ஏற்றார். 1949ம் ஆண்டு லக்னோவில் உள்ள தன்னுடைய அலுவலக்கத்தில் இருதயவலியால் உயிர் நீத்தார். இவரது நினைவாக நிறைய நிறுவனங்கள் நிறுவப்பட்டு இன்று வரை செயலாற்றி வருகின்றன. இவருடைய பல்வேறு செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகம் சரோஜினி நாயுடுவின் பெயரில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

அன்னராஜம் மல்கோத்ரா முதல் பெண் IAS அதிகாரி என்ற புகழ்பெற்றவர் ஆவார். இவர் கோழிக்கோட்டில் ஒரு கிராமத்தில் 1927ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி பிறந்தார். பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் துணையைத் தேடிக் கொண்டிருக்கும் பருவத்தில் இவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 1950ல்  ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். தன்னுடன் பயின்ற மல்கோத்ராவை மணந்து கொண்டார். இவர் பெண்ணாகப் பிறந்ததால் பலசமயங்களில் அவமானப்படுத்தப்பட்டார். செயலகத்தில் இவருக்கு திருமணம் ஆனதால் இவரது பதவி பறிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் அந்த சட்டம் தளர்த்தப்பட்டதால் மீண்டும் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இ. ராஜகோபாலச்சாரியார் முதல்வர் ஆக பதவி ஏற்ற போது அன்னராஜம் அவரின் செயலாளராகப் பொறுப்பேற்றார். இ.ராஜகோபாலச்சாரியார் ஒரு பெண்ணால் அச்செயலை திறம்பட செய்ய இயலாது என்று செயலகத்தில் பணிபுரியச் செய்தார். ஆனால் அன்னராஜம், குதிரை ஏற்றம், கண்டு பாய்ச்சுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு திருப்பூர் மாவட்ட IAS அதிகாரியாகப் பொறுப்பேற்றார். ஏழு முதல்வர்கள் கீழும் பிரதமர்கள் இந்தராகாந்தி மற்றும் ராஜீவ்காந்திக்கு கீழும் பணியாற்றிய பெருமை இவருக்கு உண்டு. மும்பையில் நவசேன துறைமுகம் உருவாக்கியதில் இவருக்கு அதிகப் பங்கு உண்டு. அதிகாலையில் எழுந்து படகில் சென்று கணினி மயமாக்கப்பட்ட துறைமுகத்தை உருவாக்கினார். ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்தபோது இவ்விடத்திற்கு இருமுறை சென்று இவரது சேவையை பாராட்டினார். இந்தராகாந்தி பிரதமாராக இருந்தபோது இவர் தனது குதிங்கால் முறிவினையும் பொருட்படுத்தாது அவருடன் எட்டு மாநிலங்களில் உணவு உற்பத்தி சம்பந்தமாகப் பிரயாணம் செய்தார். இவர் ஓசூரில் பணியாற்றியபோது யானைகளால் தொல்லை ஏற்பட்டது. அவ்வேளையில் அதனைச் சுடும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டபொழுதும் தனது திறமையால் அதனை சுடாது வெற்றிகரமாகக் காட்டிற்குள் அனுப்பி பெரும் சாதனைப் புரிந்தார். இவரது வாழ்கையில் பல பெண்களை சிவில் தேர்வை எழுத உக்கிவித்தது பெரும் பணி ஆகும். இவரது சேவையை பாராட்டி 1989ல் பத்மபூஷன் விருதை மத்திய அரசு வழங்கி பெருமை படுத்தியது.

கிரண்பேடி இந்திய காவல் துறை IPS அதிகாரியாகப் பதவியேற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் 1949ம் ஆண்டு ஜீன் மாதம் 9ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தரசில் பிறந்தார். தன் கல்வியை பஞ்சாப்பிலும், டெல்லியிலும் உள்ள கல்வி நிலையங்களில் கற்றார். கலசா கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1972ல் காவல்துறை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 1972ல் பிதிஜ்பேடி என்பவரைத் திருமணம் செய்தார். பல்வேறு காவல்துறைப் பதவிகளில் பணியாற்றினார். 2007, டிசம்பர் மாதம் 25ம் நாள் பதவியிலிருந்சது ஓய்வுப் பெற்று சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தில்லி சிறையில் பொது ஆய்வாளராகப் பணியில் இருந்த போது பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார். இதனைக் கருத்தில் கொண்டு இவருக்கு மத்திய அரசு 1994ம் ஆண்டு “மாராட்டிய ரமோன் மகாசேசி” விருது வழங்கி கொளவித்தது. இதனைத் தவிர இவர் பத்திற்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளைப் பெற்று பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.

தன்னை இலஞ்ச ஒழிப்பு துறையில் 2011 ஆண்டு இணைத்துக் கொண்டார். 2015ம் ஆண்டு பாரதிய ஜானதா கட்சியில் இணைந்தார். 2016ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி புதுச்சேரி மாநில நெப்டினெட் ஆளுநராகப் பொறுப்பேற்று இன்று வரை திறன் பட செயலாற்றி வருகின்றார். இவரால் நிறுவப்பட்ட நவஜோதி NGO திறம்பட 1987ம் ஆண்டு முதல் இயங்கிவருகின்றது. 

கல்பனா சால்வா விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய பெண்மணி என்பற பெருமை  இவருக்குரியது. ஒரு சாதாரணப்பள்ளியில் பயின்று, பலரும் வியக்கத்தக்க ஒரு வின்வெளி பொறியாளராக வாழ்ந்து காட்டியவர் ஆவார். இவர் 1961 ம் ஆண்டு ஜீலை மாதம் 1ம் தேதி ஹரியானவில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்தார். இவர் 1988ல் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் பணியில் சேர்ந்தார். விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்கத் தகுது சான்றிதழ் பெற்றத்தோடு அவற்றை இயக்கவும் அனுமதி பெற்றிருந்தார். 1995ல் நாசாவின் வெளிவீரர்கள் பயிற்சி குழுவில் இணைந்த இவர் இரண்டே வருடங்களில் கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்.டி. எஸ்-87 (STS-87) ல் பயணம் செய்யத் தேர்வுச் செய்யப்பட்டார். 1997 ம் ஆண்டு சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனை படைத்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். 2003ம் ஆண்டு இரண்டாவது முறையாக கொலம்பியா விண்கலம் எஸ்.டி.எஸ்-107 (STS-107) ல் இந்தியாவின் வீரமங்கையான கல்பனா சால்வாவுடன் ஆறுபேர்கொண்ட குழுவும் பயணித்தனர். 16 நாட்கள் ஆய்வை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவில் டெக்ஸாஸ் வான்பரப்பில் அவர்கள் வந்த விண்கலம் வெடித்து சிதறியது கல்பனா சால்வா உடன் பயணித்த ஆறு பேரும் அதில் பலியாயினர். இவருடைய சாதனைகளை நினைவில் சொண்டு 2004 முதல் இவருடைய பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவர் பெயரில் பல வீதிகளும் பயணித்து வருகின்றன.

தங்களது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் மற்றவர் வாழ்விற்காக இந்த பெண்மணிகள் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு பெற்ற பெண்மணிகளை முன் மாதியாக்க் கொண்டு இன்றைய இளைய பெண்மணிகளும் பல்வேறு சாதனைகளைப் புரிய முன் வரவேண்டும் என்று சர்வதேச மகளிர் தினத்தன்று உறுதி எடுத்துக் கொள்வார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்