Home » Articles » கண்கள் காட்டும் கல்லீரல் காதல்

 
கண்கள் காட்டும் கல்லீரல் காதல்


அனுராதா கிருஷ்ணன்
Author:

கண்ணின் மணிக்கு இமைபோல் என்னின் அன்புக்கு நட்பாக விளங்கும் தோழ தோழியர்களே! நமது கண்களுக்கும் கல்லீரலுக்கும் உள்ள அற்புத நட்புறவை நாம் இங்கு காண இருக்கிறோம். நமது கண்கள், ஒளியின் நெருப்பு சக்தியை ஆகாசச் சக்தியாகத் தன்மாற்றம் செய்து மரமாக விளங்கும் கல்லீரலை வளப்படுத்துகிறது. என்னது கல்லீரல் மரமா? என்று வியப்பு காட்டுவது எனக்குப் புரிகிறது. மரம் என்றால் முழுமைத் தன்மையைக் கொண்ட வளர் குருத்தைக் (Totipotency) குறிப்பதாகும். நமது உடலுக்கு வேண்டிய அவசரத் தேவைக்கு வேண்டிய மாவுச்சத்தை கிளைக்கோஜனாக சேமித்து வைத்துள்ளதால் இதனை மரத்துக்கு சமமாக ஆயுர்வேதமும் அக்குபஞ்சரும் பாவிக்கிறது. ஆகவேதான் 90 விழுக்காடு சேதமடைந்தாலும் மீட்டெடுக்கக் கூடிய ஒரே உறுப்பு நமது கல்லீரலாக இருக்கிறது. இதனால்தான், குடியால் கல்லீரலைக் கெடுக்கும் குடிகாரனையும் வாழவைக்கிறது. இப்பொழுது புரிகிறதா ஆங்கிலத்தில் கல்லீரலை லிவர் (Liver) என்று, அதாவது வாழவைப்பவர் என்று சரியாக பெயரிடப்பட்டிருப்பது? சேமித்து வைத்துள்ளதால் இதனை மரத்துக்கு சமமாக ஆயுர்வேதமும் அக்குபஞ்சரும் பாவிக்கிறது. ஆகவேதான் 90 விழுக்காடு சேதமடைந்தாலும் மீட்டெடுக்கக் கூடிய ஒரே உறுப்பு நமது கல்லீரலாக இருக்கிறது. இதனால்தான், குடியால் கல்லீரலைக் கெடுக்கும் குடிகாரனையும் வாழவைக்கிறது. இப்பொழுது புரிகிறதா ஆங்கிலத்தில் கல்லீரலை லிவர் (Liver) என்று, அதாவது வாழவைப்பவர் என்று சரியாக பெயரிடப்பட்டிருப்பது?

சரி, அன்பர்களே! கண்களில் விழும் ஒளியானது எப்படி ஆகாச சக்தியாக தன்மாற்றம் அடைகிறது என்று இனி பார்ப்போம். நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றிலிருந்து இதனைப் புரிந்து கொள்ளப் பார்ப்போம். நெருப்பானது எரியும் போது ஒளி மற்றும் வெப்பத் தன்மையோடு அலையியக்கமாக (Waves) வெளிப்படுகிறது. இந்த அலையியக்கமானது மின்காந்த அலை வரிசையைச் சார்ந்ததாகும். நம் அண்டசராசரம் வான் காந்தக் களமாகவும், அதன் வெளிப்பாடு காந்த அலைகளாகவும் (Electromagnetic Waves) விளங்குகின்றன. அதுபோலவே, கண் விழி வழித் தீண்டும் ஒளி நெருப்பானது ஆகாச காந்த அலைகளாக தன்மாற்றமடைந்து மரமாகிய கல்லீரலுக்குச் சக்தியளிக்கிறது. இது, சூரிய ஒளிக் கதிர்கள் மரத்திற்கு ஒளிச்சேர்க்கை (Photosynthesis) செய்ய உதவுதல் போல் இருக்கிறது. ஆக, நம்முள் இருக்கும் மரம் பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது அதிமுக்கியம், காரணம் இந்த  மரத்தில்தான் நம் ஆயுளின் ஆதாரம் இருக்கிறது.

காதல் வழியில் நமது கண்கள் பேசுவதை நாம் கண்டு, பார்த்து அனுபவித்து இருக்கிறோம். ஆனால் நமது கல்லீரல் வழியில் கண்கள் பேசுவதை கவனிக்காவிட்டால், காதலால் கனிந்த வாழ்க்கையும் வெந்து, வெம்பி, நொந்து போய்விடும். ஆகவே, நமது கண்ணை வைத்து கல்லீரல் தன்மையை எப்படி உணர்வது என்று இனி பார்ப்போம்.

 1. கண்களில் வெண்பொறி: அதீத மண்ணீரல் அழற்சியால், கல்லீரலுக்குச் சக்தி கிடைக்காமல் இருக்கிறது.
 2. கண்கள் வெளுத்திருத்தல்: மண்ணீரல் அழற்சியால், கல்லீரல் செரிமானம் முற்றிலும் நின்றுவிடுதல்.
 3. கண்கள் சிவந்திருத்தல்: அதிக உடல் உஷ்ணத்தால் கல்லீரல் இரணமாகியிருத்தல்.
 4. கண்ணீர் அதிகம் வெளிப்படுதல்: மண்ணீரல் தளர்ச்சியால் கல்லீரல் சக்திக்கு ஏங்குதல்.
 5. கண்ணெரிச்சல்: போதிய, ஆழ்ந்த தூக்கமின்மையால் கல்லீரல் புத்துணர்வு பெறாமல் இருக்கிறது.
 6. கண்கள் மஞ்சள் நிறத்தில்: மஞ்சள் காமாலையால் கல்லீரல் பாதிப்படைந்திருக்கிறது
 7. கண் இமை படபடப்பு: கல்லீரல் இரணத்தால் கண்களின் நரம்பு பாதிப்படைந்துள்ளதைக் குறிக்கிறது.
 8. மெட்ராஸ் ஐ: கல்லீரல் இரணமும், மலச்சிக்கலும் சிறுநீரகச் சோர்வும் கைகோர்ப்பதால் வருவது.
 9. கண்பார்வை குறைதல்: சத்துக்குறைவால் மண்ணீரல் தளர்வும், அதன் பொருட்டு கல்லீரல் தளர்வும் சேர்ந்து கண்பார்வையைப் படிப்படியாகப் பதம் பார்த்தல்.
 10. கண்புறை நோய்: நீண்டகால மண்ணீரல் மற்றும் கல்லீரல் அழற்சியால், கணையம் தளர்ந்து, நீரழிவு நோய் உண்டாவதல், கண் வெளிச் சவ்வில் கெட்டச் சர்க்கரை சேர்ந்துத் தடித்துப் போவது.
 11. குலுக்கோமா: நீரழிவு நோயின் தீவிரத்தால், கண்களில் கெட்டக் கொழுப்பு படிவதால் உண்டாகிறது.
 12. கண்களுக்கு கீழ் கரு வளையம்: கல்லீரலின் தளர்வால் உண்டான சிறுநீரகத் தளர்ச்சிக் குறிக்கிறது.

கண்கள் காட்டும் கல்லீரல் மொழியை நாம்

கண்டு கொண்டு திருத்தம் செய்தால்,

கண்ணுக்கு கண்ணாக நம்மைக் கல்லீரல் காத்து

நம்மை நீடுழி வாழ வைக்கும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்