Home » Articles » முயற்சியே முன்னேற்றம்

 
முயற்சியே முன்னேற்றம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்- குறள் 616

ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில் 10 குறட்பாக்களில் திருவள்ளுர் கூறியவற்றின்  சாரம்; தனக்கும் பிறருக்கும் பாதிப்பில்லாத செயல்களை செய்தல்; அதற்காக சிந்தித்தல். இதன் விளைவு செல்வம் பெருக வேண்டும்.

பொருள், புகழ், அதிகாரம் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

பொருளிலார்க்கு இவ்வுலக மில்லை என்றே திருவள்ளுவரும் சொன்னார். பொருள் என்பது உழைப்பின் வெகுமதி () என்பார்  வேதாத்திரி மகரிஷி.

இனிய வாசகர்களே!

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது திட்டமிட்ட முயற்சியும், தொடர்ந்த செயல்பாடும் என்றும் இன்பம் தரும்.

பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பு தான் என்ன? நோயில்லாமல், கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பது தான். இப்படித்தான் பெரும்பாலானவர்கள் சொல்கிறார்கள்.

சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். என்பது போல, அவர்கள் மனதில் நிறைந்துள்ள- நோய், கஷ்டம் போன்ற வார்த்தைகள் பேச்சாக வருகின்றன.

முதல் முயற்சியாக ஒரு பயிற்சி-

இன்று முதல் எதிர் மறையான சொற்களைப் பேசுவதில்லை என்ற திடமான முடிவை எடுப்போம், அதற்கு என்ன செய்வது?

இல்லை என்ற பொருள் தரும் சொற்களை ஒரு தாளில் எழுதுங்கள், உதரணமாக

வீட்டு வாடகை அதிகம்

சம்பளம் போதுமானதாக இல்லை

உடம்பெல்லாம் வலி

சொன்னால் யாருமே கேட்பதில்லை

ரோட்டில் சரியாகப் போவதில்லை

பேப்பர் பையன் லேட்டாகவே வருகிறான்

நினைச்ச மாதிரி படிக்க முடியலே

அவங்களைப் பார்த்தாவே புடிக்கலை

இந்தக் கீரை எனக்குப் புடிக்காது

இது என்ன பஸ்ஸா? ஓட்டை வண்டி

எல்லாமே திருடங்க

யாருமே யோக்கியங்க இல்லே

இது போல இன்னும் ஏராளமாய் எழுதலாம்.

இந்தத் தொடரின் நோக்கம், படித்தவுடன் சிந்திப்பதும், உடனே செயல்பாட்டில் இறங்குவதும் தான்.

இன்று உலக அளவில் இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா என்று எல்லோருமே சொல்கின்றனர். ஆனால் இது தப்பு.

ஜனத்தொகையில் தான் சீனாவுக்கு அடுத்த நிலையில், உலகில் நாம் இரண்டாமிடத்தில் இருக்கிறோம்.

நேர்மையற்ற, தூய்மையற்ற, மக்கள் கருத்தைப் புறந்தள்ளும் கட்சி ஆட்சியே நம் நாட்டில் இன்று நடைபெற்று வருகிறது என்பது தான் உண்மை.

முதலிடங்களில் கீழ்க்கண்டவற்றில் நம் நாடு பெருமை கொள்ளலாம்.

பால் உற்பத்தி

விண்வெளி சோதனை

கணினி பயிற்சிகள்

இயற்கை வளம்

இளைஞர் சக்தி

இத்துடன் இன்னும் சிலவற்றையும் கஷ்டப்படாமல் சேர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

லஞ்சம், ஊழல், சோம்பல் இது போன்ற பல.

ஆறு அடி உயரமுள்ள ஒரு அடி அகலமுள்ள 10 அடி நீள முள்ள ஒரு சுவற்றைக் கட்டுவதற்கு ஒவ்வொரு கல்லாகத்தான் கீழே இருந்து,வரிசையாக, பொறுமையாக எடுத்து வைக்கிறோம்.

வாகனத்தில் கொண்டு வந்து அப்படியே கொட்டிவிட்டால் சுவராகாது. இது நம் எல்லோருக்குமே தெரியும்.

ஆனால், அவரவர் வாழ்க்கை என்று வருகிற போது மட்டும் உடனே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு தானே.

இதற்கான காரணம்.

சமுதாயத் தாக்கம் (SOCIAL IMPACT)  இதை கோயபல்ஸ் தத்துவம் என்றும் சொல்லலாம்.

ஒன்றைத் திரும்பத் திரும்ப எல்லாருமே சொன்னால், அது செயலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது என்பது தான் கோயபல்ஸ் தத்துவம்.

நாம் வாழும் இக்காலத்தில் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது. ஆட்சி முறை எப்படி இருக்கிறது? என்று பார்க்கலாம்.

நம் வீட்டிலுள்ள பெரியோர்கள் அவர்களது இளமைக்கால வாழ்க்கை எப்படி இருந்தது; அன்று ஆட்சி முறை எப்படி இருந்து என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். அல்லது இப்போதாவது கேளுங்கள்.

அன்று:

எளிய வாழ்க்கை

பொறாமைப்படாத வாழ்க்கை

பிறருடன் ஒப்பிடாத வாழ்க்கை

பிறர் வாழ்க்கையில் தலையிடாத வாழ்க்கை மக்கள் நலனில் அக்கரை செலுத்திய ஆட்சி சொத்து சேர்க்க மறுத்த ஆட்சியாளர்கள் சேவை உணர்வுடன் வேலை செய்த அதிகாரிகள் அரசுப் பணத்தை அளவுடன் மக்கள் உபயோகத்துக்கு மட்டுமே செலவு செய்தனர்.

இன்று:

ஆடம்பர வாழ்க்கை

பொறாமை படும் வாழ்க்கை

பிறருடன் ஒப்பிடும் வாழ்க்கை

உழைக்காமல் இலவசங்களுக்காக காத்திருக்கும் வாழ்க்கை

தேவையின்றி தன் கருத்தைக் கூறும் முந்திரிக் கொட்டை வாழ்க்கை

மக்களைப் பற்றியே அக்கரையில்லாத கட்சி ஆட்சி

சொத்து சேர்க்கவே அலையும் ஆட்சியாளர்கள்

சம்பளம் பெற்றும் ஏங்கும் அதிகாரிகள்

அரசுப் பணத்தை திட்டமிட்டு அபகரிக்கும் திட்டங்கள்

இது போல பட்டியலிடலாம். இதுவல்ல நமது நோக்கம்.

சூழ்நிலை எப்படி இருந்தாலும் இன்றைய இளைஞர் சமுதாயம் குறிப்பாக, குறிக்கோள்களில் தெளிவாக உள்ளோர், தங்களது குறிக்கோளை அடைவதற்காக என்ன முயற்சி செய்ய வேண்டும் எனத் தெளிவு பெற்று, அதனை செயல்படுத்த வேண்டும்.

பொதுவாக இன்றைக்கு நாம் எதிர் கொள்ளும் தடைகள் அன்றும் இருந்திருக்கலாம். அன்று மக்கள் மனம் அதிகமாக மாசு படாமல் இருந்ததால், தடைகளின் தாக்கம் குறைவாகவே இருந்திருக்கும்.

இன்று விஞ்ஞான முன்னேற்றம் அறிவாட்சித்தர உயர்வு இவற்றால் திட்டமிட்டு குறுக்கு வழியில் ஆதாயமடைந்து வாழ்பவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால், நேர்மையானவர்கள் இந்தச் சமுதாயத்தில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதே நிதர்சனம்.

முயற்சி என்பது என்ன?

அது எப்படி நம்மை முன்னேற்றும்.

காத்திருப்போம்

வாழ்க வளமுடன்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்