Home » Articles » சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்

 
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்


மாரிமுத்துராஜ் A.G
Author:

மனிதனிடம் இருக்கும்  நேர்மறையான, அல்லது எதிர்மறையான மனப்போக்கை மாற்றுவதன் மூலம், அவனிடம் அதுவரை இல்லாத ஒரு நிலையை இயக்கிக் காட்ட முடியும்.

உயர்ந்தவர்கள் அத்தனை பேருக்கும், ஒரு நிரந்தர அடையாளம் உண்டு என்பது வரலாறு நமக்கு உணர்தும் பாடமாகும். அந்த அடையாளத்திற்காக அவர்கள், எத்தனை, தியாகம், உழைப்பு மற்றும் காலத்தை அர்பணித்திருப்பார்கள். என்பது பிரமிக்கத் தக்கதாகும்.

உங்களுக்கு கீழ், மேல் மற்றும் சுற்றியுள்ள அனைவரும், உங்களை பிரமிப்புடன் பார்ப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள்,நாளடைவில் நீங்கள் அப்படியே ஆகிப் போய் விடுவீர்கள். ஏனென்றால், உங்களின், சிந்தனை, செயல், பேச்சு, மூச்சு அனைத்தும் மெல்ல மெல்ல, அப்படியே மாறிப்போய் விடும் இது சத்தியம்.

உங்கள் உலகத்தில் நீங்கள் எப்படி அடையாளம் காணப்படுகின்றீர்கள் என்பது மிக முக்கியம். ஆகையினால் உங்கள் அடையாளத்தை, நீங்கள் விரும்பியபடி வெளிப்படுத்துங்கள் அதன் பிரதிபலிப்பு உங்களை எப்போதும் சந்தோசப்படுத்தும்.

யாரும் நம்மை கண்காணிக்கவில்லை என எண்ணுபவனைத்தத்தான் எல்லோரும் காண்காணிக்கின்றனர்.

எல்லோரும் நம்மை காண்காணிக்கின்றனர். என எண்ணுபவனை எவனும் காண்காணிப்பதில்லை.

உங்களை நீங்கள் கேட்டுக்  கொள்ளுங்கள், யாருக்காக நாம் இங்கு வாழ வேண்டும்? எதை நிறுபிப்பதற்காக நாம் இயங்க வேண்டும்.

உங்களைப் பற்றி மற்றவரைக் காட்டிலும் நீங்கள் தெரிந்து கொண்டது எவ்வளவு?

மரியாதையை எதிர்பார்க்காத நபரே கிடையாது. அதை எத்தனை பேருக்கு நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்?

செயல்படுத்தல் ஒன்றை அத்தனைக்கும் தீர்வு, என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?

இகழ்ச்சி என்றைக்கும் ஆபத்தானது என்பது தெரியுமா?

தெரிந்தவருடனே உறவை வலுப்படுத்துகின்றோமா? தெரியாதவர்கள் உடன் ஏன் உறவு கொள்ள தயங்குகின்றோம்.

இந்த உலகில் கீழ்த்தரமானவர்களுக்குள்ளும் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும் தெரியுமா?

நாணப்படாது, நன்றி கூறுவதையும், தயவு செய்து என்ற வார்த்தையையும், பிரயோசிக்க தெரியுமா?

நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு கேட்கத் தெரியுமா?

இலட்சியத்தை எழுத்தில் இறக்கிவையுங்கள், உங்கள் கண்கள் அதை காணும் போதெல்லாம் அது உங்களை உந்தித் தள்ளும் தெரியுமா?

முடிந்த அளவு, கடன் பட உடன்படாதீர்கள்.

இணையற்ற துணைக்கு ஈடு ஏதுமில்லை

உங்கள் உயரத்தை, உச்சி முகர்ந்து கொண்டாடுபவரே உண்மையான நண்பன்.

எப்போது ஒன்றை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் மாற்றுவழியைத் தேர்ந்தெடுத்து வைத்திருங்கள்.

சுற்றியுள்ளவதில் சுபிச்சத்தை தேர்ந்தெடுங்கள்.

வெளிப்புறத்தை பார்த்து உடனடி முடிவுக்கு வராதீர்கள்.

நீங்களே உங்களுக்காண விளம்பரம் என்பதை மறவாதீர்கள்.

வெற்றி என்பது விடாமுயற்சியின் முடிவு.

உடல் உறுதி உள்ள போதே உங்கள் உயர்வை இறுதி செய்து விடுங்கள்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்