பழைய - புதிய நினைவுகள் - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை

Home » Articles » பழைய – புதிய நினைவுகள்

 
பழைய – புதிய நினைவுகள்


செல்வராஜ் P.S.K
Author:

புதியவனே! புதுமை செய்ய புன்னகையுடன் புயலாய்ப் புறப்படு!

கடந்தகால நினைவுகள் நடப்புக் காலத்தின் காலத்தினை விழுங்குபவை. நடப்புக்கால நினைவுகள்தான் நாளைய நாட்களை மலரச் செய்பவை என்பதை இன்றே இனிதே அறிந்துகொள்.

இது உனக்கு இனிமையான வாழ்க்கையைக் கொடுக்கும்.

பழையதையே நினைப்பவன் பின்னுக்கு முன்னேறுகிறான். புதியதையே நினைப்பவன் முன்னுக்கு முன்னேறுகிறான்.

நினைவுகளில் பழையது என்பது இறங்குவரிசை; புதியது என்பது ஏறு வரிசை.

உன் இலட்சியம் ஜனாதிபதியாக வேண்டும், கவிஞன் ஆக வேண்டும், தலைசிறந்த எழுத்தாளனாக வேண்டும், விஞ்ஞானியாக வேண்டும் என எதுவாகவும், எவ்வளவு பெரியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது நியாயமானது. ஆனால் அதன் மீது உனக்கு ஆழ்ந்த தன்னம்பிக்கை இருக்கவேண்டும். அந்த தன்னம்பிக்கை உன் இலக்கிற்கான மனிதர்கள், இடங்கள், விசயங்கள் எங்கெங்கிருக்கின்றதோ அங்கெல்லாம் பறந்து சென்று துடிப்புடன் செயலாற்ற வேண்டும். அப்பொழுதுதான் அது இறுதியில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கண்டிப்பாக நிறைவேறும்-கைகூடும். அதுவரை அதற்காக பொறுமையுடனும், விழிப்புடனும், அறிவுடனும், துணிவுடனும், தெளிவுடனும் ஓயாமல் பாடுபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

மண்ணின் மைந்தனே!

வீழ்ந்தாலும், சாய்ந்தாலும், விழுந்தாலும் துடிப்புடன் நொடியில் கம்பீரமாக உடனே எழுந்து நிற்கும் தஞ்சாவூர் பொம்மையைப் போன்ற உடல் அமைப்பினைப் பெறு. மன அமைப்பினைப் பெறு.

தன்னை நம்புகிறவன் வீழ்ந்தாலும் தானே எழுந்து நின்று பழைய நிலைக்கு வந்து  விடுவான். நம்பாதவன் வீழ்ந்தவுடன் தாழ்ந்து, ஒழிந்து புதைந்து விடுகிறான்.

தேளுக்கு வாலிலுள்ள கொடுக்கில் பலம்; பாம்புக்கு பல்லில் பலம்; ஜல்லிக்கட்டுக் காளைக்கு கொம்பில் பலம்; நாய்க்கு பல்லில் பலம்; யானைக்கு தும்பிக்கையில் பலம். இவைகளுக்கும் இவை போன்றுள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றில் பலம் உள்ளதைப்போல் மனிதனுக்கு தன்னம்பிக்கையில் தான் அவனது பலம் முழுவதுமாக உள்ளது. உடல் வலு உள்ளவர்களுக்கு இது இல்லையென்றால் அவ்வாறு வலுவற்றதாகிவிடும்.

ஒவ்வொரு உயிரினங்களும் தம்மை அழிவிலிருந்து காத்துக்கொள்ள அது அதற்குள்ள பலத்தை தற்காப்பாக வைத்துக் காத்து வருவதைப்போல் மனிதனுக்கும் அழிவில் இருந்து காத்துக்கொள்ள தற்காப்பாக இந்நம்பிக்கையே பயன்படுகிறது.

தன்னை நம்புகிறவனுக்குத்தான் நம்பிக்கையான சிந்தனைகள் வரும். அவனுக்கே அவனது சிந்தனையில் நம்பிக்கை இருக்கும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்