Home » Articles » இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்

 
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்


இராஜேந்திரன் க
Author:

எதிர்மறைமனநிலை (Oppositional deficient disorder)

வாலிப வயதில் மனதில் ஏற்படும் பல எதிர்மறைஎண்ணங்களால் தனக்குள் சுயகழிவிரக்கம், துக்கமான மனநிலை, தாழ்வு மனப்பான்மை இதனால் ஏற்படும் மனமாற்றம் இது.

போதையால் ஏற்படும் மனநிலை (Substance abuse disorder)

போதைப்பொருள் உபயோகப்படுத்தும் இளை ஞர்கள் மனச்சோர்வுடன் உள்ளனர். மனஅழுத்தம் உள்ள இளம்பருவத்தினர், போதைப் பொருட்களுக்கு எளிதில் அடிமையாகின்றனர். இதன் விளைவு குறுகிய காலத் திற்கே இருப்பதால், மீண்டும் மீண்டும் போதையைத் தேடிச் செல்கின்றனர். சிகிச்சை முறை

மருத்துவமனை

தற்கொலை எண்ணம் மற்றும் நோக்கம் இருக்கும் சூழ்நிலையில் உள்ள முதிர்ந்த வயதுள்ளவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பது உறுதியான காரணமாகும்.

நோக்கம்

 • அவர்களைப் பாதுகாப்பதற்காக,
 • தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து வெளி வரவும், மருத்துவமனையில் இருப்பது உதவியாக உள்ளது.
 • ஒருவேளை, போதைப் பொருள்களுக்கு உட்பட் டிருப்பின் மறுவாழ்விற்கும் மருத்துவமனையில் இருப்பது உதவி புரிகிறது.

மருத்துவ சிகிச்சை மற்றும் மனநோய் சிகிச்சை

சிந்திக்கத் தூண்டும் சிகிச்சை மற்றும் செலக்டிவ் செரடோனின் ரிஅப்டேக் இன்கிபிட்டார், மருந்துகள் இணைந்து தரும் மருத்துவம் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

சிந்திக்கத் தூண்டும் சிகிச்சையின் அவசியம்

 • நம்பிக்கை அளித்தல்
 • பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை அதிகரித்தல்
 • சமுதாயத்துடன் ஒன்றிப் போகுதல்

குழந்தைப் பருவத்திற்கும் விடலைப் பருவத்திற்கும் உபயோகிக்கப்படும் மருந்துகள்

 1. புளுஹெக்சிடின் (10 mg)
 2. செட்ராலின் (25 mg)
 3. சிட்லபிரம் (10 mg)
 4. புளுஹெக்சமின் (25-50 mg)

சிகிச்சைக்கான காலம்

சோர்வுற்ற நிலையை எதிர்க்கும் மருந்துகளை ஆரம்பத்தில் கொடுப்பதினால் பலன் நன்றாக இருப்பின், தொடர்நிலையில் கொடுத்து அவர்களின் பிரச்சனைகள் குறையும் நிலையில் நிறுத்தி விடலாம்.

மன அழுத்த நோய் (Dysthymic Disorder)

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மனநிலையில் அழுத்தமும், கோபஉணர்ச்சியும் அதிகநேரம் மற்றும் பலநாட்கள் அல்லது வருடங்களாக இருக்கும்பொழுது மனஅழுத்த நோய் என்றழைக்கிறோம்.

DSM-ஐயன் முறைப்படி கீழ்க்காணும் அறிகுறிகளில் குறைந்தபட்சம் நோயாளிக்கு மூன்று அறிகுறியாவது இருக்க வேண்டும்.

 • தாழ்வு மனப்பான்மை
 • நம்பிக்கையின்மை
 • ஆர்வமின்மை
 • சமூகத்திலிருந்து விலகி இருத்தல்
 • நீண்டநாள் சோர்வு
 • குற்றஉணர்வு
 • இறந்தகாலச் சிந்தனை
 • அதிகபட்ச கோபம்
 • குறைந்தபட்ச செயல்பாடு
 • ஞாபகமறதி (or) கவனமின்மை

மேற்காணும் அறிகுறிகள் குறையாமல் இரண்டு மாதத்திற்கு மேல் இருந்து கொண்டே இருக்கும். மேலும் இம்மனஅழுத்தம் பெரிய அளவில் மன அழுத்தத்தை உருவாக்கும்.

சிறிய அளவில் மன அழுத்தம் ஏற்படும்பொழுது குறைந்தபட்சம் மூன்று மாதம் இருக்கும். இது ஒருவகையான அனுசரிப்புத்தன்மை இல்லாத குறைபாடு ஆகும். படபடப்பு நோய் பிரச்சனை (Anxiety disorder)

வலி போன்றே, மனிதன் உயிர் வாழ படபடப்பும் ஒரு பாதுகாப்புக்கான உடலின் செயல்பாடு ஆகும். சுற்றுப்புறத்தில் ஏதாவது ஆபத்து நேரிட்டால் ஒரு மனிதனுக்குப் படபடப்பு நேரிடும். இது சாதாரணமான ஒரு செயல்தான். ஆனால் அந்த படபடப்பு அதிகமானாலோ, படபடப்பு ஏற்படாமல் இருந்தாலோ இதுவே நோயின் அறிகுறி ஆகும்.

படபடப்பு ஏற்படுவது சாதாரணமாக ஒரு பாதுகாப்பு முறையாகும். ஆனால் அளவுக்கு அதிகமான படபடப்பு தொடர்ந்து இருந்தால், சமூக வாழ்வு, உடல்நலம் மற்றும் கல்வித்திறனைக் கூட பாதிக்க நேரிடும். தேர்வு நேரங்களில் படபடப்பு ஏற்படுவதும், காதலர்கள் தினத்தன்று எதிர்பார்ப்புகள் அதிகமாவதும் ஒத்துக்கொள்ளக்கூடிய விஷயம் தான். ஆனால், அதுவே அதிகமானால், கல்லூரிக்கு செல்வதும் தொடர்ந்து உடல்நலனைக்கூட பாதிக்க நேரிடும். பொதுவாக இளைஞர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக அதிகமான படபடப்பு வகைகள் உள்ளன. ஒவ்வொரு படபடப்பு பிரச்சனையும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வினாலோ, அல்லது பல பிரச்சனைகளினாலோ நேரிடலாம். சில படபடப்பிற்கான காரணம் என்ன என்று அறிய முடியவில்லை.

சமூக பயம்

இன்றைய இளைஞர்களில் அதிக அளவில் படபடப்பு பிரச்சனை ஏற்படக் காரணம் சமுதாயச் சூழ்நிலைகள். அதனால் அவ்வாறு பயப்படும் இளைஞர்கள் சமுதாயத்தில் நடக்கக்கூடிய நிகழ்வுகளில் பங்கேற்க முடிவதில்லை. அவர்கள் மனஅழுத்தம் மற்றும் பலவிதமான தொந்தரவுகளினாலும் எண்ணங்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

மேற்கூறிய காரணங்களினால், தேவையில்லாத பயத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் அவர்கள் பயத்தை வெளியே காட்டமாட்டார்கள். அவர்களின் செயல்களின் மூலம் பயம் வெளிப்படுத்தப்படும். அவர்கள் பள்ளிக்குச் செல்ல மறுப்பார்கள். அவர்களால் குழுவில் இணைந்து செயல்படமுடியாது. தனிமையை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

தூக்கமின்மை, கனவு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் உடல் மற்றும் மனரீதியான தொல்லைகள் நேரிடலாம். வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுவலி தேவையற்றசொல்ல முடியாத வலி போன்றபிரச்சனைகள் நேரிடும்.

 • எந்த பரிசோதனை மூலமும் இதன் தன்மையை அறிய முடியாது.
 • தொடர்ந்து அவர்கள் முறையான வாழ்க்கை மேற்கொண்டு சாதகமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதால் மட்டுமே இவ்விதமான பயத்தை சரிபடுத்த முடியும்
 • குடும்பக் கல்வி முறை, மனம் மற்றும் சமுதாய தேவைகளைச் சரிபடுத்துதல் மற்றும் மருத்துவமுறையினால் கட்டுப்படுத்த முடியும்.

கட்டாயப்படுத்தும் மனஉளைச்சல் நோய்

(Obsessive Compulsive Disorder)

ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி மிகைப்படியாக எண்ணிக் கொண்டிருக்கிற மற்றும் அதற்காக ஒன்றைச் செய்யுமாறு தன்னைத்தானே கட்டாயப்படுத்தக்கூடிய ஒழுங்கற்றநிலை

தேவையற்ற ஒன்றைப் பற்றி அடிக்கடி நினைப்பதால் கவலை மற்றும் அச்ச உணர்வு உண்டாகும். அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதால் மனநிலை மற்றும் உடல்நிலையில் இருக்கக்கூடிய கவலை மற்றும் அச்ச உணர்வு விடுபடும். இந்த நிலை குழந்தை பருவத்தில் மற்றும் வாலிப பருவத்தில் உண்டாகும். இந்த எண்ணம் தேவையற்றது என்பதை இந்த எண்ணத்தைக் கொண்டவர் அறியவில்லை.

பொதுவாக, தேவையற்ற எண்ணங்களாக அழுக்கு, கிருமி மற்றும் வியாதி இருப்பதாக இவர்களுக்குத் தோன்றும். இதனால் இந்நோய் உள்ளவர்கள் திரும்பத் திரும்ப கவனிப்பது, சுத்தம் செய்தல் மற்றும் நேராகப் பொருளை வைப்பது என்று செய்து கொண்டே இருப்பார்கள்.

இதற்கான சிகிச்சை மருந்துகள் மற்றும் பழக்கத்தை மாற்றக்கூடிய பயிற்சி.

மனநிலையினால் மற்றும் உடல்நிலையில்

ஏற்படக்கூடிய ஒழுங்கற்றநிலை (Psychosomatic disorder)

எப்பொழுதும் நம்முடைய வியாதி நம்முடைய உடல்நிலையைச் சார்ந்ததாக இருக்கும். எப்பொழுது நம்முடைய வியாதிக்கு நம்முடைய உடலில் பிரச்சினைகள் தோன்றுவதில்லையோ அப்போது மனநிலைக்கான சிகிச்சையை ஆராய வேண்டும்.

சில எடுத்துக்காட்டுகள் தொண்டை அடைத்துக் கொள்ளுதல், சுவாசம் எடுப்பதற்குக் கஷ்டம், எழுதுவதற்குக் கஷ்டம், உடலின் பகுதி இயங்காமல் இருப்பது ஆகியவை எந்தக் காரணமும் இன்றி இருந்தால் மனநோய்க் காரணங்களை ஆராய வேண்டும்.

முடிவுரை

மனநிலை பாதிப்பை வாலிப வயதில் கண்டுபிடிப்ப தற்குக் குழந்தைப் பருவத்திலே அறிந்து அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். மருந்துகள் 6 முதல் 9 மாதம் வரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திற்குக் கல்வி மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதால் இந்த ஒழுங்கற்ற நிலையைக் குணப்படுத்த முடியும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2018

கண்கள் காட்டும் கல்லீரல் காதல்
மூன்று முடிச்சை அவிழுங்க, ஸார் !!
முயற்சியே முன்னேற்றம்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 10)
சுயமுன்னேற்ற தத்துவ முத்துக்கள்
கானக சங்கமம்
பழைய – புதிய நினைவுகள்
ஒரு தீக்காடு; உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்
பிப்ரவரி மாத உலக தினங்கள்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
பாயும் ஆறு
ஒத்தி வைக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது எப்படி?
வெற்றி உங்கள் கையில் – 50
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்- தொடர்ச்சி- 3
வாழ நினைத்தால் வாழலாம் – 12
தன்னம்பிக்கை மேடை
உண்மையாய் உழைத்திடு… உயர்வில் பெயரெடுத்திடு…
உள்ளத்தோடு உள்ளம்