Home » Articles » நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)

 
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)


முருகார்த்திக்
Author:

இதுவரை மரபுத் தொகையியலில் (Genomics) உள்ள பல்வேறு அடிப்படை கருத்தமைவுகளை (concepts) பார்த்தோம். இனி மனிதன் மற்றும் அவன் வாழ்வாதாரத்திற்கு தேவையான உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கும் பல்வேறு உயிரினங்களின் அறிவியல் கட்டமைப்புகளை காண இருக்கிறோம். முதலில் நாம் மனிதனின் மரபுத்தொகை (Human Genome) பற்றி சற்று விரிவாக காணலாம்.

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 99.9 சதவீதம் ஒத்த (identical) அல்லது ஒரே மாதிரியான மரபு பண்புகளை (Genetic) கொண்டிருக்கும். மிகச்சிறிய அளவில் (0.01%) மரபணுவில் வேற்றுமை இருக்கும். ஆனால் இந்த மரபணு வேற்றுமை மிகபெரிய அழுத்தத்தை மனிதரிகளில் உண்டாக்கும். உதாரணமாக மனித உயரம் (Height), நிறம் (Colors), புத்திசாலித்தனம் (Intelligence), மனப்போக்கு (Attitude மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் (Disease resistance) என காணத்தகு வேறுபாட்டுக்கு இந்தசிறிய அளவு மரபு மாறுபாடே காரணம். எனவே மனித டி.என்.எ.களை (DNA) முழுவது மாக வரிசைபடுத்துவதன் (Sequencing) மூலம் இத்தகைய வேறுபாடுகளை கண்டறியலாம்.

மேலும் இதன் மூலம் மனிதனின் உடலியல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கும், பிரச்சனைகளிலும் தீர்வுகாண இயலும். இதுவே மனித மரபாகராதி திட்டத்திற்கு வித்திட்டது. 1990-ஆம் ஆண்டு உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியால் மனித மரபாகராதி  திட்டம் ஆரம்பிக்கப்பட்டது .இந்த திட்டம் முடிவடைய கிட்டதட்ட பதினைந்து ஆண்டு காலம் ஆகும் என கணிக்கப்பட்டது. ஏனென்றால் அப்போதைய காலகட்டத்தில் ஆராய்ச்சியாளர்கள் குறைந்தது பத்து வருடம் அல்லது தனது வாழ்க்கை முழுவதையும் செலவழித்தாலும் வெறும் கையளவு நீளம் கொண்ட டி.என்.எ.களை வரிசைபடுத்த முடிந்தது. ஒருநோய்க்கான டி. என். எ. வேறு பாட்டையும் அதை கொண்டுள்ள ஜீனையும் கண்டுபிடிக்க ஏறத்தாழ பதினைந்து முதல் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆகவே, மனித மரபகராதி திட்ட முடிவுக்காக உலக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதுவே மரபு தொகையியல் (Genomics) தொடக்கத்திருக்கும் காரணமாக அமைந்தது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!